5. திருவரங்கத்து மாலை - 111/114 : உன் சரணம் ஒழிந்து , இல்லை வேறு சரணம் !

கரணம் தவிர்ந்து , விழி போய்ச் சுழன்று , கலங்கும் என் தன்
மரணம் தனில் வந்து உதவு கண்டாய் - கொற்ற வாளி ஒன்றால்
அரணம் கடந்தவன் காணா அரங்க ! என் ஆர் உயிர்க்கு உன்
சரணம் , சரணம் ; ஒழிந்து இல்லை வேறு , இத் தராதலத்தே

பதவுரை :

கொற்ற வாளி ஒன்றால் வெற்றியை உடைய ஒரு அம்பினால்
அரணம் கடந்தவன் முப்புரங்களை வென்ற சிவனாலும்
காணா அரங்க காண முடியாத அரங்கனே !
என் ஆர் உயிர்க்கு எனது அருமையான உயிர்க்கு
உன் சரணம் ஒழிந்து உன் திருவடிகளை அன்றி
வேறு சரணம் இத் தராதலத்தே இல்லை வேறு அடைக்கலம் இவ்வுலகில் இல்லை ;
கரணம் தவிர்ந்து ஆதலால் நான் கரணங்கள் நிலை குலைந்து
விழி போய் கண் பார்வை மழுங்கி
சுழன்று கலங்கும் மனம் சுழன்று கலங்குகின்ற
என் தன் மரணம் தனில் எனது மரண காலத்தில்
வந்து உதவு கண்டாய் வந்து என்னை காத்து அருள்வாயாக !Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsV.Sridhar