Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 101/114 : அரங்கன் திருக் கைĨ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 101/114 : அரங்கன் திருக் கைĨ

    5. திருவரங்கத்து மாலை - 101/114 : அரங்கன் திருக் கைகள் சொல்லும் செய்தி !

    கதிர் ஆரும் நீள் முடி சேர்ந்த கைப் போது "எக்கடவுளர்க்கும்
    அதி ராசன் ஆனமை காண்மின் " என்றே சொல்லும் ; ஆய பொன் மா

    மதில் ஆர் அரங்கர் பொற்றாள் ஆர் திருக் கரம் "மற்று இதுவே
    சதுரானன் முதல் எல்லா உயிர்க்கும் சரண்" என்னுமே

    பதவுரை :

    ஆய பொன் மா மதில் ஆர் பொன்னால் ஆகிய பெரிய மதில்கள் சூழ்ந்த
    அரங்கர் திரு அரங்க நாதருடைய
    கதிர் ஆரும் நீள் முடி சேர்ந்த ஒளி நிறைந்த நீண்ட முடியை ஒட்டி உள்ள
    கைப் போது தாமரை போன்ற வலத் திருக்கையானது
    எக்கடவுளர்க்கும் அதி ராசன் "எல்லா தேவர்களுக்கும் இவன் தலைவன்
    ஆனமை காண்மின் ஆன தன்மையைப் பாருங்கள்"
    என்றே சொல்லும் என்று உரைக்கும்
    பொற்றாள் ஆர் திருக் கரம் அழகிய திருவடிகளை ஒட்டி இருக்கும் இடத் திருக்கரம்
    மற்று இதுவே "இந்தத் திருவடிகளே
    சதுரானன் முதல் நான்கு முகம் உடைய பிரம்மா முதல்
    எல்லா உயிர்க்கும் எல்லா ஜீவ ராசிகளுக்கும்
    சரண் என்னுமே புகலிடம்" என்று சொல்லும்

    V.Sridhar

Working...
X