Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 106/114 : பொன் மேனி நெடும் கட

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 106/114 : பொன் மேனி நெடும் கட

    5. திருவரங்கத்து மாலை - 106/114 : பொன் மேனி நெடும் கடலே நிகர்க்கும் !

    கைத்து பழவினை ; தித்திக்க , என் தன கருத்தின் உள்ளே ;
    பைத் துத்தி மெத்தையின் மீதே துயிலும் - பைங்கேழ் எறிந்து
    மைத்து , குளிர்ந்து , மதுரித்து , மெத்தென்று , மா மணத்து ,
    நெய்த்து , புகர்ந்து , நிகர்க்கும் பொன் மேனி நெடும் கடலே

    பதவுரை :

    பைங்கேழ் எறிந்து பசுமை நிறமான ஒளியை வீசி ,
    மைத்து குளிர்ந்து மை போல் கருத்து , குளிர்ந்து ,
    மதுரித்து மெத்தென்று இனியதாகி , மென்மையாய் ,
    மா மணத்து நெய்த்து மிக்க மணம் வீசப் பெற்று , பளபளப்பு கொண்டு ,
    புகர்ந்து கபில நிறம் உடையதாய் ,
    நிகர்க்கும் இவை எல்லாம் ஒத்திருக்கும்
    பொன் மேனி பொன் போன்ற திருமேனியை உடைய ,
    நெடும் கடலே பெரிய கடல் ஆன நம் பெருமாள்
    கைத்து பழவினை பழைய இரு வினைகளையும் போக்கி ,
    தித்திக்க என் தன கருத்தின் உள்ளே என் மனத்தில் இனிக்கும்படி ,
    பைத் துத்தி படங்களையும் புள்ளிகளையும் உடைய ,
    மெத்தையின் மீதே ஆதி சேஷன் எனும் படுக்கையின் மேலே ,
    துயிலும் யோக நித்திரை செய்து அருள்வார்

    V.Sridhar

    Last edited by sridharv1946; 24-12-13, 21:10.
Working...
X