உபநயனம் என்றால் ப்ரும்மத்திற்கு சமீபத்தில் ஆச்சார்யன் சிஷ்யனை அழைத்துச்செல்லுதல் என்று அர்த்தம்.

1 .இந்த சுப திதியில் இன்ன நக்ஷத்திரத்தில் இன்ன ராசியில் பிறந்தவனும் இன்ன சர்மா என்ற பெயருடையவனுமாகிய இந்த குமாரனுக்கு உப.நயன கர்மாவின் அங்கமாக உதக சாந்தி ஜப கர்மாவை செய்கிறேன்.

2. அங்குரார்பண கர்மாவை செய்கிறேன் .(பாலிகை)
3. ப்ரதிஸரபந்த கர்மாவை செய்கிறேன். (கையில் கயிறு கட்டுதல்).
4. நாந்தி முக பித்ரு தேவதைகளுக்கு ப்ரீதி கர்மா செய்கிறேன்..

இவ்வாறு ஸங்கல்பித்து பூர்வாங்க கர்மாக்களை முடித்து விட்டு உபநயன
கர்மாவை ஆரம்பிக்க வேன்டும். .

வேதத்தை கற்பதற்கு வேத விதிப்படி செய்ய வேன்டிய ஸம்ஸ்காரம் உபநயனம் எனப்படும். எந்த கர்மாவில் ஆசாரியனால் வேத வித்தைக்காக நல்ல முஹூர்தத்தில் மாணவன் தன்னருகில் கூட்டிக் கொள்ளபடுகிறானோ அதற்கும் உபநயனம் எனப்பெயர்.

தாயிடம் முதல் பிறப்பும், உபநயனத்தின் போது மெளஞ்சி பந்தனத்தால்
இரண்டாம் பிறப்பும் ஏற்படுவதால் த்விஜர்கள் என் அழைக்கபடுவர்.

உபநயன ஸ்தானத்தில் ஸ்த்ரீகளுக்கு விவாஹம் கூறப்பட்டுள்ளது.

ஞானமின்றி உபநயனம் செய்து வைப்பவனும் உபநயனத்தால் ஞானத்தை நாடாதவனும் இருளிலிருந்து இருளிலேயே புகுவர் என் வேதம் கூறுகிறது.

புண்யாஹ வசனம்.;- பூமியை பசுஞ்சாணியால் மெழுகி அதன் மேல் நெல்லை பரப்பி அதன் மேல் அரிசியை பரப்பி அதன் மேல் பித்தளை சொம்பில் தண்ணீர் ஊற்றி மாவிலை, தேங்காய, கூர்ச்சம் வைத்து பவித்ரமணிந்து ,தர்பையிலமர்ந்து ஸங்கல்பம் செய்க

.மங்கள கரமான இந்த திதியில் ஆத்ம சுத்திக்காகவும் எல்லா உபகரணங்களின் சுத்திக்காகவும் சுத்தி புண்யாஹவசனம் செய்கிறேன்.என்று சங்கல்பித்து தென் மேற்கு திக்கில் தர்பையை போட்டு விட்டு ஜலத்தை தொடவும்

ப்ரதிஷ்டை செய்த கும்பத்தில் இமம் மே வருண:, தத்வாயாமி என்ற இரு மந்திரங்களால் வருண தேவனை ஆவாஹணம் செய்க. .பிறகு ஆஸனம், பாத்யம்,அர்க்யம், ஆசமணீயம், ஸ்நானம், ஸ்நானத்திற்கு ஆசமணியம், வஸ்த்ரம், உபவீதம், சந்தனம், குங்குமம், அக்ஷதை, புஷ்ப அர்ச்சனை, தூபம், தீபம், நைவேத்யம்,,தாம்பூலம், கற்பூரம், மந்திர புஷ்பம், ஸுவர்ண புஷ்பம்.
இவ்வாறு 16 உபசாரங்கள் செய்க.

பிறகு நான்கு ப்ராமணர்களை இந்த புண்யாஹவசன கர்மாவில் உங்களை ருத்விக்காக இருக்க ப்ரார்திக்கிறேன். என்று ஜபத்திற்கு அனுமதி பெற வேண்டும்.

. உங்களால் அநுமதிக்க பெற்று புண்யாஹ வசனம் செய்விக்கிறேன். அங்ஙணமே மந்திர ஜபம் செய்யலாம்.என்று அவர்கள் அனுமதி கொடுக்க வேண்டும்..

இக்கர்மாவுக்கு இது சுப தினம் என்று நீங்கள் கூறியருளுதல் வேண்டும் என ப்ரார்த்தனை. எல்லா உபகரணங்களுக்கும் சுத்தி பெரும் காரியங்களுக்கு நீங்கள் ஆசி கூறுதல் வேண்டும்

.எல்லாம் குறைவின்றி பரிபூர்ணமாக நடக்க ஆசி; இந்த நாள் மங்களம் நிறைந்த நாள் என ஆசி; இந்த கர்மா மங்களமானதென ஆசி; சாந்தியும், புஷ்டியும், ஸந்தோஷமும், நிறைவும், விக்கினமின்மையும், ஆயுளும், ஆரோக்கியமும் கூடியிருக்கட்டும்;

அக்னி திக்கில் என்ன தீங்கு உன்டோ அது அழியட்டும். எல்லா சம்பத்துகளும் கூடியிருக்கட்டும். எல்லா மங்களங்கலும் கூடியிருக்கட்டும். இவை அனைத்தும் ஒருங்கே அமைய ப்ராமணர்கள் ஆசீர்வதிக்க வேண்டும். பின்னர் ப்ராமணர்களுடன் பவமான மந்திரங்கள் ஜபிக்க பட வேண்டும்..

ஜபித்து முடிந்தவுடன் தத்வாயாமி ப்ருஹ்மணா வந்தமானஸ் ----------ப்ரமோஷி; என்ற மந்திரத்தால் வருணனை யதாஸ்தானம் செய்ய வேண்டும்.

கும்பத்திலிருந்து ஜலம் எடுத்து ப்ரோக்ஷிக்க வேன்டும். தீர்த்தம் உட்கொள்ளுதல் .

3. யக்ஞோபவீத தாரணம். இந்த சுப திதியில் , இன்ன நக்ஷதிரத்தில் இன்ன ராசியில் பிறந்தவனும் இன்ன சர்மா என்ற பெயர் கொண்டவனும் ஆன இந்த குமாரனுக்கு உபநயனம் செய்விக்கிறேன் என ஸங்கல்பம்.

இந்த குமாரனுடைய உபநயன கர்மாவில் பூணல் சுத்தியின் பொருட்டு புண்யாஹ வசனம் செய்கிறேன். என்று ஸங்கல்பித்து புண்யாஹ மந்திர ஜபம் செய்து அந்த தீர்தத்தால் பூணலை ப்ரோக்ஷித்து பெரியோர்களின் ஆசி பெற்று மாணவனுக்கு மெளனமாய் ஆசமனம் செய்விக்க.

இந்த சுப திதியில் இன்ன நக்ஷதிரத்தில் இன்ன ராசியில் பிறந்தவனும் இன்ன சர்மா என்ற பெயர் கொண்டவனுமான இந்த குமாரனுக்கு ஸ்ருதிகளிலும்
ஸ்மிருதிகளிலும் விதிக்கப்பெற்ற நித்திய கருமங்களை

அனுஷ்டிக்கும் தகுதி ஏற்படுவதற்காகவும் பிரம்ம தேஜஸ் விருத்தி அடைவதற்காகவும் பூணலை அணிவிக்கிறேன் என்று ஸங்கல்பித்து , கிரகங்களுக்கு ப்ரீதியாக தானம் செய்க.

ஆசாரியன் தன் கைகளையும் குமாரன் கைகளுடன் சேர்த்து பூணலை பிடித்து மந்திரத்தை குமாரனும் கூட சொல்லியே தரித்துக்கொள்ள செய்ய வேண்டும்..

பரிசுத்தியளிக்க கூடியவற்றுள் சிறந்ததும் ஆதியில் ப்ருஹ்மா தோன்றும் போதே அவருடன் தோன்றியதும் , ஆயுளையும் முதன்மையையும் அளிக்க கூடியதுமான வெண்மையான பூணலை தரிக்கிறேன். ஞான ஒளியும் பலமும் இதனால் நிலை பெற வேண்டும்.

மெளனமாக ஆசமனம். யக்ஞோபவீத தாரண வேளை நல்ல வேளையாக இருக்க வேண்டும் என்று பெரியோர்கள் அனுக்கிரஹத்தை ப்ரார்த்திக்க, அவர்கள் நல்ல முஹூர்த்தமாக அமையட்டும் என ஆசீர்வதிக்க வேண்டும்..

பூணலை அதற்குறிய மந்திரத்தை மாணவனை சொல்லச்செய்து அவனுக்கு போட வேண்டும். குமார போஜனத்தில் காயத்ரியை சொல்லி ஆசாரியனே ப்ரோக்ஷிக்க வேன்டும் என்று செளனகர் கூறி உள்ளார்.
4. குமார போஜனமும் வபனமும்.
செளளம் ====குடுமி வைத்தல். மூன்றாவது வயதில் செய்ய வேன்டிய கர்மா.இது. இதற்கு பூர்வாங்கமாக உதக சாந்தி, அங்குரம், ப்ரதிசரம், நாந்தி இவைகளை செய்து முடித்து செளளம் செய்யவேண்டும்.

இப்போது உப்பு, புளி, காரம் இல்லாமல் ஆஹாரம் செய்து வைக்க வேன்டும். .ஸங்கல்பம் :-இன்ன நக்ஷதிரம், ராசியில், பிறந்த, பெயர் சர்மா உள்ள குழந்தையை செளள ஸம்ஸ்காரம் உள்ளவனாக செய்கிறேன்.

பிறகு உபநயனத்தின் போது மறுபடியும் ஆஹாரம், வபனம் உண்டு இப் போது பொங்கல், கருவடம், குழம்பு சாப்பிட வேண்டும். உபநயனத்தின் போது குமார போஜனம்

என்று இரு அல்லது ஒரு ப்ருஹ்மசாரிக்கு வஸ்த்ரமளித்து கூட உட்கார்ந்து சாப்பிட சொல்கிறோம். ஆனால் சாஸ்திரம் உப்பு புளிகளை சேர்க்க வேண்டாம் என்று கூறுகிறது.

ஆதலால் உபநயனத்தன்று செளளமும் சேர்த்து செய்ய வேண்டுமென்றால் இரண்டு முறை வபனம் இரண்டு முறை ஆஹாரம் செய்ய வேன்டும். . இம்மாதிரி நேரும் போது முதல் முறை சக்கரை,நெய்,பால், ஆகிய இவைகளால் போஜனம் செய்வித்து வபன மந்திரத்தை மாத்ரம் சொல்ல வேண்டும்.

பிராமணர்கள் உத்திரவு பெற்று விக்னேஸ்வர பூஜை செய்யவும். சங்கல்பம் செளள கர்மா செய்விக்கிறேன் என்று.விகேஸ்வர யதா ஸ்தானம், போஜனம்.

லெளகீக அக்னியை ப்ரதிஷ்டை செய்து வடபுறம் பாத்ர ஸாதனம் செய்யும்போது உஷ்ண ஜல பாத்ரம், சீதள ஜல பாத்ரம், தர்ப்பை, நெல் தான்யம், தர்பை கதிர், காளை மாட்டு சாணி, முள்ளம்பன்றி முள், , கத்தி இவைகளை மற்றவைகளுடன் சாதனம் செய்ய வேண்டும். ஆஜ்ய பாகம் வரையிளுள்ள பூர்வாங்கத்தை ((முகாந்தம்)) செய்து முடிக்க வேண்டும்.

குமாரனை தொட்டுக்கொண்டே தாதா ததாது முதல் 4 யஸ்த்வா முதல் 4 மந்த்ரங்களை கூறி ஹோமம் செய்ய வேண்டும். மந்த்ரார்த்தம்:-- தாதா,

ஈசானன் எங்களுக்கு செல்வத்தை தரட்டும். இஷ்டத்தை பூர்த்தி செய்யட்டும். ப்ரஜை முதலியவைகளை அளிக்கும் தாதாவே உலகத்தை படைத்தவர். அவரே யஜமானனுக்கு புத்ரனை அளிப்பவர் அவருக்கு ஹவிஸ்ஸை தருகிறோம். அவர், முன்னோர்களுக்கு தந்தது போல் எங்களுக்கும் செல்வம் தரட்டும். அவர் ஸத்ய ஸந்தர். பக்தரிடம் அன்பு கொண்ட அவரை த்யானம் செய்வோம். மற்ற அமரரும் நம் வீட்டில் அமரட்டும்.

யஸ்த்வா---ஹே அக்னே, அமராரன உம்மை மனதோடு துதிக்கிறேன். உண்ண உணவை தாரும். நற்கர்மாவை செய்பவருக்கு ஸுகத்தை அளிக்கிறீர். ஹே இந்த்ரா. உம்மிடம் விரும்பதக்க பொருள்கள் இருக்கின்றன.

உம்மை விட உயர்ந்தவர் யாரும் இல்லை. யக்ஞத்தில் ஸோமரஸம் உம்மை சந்தோஷ படுத்தட்டும்.
கஷ்டம் வரும் போது எல்லோரும் உம்மை சரணடைகிறார்கள்.

இந்த எட்டு ஹோமங்களும் ஆனப்பிறகு ஜயாதி ஹோமம் செய்ய வேண்டும்.
பிறகு அக்னியை பரிசேஷனம் செய்து , சமியை நீக்கி அக்னிக்கு மேற்கே , கிழக்கு முகமாக குழந்தையை உட்கார வைத்து பாத்ரத்துடன் ஸாதனம்

செய்த முள்ளம்பன்றி முள், தர்பைகளை எடுத்து இவைகளால் க்ஷவரம் செய்ய வேண்டிய மயிரை ஒதுக்க வேண்டும், உஷ்ணேன என்ற மந்திரம் கூறி, உஷ்ண ஜலத்தை சீதள ஜலத்துடன் சேர்க்க வேண்டும்.

மந்த்ரார்த்தம்----உஷ்ணேன---ஹே வாயு தேவனே, உஷ்ணமான ஜலத்தை கொன்டு வாரும். அதிதி தேவதை கேசங்களை வபனம் செய்யட்டும். குழந்தையினுடைய தலையை ஜலம் நனைக்கட்டும்

. இவன் 116 வருஷம் ஜீவித்திருக்கட்டும். நன்கு ப்ரகாசிக்கவும், நீண்ட காலம் கண் பார்வை கெடாமல் ஜலம் அருள் புரியட்டும் .வாயு தேவனும் அதிதி தேவதையும் அநுமதி கொடுக்க வேண்டி இவ்வாறு சொல்கிறோம்,

குமாரன் தலையை கீழ்திசை முதல் பிரதக்ஷிணமாக நனைக்க வேண்டும்..

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends