Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 008/104 வேங்கடமே பரனார் விருப&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 008/104 வேங்கடமே பரனார் விருப&#

    6. திரு வேங்கட மாலை 008/104 வேங்கடமே பரனார் விருப்பு !

    பாணி , பிறை , கொன்றை , பணி சூடி , மான் ஏநதி
    வேணியானைப் பொருவும் வேங்கடமே - ஆணி நிறப்-
    பீதாம்பரனார் பிரமர் வாழ் அண்டம் கண்
    மீதாம் பரனார் விருப்பு

    பதவுரை :

    பாணி பிறை நீரையும் , சந்திரனையும் ,
    கொன்றை பணி சூடி கொன்றையையும் , பாம்பையும் மேலே கொள்வதாலும்
    மான் ஏநதி மானைத் தரித்தலாலும்
    வேணியானைப் பொருவும் வேங்கடமே சிவனைப் போல் இருக்கும் வேங்கடமே ,
    ஆணி நிறப் பீதாம்பரனார் பொன் நிறம் உள்ள பீதாம்பரத்தை உடுத்தியவரும் ,
    பிரமர் வாழ் அண்டம் கண் மீதாம் பிரமர் வாழும் சத்ய லோகத்திற்கு மேலே உள்ள
    பரனார் பரம பதத்தில் இருக்கும் திருமாலுக்கு
    விருப்பு விரும்பி இருக்கும் இடம் ஆகும்

    V.Sridhar

    Last edited by sridharv1946; 28-12-13, 19:47.
Working...
X