Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 002/104 : காப்பு - 2/2

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 002/104 : காப்பு - 2/2

    6. திரு வேங்கட மாலை 002/104 : காப்பு- 2/2

    மூலமே என்ற கரி முன் வந்து , இடர் தொலைத்து ,
    நீல மேகம் போல் நின்றானைப் - பால் ஆய
    வேலை நடுவில் துயிலும் வித்தகனை , வேங்கடத்து
    மாலை அன்றிப் பாடாது என் வாய்

    பதவுரை :

    மூலமே என்ற "ஆதி மூலமே" என்று முறையிட்ட
    கரி முன் வந்து கஜேந்திரன் எனும் யானை முன்னால் எழுந்தருளி
    இடர் தொலைத்து முதலையினால் அந்த யானைக்கு உண்டான துன்பத்தை நீக்கி ,
    நீல மேகம் போல் நீல நிறம் உள்ள மேகம் போல் காட்சி தந்து ,
    நின்றானை நின்று அருளியவனும் ,
    பால் ஆய வேலை நடுவில் பால் மயமான கடலின் நடுவே
    துயிலும் வித்தகனை யோக நித்திரை செய்யும் ஞான ஸ்வரூபனும் ஆன
    வேங்கடத்து மாலை அன்றி திருமலையில் இருக்கும் திருமாலை அல்லாமல்
    பாடாது என் வாய் வேறு யாரையும் என் வாய் பாடித் துதிக்காது



    V.Sridhar
Working...
X