ஶ்ரீ:
தமிழில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு
ஒரு கவின் தமிழ் ஆர்வத் தூண்டல்!
அடியேனுடைய நண்பன் ஒரு புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தான், அவனுக்குக் கீழ்க்கண்டவாறு பதில் வாழ்த்து அனுப்பினேன். வரிகளின் முதல் எழுத்து உயிரெழுத்து வரிசையில் அமையவேண்டும். ஆர்வமுள்ளவர்கள் இதுபோல் முயற்சி செய்து பார்க்கலாமே!
"அன்பா
ஆர்வலா
இன்பம்
ஈண்டினேன்
உமக்கும்
ஊழியான்
எண்ணிலா
ஏற்றமீய
ஐயனை
ஒருகணம்
ஓதி வாழ்த்தினேன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!!"

கடந்த ஆண்டு அடியேன் இடுகைகளுக்கு, பதிலிருத்த, உபயோகமானதென தெரிவு செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை நல்குகிறேன்.
தாஸன்
என்.வி.எஸ்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends