Announcement

Collapse
No announcement yet.

விவேகசிந்தாமணி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • விவேகசிந்தாமணி

    பி்ள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொற்புத்திக் கேளான்கள்ளின்நற் சொல்லாள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள்தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால் உலகர்பண் டிதரைத் தேடார்.

    கருத்துரைகுடும்பத்தில் பிள்ளைக்கு வயது அதிகமாகிவிட்டால், அவன் தந்தையின் சொல்லையும் அவர்கூறும் புத்திமதியையும் கேட்கமாட்டான். 'தோளுக்கு மிஞ்சினால் தோழன்' என்பது பழமொழி. தேன்போன்ற இனிமைமிகுந்த சொல்லாளாகிய மனைவி, அதாவது கணவனிடம் இதுநாள்வரை இனிமையாகப் பேசிய மனைவியும், அவனு்க்கு வயது முதிர்ந்தால் அவனைக் கருதியும் பார்க்கமாட்டாள். குருவிடம் தெளிவாக அனைத்தையும் கற்றுக்கொண்டுவிட்டான் என்றால், அந்த மாணவனும் குருவைத் தேடமாட்டான். தமக்குள்ள நோய்கள் எல்லாம் தீர்ந்து போனால் உலகத்திலுளளார் மருத்துவரைத் தேடமாட்டார்கள்.

  • #2
    Re: விவேகசிந்தாமணி

    ஆயிரமாண்டுகளுக்கு முன்பே சொன்னான் சாலமன் “எண்ணையும் இன்றி திரியும் இன்றி தலைகீழாக எரியும் விள்க்குகள் வருமென்று”

    Comment

    Working...
    X