5. திருவரங்கத்து மாலை - 83/114 :திரு எட்டு எழுத்து - பெரிய திரு மந்திரம்

நம் பெருமாள் எழுத்து எட்டின் பெருமை நவிலுமதோ
சம்பரன் மாயம் , புரோகிதர் சூழ்வினை , தார் அணி வாள்
வெம் படை , மாசுணம் , மா மத வேழம் , விடம் , தழல் , கால் ,
அம்பரமே முதலானவை பாலகனுக்கு அஞ்சினவே

பதவுரை :

சம்பரன் மாயம் சம்பராசுரன் செய்த மாயையும் ,
புரோகிதர் சூழ்வினை புரோஹிதர்கள் செய்த செயல்களும் ,
தார் அணி வெற்றி மாலை அணிந்த
வாள் வெம் படை வாள் முதலிய கொடிய ஆயுதங்களும் ,
மாசுணம் மா மத வேழம் பெரிய பாம்புகளும் , பெரிய மத யானைகளும் ,
விடம் தழல் கால் நஞ்சும் , அக்கினியும் , காற்றும் ,
அம்பரமே முதலானவை கடல் முதலியவைகளும்
பாலகனுக்கு அஞ்சினவே எட்டெழுத்தை உச்சரித்த பிரஹலாதனுக்கு பயந்தது என்றால்
நம் பெருமாள் நம் பெருமாள் உடைய
எழுத்து எட்டின் பெருமை எட்டு எழுத்தின் பெருமை
நவிலுமதோ நம்மால் சொல்ல முடியுமோ ( முடியாது)

V.SridharDear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends