அங்குரார்பணம் மற்றும் ப்ரதிஸரபந்தம். பரிசேஷணம்.
அனுக்ஞை= பர்மிஷன். விக்னேஸ்வர பூஜை செய்து விட்டு சங்கல்பம்.

கையில் அக்ஷதை எடுத்துக்கொண்டு சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.

ஒம்பூஹு. ஓம்புவஹ ஒகும் சுவஹ. ;ஒம்மஹ; ஒம்ஜன; ஒம் தப: ஓகும் சத்யம் ஒம் தத்ச விதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத்.ஓமாப ; ஜ்யோதிரஸ: அம்ருதம் ப்ருஹ்மா ஒம் பூர்புவஸுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அத்ய
பூர்வோக்த ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் --------சுபதிதெள--------நக்ஷத்ரே--------ராசெள ஜாதஸ்ய------------------சர்மண: மம

குமாரஸ்ய கரிஷ்யமான உபநயன கர்மாங்க பூத அங்குரார்பண கர்ம கரிஷ்யே.. ஜலம் தொட்டு ததங்கம் பஞ்சபாலிகா சுத்யர்த்தம் சுத்தியர்த்த ஸ்வஸ்தி புண்யாஹவாசனம் கரிஷ்யே. புன்யாஹாவசனம் செய்யவும்.

ஒரு தட்டில் ஐந்து பாலிகைகளை கொன்டு வந்து அதன் அடியில் அருகம் பில். அரச இலை, வில்வ இலை போட்டு வெண்மை நிறமுள்ள நூலாலும் சுத்தமான மண்களால் அதை நிரப்பவும். புண்யாஹவாசனம் செய்த ஜலத்தால்

ஐந்து பாலிகைகளில் கூர்ச்சத்தால் வ்யாஹ்ருதியை கூறி ப்ரோக்ஷணம் செய்து நடுவில் ஒரு பாலிகையும் அதற்கு நான்கு பக்கத்திலும் நான்கு பாலிகை வைக்கவும். பாலிகைகளுக்கு பரிஸ்தரணம் தர்பையால் அமைக்கவும்.

மத்ய (நடு) பாலிகையில்:ஓம். பூஹு ப்ரஹ்மாணம் ஆவாஹயாமி ஓம் புவ; ப்ரஜாபதிம் ஆவஹயாமி. ஓம். ஸுவ: ஹிண்யகர்ப்பம் ஆவாஹயாமி. ஓம். பூர்புவஸ்சுவ: சதுர்முகம் ஆவாஹயாமி. ப்ரம்ஹணா நம: இதமாசனம்.

பூர்வ(கிழக்கு) பாலிகையில் ஓம் பூஹு இந்த்ரம் ஆவாஹயாமி.; ஓம் புவ: வஜ்ரிணம் ஆவாஹயாமி; ஓகும் ஸுவ:சதக்ரதும் ஆவாஹயாமி; ஓம் பூர்புவஸுவ: சசீபதிம் ஆவாஹயாமி. இந்த்ராய நம: இதமாஸனம்.


தக்ஷிண (தெற்கு) பாலிகையில் ஓம் பூஹு யமம் ஆவாஹயாமி; ஓம் புவ; வைவச்வதம் ஆவாஹயாமி; ஓகும் ஸுவ: பித்ருபதிம் ஆவாஹயாமி.;
ஓம் ஸுவ; பூர்புவஸ்ஸுவ: தர்மராஜம் ஆவாஹயாமி; யமாய நம: இதமாசனம்.

பஸ்சிம (தெற்கு) பாலிகையில் ஓம்பூஹு வருணம் ஆவாஹயாமி; ஓம். புவ: ப்ரசேதஸம் ஆவாஹயாமி ; ஓகும் ஸுவ: ஸுரூபிணம் ஆவாஹயாமி. ஓம் பூர்புவஸ்ஸுவ: அபாம்பதிம் ஆவாஹயாமி. வருணாய நம: இதமாஸனம்.

உத்தர (வடக்கு) பாலிகையில் ஓம்பூஹு ஸோமம் ஆவாஹயாமி; ஓம். புவ; இந்தும் ஆவாஹயாமி. ஓகும் சுவ: நிசாகரம் ஆவாஹயாமி. ஓம். பூர்புவஸ்ஸுவ: ஓஷதீசம் ஆவாஹயாமி. ஸோமாய நம: இதமாஸனம்.

ப்ரஹ்மாதிப்யோ நம: பாத்யம் ஸமர்ப்பயாமி;; ப்ருஹ்மாதிப்யோ அர்க்யம் ஸமர்ப்பயாமி, ப்ரஹ்மாதிப்யோ ஆசமனீயம் ஸமர்பயாமி; ப்ருஹ்மாதிப்யோ நம: ஸ்நானம் சமர்ப்பயாமி; என்று சொல்லி ஆபோஹிஷ்டா என்ற மூன்று
மந்திரங்களாலும், ஹிரண்வர்ணா என்ற நான்கு ருக்குகளாலும் பவமான என்ற அனுவாகத்தாலும் கூர்ச்சத்தால் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நானாந்திரம் ஆசமனியம் சமர்ப்பயாமி. ப்ரஹ்மாதிப்யோ நம: வஸ்த்ரானி சமர்பயாமி;

ப்ரஹ்மாதிப்யோ நம: உபவீதம், ஆபரணம், சமர்பயாமி; ப்ரஹ்மாதிப்யோ நம: கந்தம் சமர்பயாமி; ; ப்ரஹ்மாதிப்யோ கும்குமம் அக்ஷதான் சமர்பயாமி; ப்ரஹ்மாதிப்யோ நம: புஷ்ப மாலாம் சமர்பயாமி. ப்ரஹ்மாதிப்யோ நம:

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபுஷ்பை: பூஜயாமி. ப்ருஹ்மாதிப்யோ நம: இந்த்ராதிப்யோ நம: யமாதிப்யோ நம:வருணாதிப்யோ நம: ஸோமாதிப்யோ நம: ப்ருஹ்மாதிப்யோ நம; நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்பயாமி.
ப்ரஹ்மாதிப்யோ தூபம் ஆக்ராபயாமி; ப்ரஹ்மாதிப்யோ நம: தீபம் தரிசயாமி.

ப்ரஹ்மாதிப்யோ நம: நைவேத்யம் நிவேதயாமி; ப்ரஹ்மாதிப்யோ நம: தாம்பூலம் சமர்பயாமி .ப்ருஹ்மாதிப்யோ நம: கற்பூர நீராஜனம் தர்சயாமி. ப்ரஹ்மாதிப்யோ நம: மந்திர புஷ்ப ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி; ஸமஸ்தோப சாரான் ஸமர்பயாமி.

அங்குரார்பணத்திற்காக வைத்துள்ள தானிய கலவை பாத்திரத்தில் பால் சேர்த்து அதை இடது கையில் எடுத்துக்கொண்டு வலது கையால்

மூடிக்கொண்டு நின்று கொண்டு திசாம்பதீன் நமஸ்யாமி சர்வ காம பல ப்ரதான் குர்வந்து ஸபலம் கர்ம குர்வந்து ஸததம் சுபம். என்று ஸ்தோத்ரம்.உபஸ்தானம் செய்யவும்
.
ஓஷதீ ஸூக்த-ஜப கர்மணி ருத்விஜம் த்வாம் வ்ருணே என்று நான்கு ருத்விக்குகளை வரித்து ((ருத்விக்குகள் இரட்டை படையில் இருக்க வேன்டும்)) ஓஷதீ ஸூக்த ஜபம் குருத்வம் என்று வேண்டிக்கொள்ளவும்.

வலது கையால் ருத்விக்களுக்கு அக்ஷதை போடவும்.
வயம் குர்ம: என்று பதில் சொல்லி விட்டு யாஜாதா ஓஷதயோ++++++++பாரயாமஸி என்ற அனுவாகத்தை ஜபிக்க வேண்டும்

யஜமானன் நின்று கொன்டவாறே ஜபம் செய்யலாம்.அல்லது காயத்ரி ஜபம் செய்யலாம்.ஜபத்திற்கு பிறகு அமர்ந்து கொண்டு பாலிகைகளில் விதை இடல்.

ஜபம் ஆன பின் அவர்களுக்கு தக்ஷிணை தரவும்.பாலிகா தான்யங்கள்.:- நெல், உளு.ந்து, எள், கடுகு, பச்சைபயறு. முதல் நாள் காலையிலேயே ஊர வைத்து விடவும்.

( நடு) ப்ருஹ்ம பாலிகா:- ப்ரஹ்ம ஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விஸீமத; ஸுரூசோ வேன ஆவ: ஸ புத்னியா உபமா அஸ்ய விஷ்டா: ஸதஸ்ச யோனி மஸதஸ்ச விவ:. பிதாவிராஜாம் ருஷபோ ரயீணாம் அந்த்ரிக்ஷம்

விச்வரூப: ஆவிவேச. தமர்கை: அப்யர்ச்சந்தி வத்ஸம் ப்ரம்ஹ ஸந்தம் ப்ரம்ஹ்ணா வர்தயந்த: ப்ருஹ்மாதிப்யோ நம; அயம் பீஜா வாப: என நடு பாலிகையில் ஒரு தடவை மந்திரத்துடனும் இருமுறை மெளனமாகவும் தானியங்களை கூர்ச்சத்தை கையில் வைத்துக்கொண்டு போடவும்...

(கிழக்கு)இந்திர பாலிகா:- யத இந்திர பயாமஹே ததோ ந: அபயம் க்ருதி மகவன் சக்தி தவ தன்ன: ஊதயே வித்விஷோ: விம்ருதோ ஜஹி. ஸ்வஸ்திதா விசஸ்பதி வ்ருத்ர:ஹா விம்ருதோவசி வ்ருஷேந்த்ர: புர ஏது ந

: ஸ்வஸ்திதா அபயங்கர: இந்த்ராதிப்யோ நம: அயம் பீஜாவாப: என ஒரு தடவை மந்திரத்துடனும் இரு முறை மெளனமாகவும் கூர்ச்சத்தை கையில் வைத்துக்கொண்டு தானியங்களை போடவும்.

(தெற்கு) தர்ம ராஜ பாலிகை.:- இமம் யம: ப்ரஸ்தர மாஹிஸீதாங்கிரோபி: பித்ருபி:
ஸம்விதான: ஆத்வா மந்த்ரா: ப்ரவிசஸ்தாவஹந்து;ஏனாராஜன் ஹவிஷா மாதயஸ்வ யமாதிப்யோ நம: அயம் பீஜா வாப: என தெற்கில் உள்ள பாலிகையில் ஒரு தடவை மந்திரத்துடனும் இரு தடவை மெளனமாக கூர்ச்சத்தை கையில் வைத்துக்கொன்டு போடவும்.

( மேற்கு). வருண பாலிகா. இமம் மே வருண ச்ருதீஹவம் அத்யாச ம்ருடயா த்வாமவஸ்யு ராசகே தத்வாமி ப்ருஹ்மணா வந்தமான: ததாசாஸ்தே யஜமானோ ஹவிர்பிஹி அஹேட மானோ வருனே இஹபோதி

உரிசகும் ஸமான ஆயு: ப்ரமோஷீ; வருணாதிப்யோ நம: அயம் பீஜாவாப: என மேற்கில் உள்ள பாலிகையில் ஒரு தடவை மந்திரத்துடனும் இரு தடவை மெளனமாகவும் கூர்ச்சத்தை கையில் வைத்துகொண்டு தானியத்தை போடவும்.
.. ( வடக்கு) குபேர பாலிகை. ஸோமோதேனும் ஸோமோ அர்வந்தமாசும் ஸோமோ வீரம் கர்மண்யம் ததாது. ஸாதன்யம் விதத்யம் ஸபேயம். பிது:: ச்ரவணம் யோ ததாசத் அஸ்மை ஆப்யாய ஸ்வஸமே துதே விச்வத:

ஸோம வ்ருஷ்ணியம். பவா வாஜஸ்ய ஸங்கதே. ஸோமாதிப்யோ நம: அயம் பீஜா வாப: என வடக்கில் உள்ள பாலிகையில் ஒரு தடவை மந்திரதுடனும் இரு முறை மெளனமாகவும் கூர்ச்சத்தை கையில் வைத்துக்கொண்டு போடவும்.

தானியங்களை போட்டப்பின் ப்ரணவத்தால் ( ஓம் என ) மந்தரித்து ஒவ்வொரு பாலிகையும் தொட்டு பிறகு 5 அல்லது 7 மடிசார் கட்டிய சுமங்கலிகளை தானியங்களையும் பாலையும் கையில் கூர்ச்சத்தை

வைத்துகொண்டு மூன்று மூன்று முறை பாலிகைகளில் போட ச்சொல்லவும்.சுமங்கலிகளானால் குழந்தை உள்ளவர்களாகவு,ம் பஹிஷ்டை நீங்காதவர்களாகவு மிருக்க வேன்டும் பத்து வயது கன்யைகளையும் (பூப்பெய்தாத) போடச்சொல்லலாம்..

தான்ய கலவையிலுள்ள பாலை மட்டும் ஸுமங்கலிகள் போட வேண்டும் என்றும் சிலர் பழக்கம். முதலில் மத்தியில், பிறகு ப்ரதக்ஷிணமாக கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்றபடி பாலை மட்டும் கூர்ச்சத்தால் தெளிக்கவும் .

சுமங்கலிகள், விழாநாயகர் பல காலம் மழலை வளமும் வன வளமும் செழிக்க வேன்டும் என வாழ்த்துவர்.

சுமங்கலிகளுக்கு தாம்பூலம் தக்ஷிணை மஞ்சள் குங்குமம் புஷ்பம் கொடுக்கவும்.

பின்பு மண்ணால் விதைகளை மூடி பாலிகைகளை பத்திரமாக வைத்து பிறகு ஆற்றில் அல்லது குளத்தில் பவ்யமாக விதைகளை விடவும். முளைத்த நாற்றுகள் கருகாமல் கால்களில் மிதிப்பட்டு சீரழியாமலுமிருக்க உறுதி

செய்திடவே அவை நீரில் கரைக்க படுகின்றன.. கரை ஒரங்களில் எங்காவது ஒதுங்கி வேரூன்றி செழிக்கட்டுமே என்ற நற்சிந்தனையே பாலிகைகளை இவ்வாறு கரைப்பதின் நோக்கம்..