Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 009/104 : வேங்கடமே அந்தரத்தான்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 009/104 : வேங்கடமே அந்தரத்தான்

    6. திரு வேங்கட மாலை 009/104 : வேங்கடமே அந்தரத்தான் சார்பு !

    மாலாய் சசி தழுவி வச்சிரம் ஏந்திப் புகர் மா
    மேலாய் புரந்தரன் ஆம் வேங்கடமே - நாலாய்க்-
    கிளர் வாகு மந்தரத்தான் கேட்டு அமரர் வேட்டுத்-
    தளர் வாகு மந்தரத்தான் சார்பு

    பதவுரை :

    மாலாய் இந்திரன் மால் என்னும் பெயரைக் கொண்டு ,
    ( பெருமை உடைய வேங்கடம் எனும் மலையாய் )
    சசி தழுவி இந்திராணியைக் கூடி ,
    (சந்திரன் தன் மேலே தகும்படி இருக்கும்)
    வச்சிரம் ஏந்தி வஜ்ராயுதத்தை கையில் கொண்டு ,
    (வஜ்ரம் போன்ற ரத்தினக் கற்களை உடையதாய் )
    புகர் மா மேலாய் செம்புள்ளிகளை உடைய ஐராவதம் எனும் யானை மேல் ஏறும்
    (செம்புள்ளிகளை உடைய யானைகள் த
    ன் மேல் ஏறும்)
    புரந்தரன் ஆம் வேங்கடமே இந்திரன் போன்ற வேங்கட மலையே
    நாலாய்க் கிளர் நான்காய் விளங்குகின்ற
    வாகு மந்தரத்தான் மந்தர மலை போன்ற பெரிய தோள்களை உடையவனும் ,
    அமரர் கேட்டு வேட்டு தேவர்கள் தனது புகழைக் கேட்டு , தாம் செல்ல விரும்பி
    தளர் வாகும் அது முடியாததால் ,தளர்ச்சி அடைவதற்குக் காரணமும் ஆன
    அந்தரத்தான் பரம பதத்தில் வாழும் திருமால்
    சார்பு சார்ந்திருக்கும் இடம்

    V.Sridhar

    Last edited by sridharv1946; 31-12-13, 19:50.
Working...
X