மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?
எப்போதும் சிரித்த முகம்.
மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
காலையில் முன் எழுந்திருத்தல்.
பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் உணவு தயாரித்தல்.
நேரம் பாராது உபசரித்தல்.
கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
அதிகாரம் பண்ணக் கூடாது.
குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
கணவனை சந்தேகப்படக் கூடாது.
குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்து ழைக்க வேண்டும்.
தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த எதிர்பார்ப்புக்கள் ஒவ்வொன்றையும் மனைவி பின்பற்றும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. மனைவியின் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தானாகவே நிறைவேறும். பின்பற்றித்தான் பாருங்களே உங்களுக்கே எல்லாம் புரியும். ?
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
எல்லாம் சரிதான் ஆனால் இது ஒரு வழிப் பாதையாக அல்லவா அமைந்துள்ளது. கணவன் மனைவி இடமும் மனைவியின் உறவு காரர் களிடமும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. எனெவே இது ஒரு வழிப் பாதையாக உள்ளது. இது ஆண் ஆதிக்கத்தைத்தான் காட்டுகிறது.
டி ஆர் கிருஷ்ணன்
Bookmarks