5. திருவரங்கத்து மாலை - 84/114 : ஸ்ரீ துவாதசாக்ஷர மஹா மந்த்ரம்

அத்தா !அரங்கத்து அமர்ந்தவனே ! எழுத்து ஆறு இரண்டின்
வித்து ஆய நின் அருள் கொண்டு அல்லவோ - விளைவு ஒன்று அறிய
உத்தான பாதன் மகன் சலியாது , உலகு உள்ளளவும் ,
எத தாரகைக்கும் முனிவர்க்கும் மேல் சென்று , இருக்கின்றதே ?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபதவுரை :

அத்தா !அரங்கத்து அமர்ந்தவனே ! தலைவனே ! திரு அரங்கத்தில் இருப்பவனே !
விளைவு ஒன்று அறியா செய்யும் காரியத்திற்கு உண்டாகும் பலனை அறியாத
உத்தான பாதன் மகன் உத்தான பாதன் மகன் ஆன துருவன்
சலியாது சஞ்சலம் இல்லாமல்
உலகு உள்ளளவும் உலகம் உள்ள வரையும்
எத் தாரகைக்கும் முனிவர்க்கும் எல்லா நக்ஷத்திரங்களுக்கும் , ரிஷிகளுக்கும்
மேல் சென்று இருக்கின்றதே மேலான இடத்தில் போய் இருப்பது
எழுத்து ஆறு இரண்டின் ஸ்ரீ துவாதச மஹா மந்திரத்தின்
வித்து ஆய விதை ஆகிய
நின் அருள் கொண்டு அல்லவோ உனது கருணையினால் அன்றோ ?

V.Sridhar