Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 94/114 : ஸ்ரீ வைகுண்டம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 94/114 : ஸ்ரீ வைகுண்டம்

    5. திருவரங்கத்து மாலை - 94/114 : ஸ்ரீ வைகுண்டம்

    தொல்லைக் கமடத் தலம் , நவ கண்டம் , தொடு கடல் நீர் ,
    எல்லைக்கிரி , தனக்கு இப்புறத்து எண்கிரி , அப்புறத்தின்
    மல்லைப் பரிதியின் மண்டலம் , நாகம் , அவ்வான் முகட்டு ஊர் ;
    அல் , அப் புறத்து வைகுந்தம் - பொற்கோயில் அரிக்கு இடமே

    பதவுரை :

    தொல்லைக் கமடத் தலம் முதலில் ஆதி கூர்மம் தாங்கும் கீழ் உலகம் ;
    நவ கண்டம் அதன் மேல் ஒன்பது கண்டங்கள் ;
    தொடு கடல் நீர் அவற்றைச் சுற்றி கடல் நீர் ;
    எல்லைக்கிரி அவற்றைச் சூழ்ந்த சக்ரவாள பர்வதம் ;
    தனக்கு இப்புறத்து எண்கிரி அதற்கு இப்புறத்தில் எட்டு குல பர்வதங்கள் ;
    அப்புறத்தின் அதற்கு மேலே
    மல்லைப் பரிதியின் மண்டலம் வட்டமான சூரிய மண்டலம் ;
    நாகம் அதன் மேல் சுவர்க்க லோகம் ;
    அவ்வான் முகட்டு ஊர் அதற்கு உச்சியில் சத்ய லோகம் ;
    அல் அதற்கு மேல் இருட்டு ;
    அப் புறத்து வைகுந்தம் அதற்கு மேல் உள்ள ஸ்ரீ வைகுண்டம் எனும் நகரம்
    பொற்கோயில் அரிக்கு இடமே ஸ்ரீ ரங்கத்தில் இருக்கும் அரங்கனுக்கு தலம் ஆகும்


    V.Sridhar







Working...
X