Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 102/114 : அரங்கனே வியூஹ வாசĬ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 102/114 : அரங்கனே வியூஹ வாசĬ

    5. திருவரங்கத்து மாலை - 102/114 : அரங்கனே வியூஹ வாசுதேவன் !

    மோகத் துயில் புரி மெய் போலக் கண்ட முறையினனுக்கு , இங்கு
    ஏகத் திரு உரு என்று அறிந்தேன் - இந்திரையை யை அன்போடு
    ஆகத்து வைத்து அருள் தென் அரங்கா ! அங்கும் இங்கும் ஒக்கப்-
    போகத்துக் கொண்ட பண நாகம் ஒன்று பொறுத்த பின்னே

    பதவுரை :

    இந்திரையை திரு மகளை
    அன்போடு ஆகத்து வைத்து அன்புடன் தனது திரு மார்பில் வைத்து
    அருள் தென் அரங்கா அருளும் தென் அரங்கா !
    அங்கும் இங்கும் ஒக்க திருப் பாற்கடலிலும் , திருவரங்கத்திலும் ஒரு சேர
    போகத்துக் கொண்ட தனது உடலின் மேல் கொண்ட
    பண நாகம் ஒன்று படங்களை உடைய ஆதி சேஷன்
    பொறுத்த பின்னே தாங்கிய பின்பு
    மோகத் துயில் பொய்யான யோக நித்திரையை
    மெய் புரி போலக் கண்டமுறையினனுக்கு மெய்யான துயில் போல செய்யும் தன்மைக்கு
    இங்கு ஏகத் திரு உரு இரண்டும் ஒரே உருவமே
    என்று அறிந்தேன் என்று அறிந்தேன்

    V.Sridhar

Working...
X