Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 89/114 : ஆதி சேஷன்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 89/114 : ஆதி சேஷன்

    5. திருவரங்கத்து மாலை - 89/114 :ஆதி சேஷன்

    அரங்கர்க்கு அனந்தனே அனைத்தும் !

    சென்றால் குடை ஆம் ; கடல் புணை ஆம் ; திருத் தீவிகை ஆம் ;
    நின்றால் இரு திருப் பாதுகை ஆம் ; நித்திரைக்கு அணை ஆம் ;
    குன்றா மணி ஒளி ஆசனம் ஆம் ; புனை கோசிகை ஆம்
    அன்று ஆலிலையில் துயில் அரங்கேசர்க்கு அரவு அரசே


    பதவுரை :


    அன்று பிரளய காலத்தில்
    ஆலிலையில் துயில் ஆலிலையில் யோகநித்திரை செய்த
    அரங்கேசர்க்கு திரு அரங்க நாதனுக்கு
    அரவு அரசே திரு அனந்தாழ்வான் ஆன ஆதி சேஷன்
    சென்றால் குடை ஆம் உலா வரும் போது குடை ஆகும் ;
    கடல் புணை ஆம் கடலில் உறங்கும் போது மெத்தை ஆகும் ;
    திருத் தீவிகை ஆம் பார்க்கும் போது மங்கள தீபம் ஆகும் ;
    நின்றால் இரு திருப் பாதுகை ஆம் நிற்கும்போது ஸ்ரீ பாதுகை ஆகும் ;
    நித்திரைக்கு அணை ஆம் உறங்கும்போது திரு அணை ஆகும் ;
    குன்றா மணி ஒளி ஆசனம் ஆம் அமரும்போது பிரகாசமான சிம்மாசனம் ஆகும் ;
    புனை கோசிகை ஆம் உடுத்தும்போது அழகிய வஸ்த்ரம் ஆகும்


    V.Sridhar
    Last edited by sridharv1946; 19-12-13, 21:12.
Working...
X