Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 96/114 : திருப் பாற்கடல்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 96/114 : திருப் பாற்கடல்

    5. திருவரங்கத்து மாலை - 96/114 : திருப் பாற்கடல்

    காவும் , சுரபியும் , சிந்தாமணியும் , கடிக் கமலப்-
    பூவும் , பணிலமும் , பொங்குஇள மாவும் , புகர்த் தடக் கைம்-
    மாவும் , பிறையும் , அமுதமும் , எங்ஙன் - மதில் அரங்கர்
    மேவும் தரங்கக் கடல் இல்லை ஆகில் , இவ் விண்ணகர்க்கே ?

    பதவுரை :

    மதில் அரங்கர் மேவும் ஏழு மதில்கள் சூழ்ந்த திரு அரங்கத்தில் இருக்கும் நம்பெருமான்
    தரங்கக் கடல் பள்ளி கொள்ளும் அலைகள் உடைய திருப்பாற்கடல்
    இல்லை ஆகில் இல்லை என்றால்
    இவ் விண்ணகர்க்கே இந்த தேவ லோகத்திற்கு
    காவும் சுரபியும் கற்பகச் சோலையும் , காம தேனுவும் ,
    சிந்தாமணியும் சிந்தாமணி எனும் ரத்தினமும் ,
    கடிக் கமலப்பூவும் மணம் உடைய தாமரை மலர் பெயருள்ள பதும நிதியும் ,
    பணிலமும் சங்க நிதியும் ,
    பொங்கு இள மாவும் விளங்கும் இளைய உச்சைஸ்ரவஸ் எனும் குதிரையும் ,
    புகர்த் தடக் கைம்மாவும் செம்புள்ளிகள் கொண்ட பெரிய துதிக்கை உள்ள ஐராவதமும் ,
    பிறையும் அமுதமும் சந்திரனும் , அமுதமும்
    எங்ஙன் எங்கிருந்து கிடைக்கும் ?


    V.Sridhar

    Last edited by sridharv1946; 22-12-13, 21:57.
Working...
X