எண்ணிய எண்ணியாங்கு எய்துப...
ஶ்ரீ:

ஒரு ஆங்கில மேற்கோள் வாக்கியம் -
"At the same time, You can't achieve your dream it is usually
not because your dream it is too big, but because you have no dream".
உங்கள் கனவை எட்ட முடியாததற்கு உங்கள் கனவு அடைய முடியாத அளவிற்கு பெரியது
என்பது பெரும்பாலும் காரணமாக இருக்க முடியாது,
மாறாக, உங்களிடம் கனவே இல்லை என்பதே காரணமாக இருக்கும்".
-இதுதான் அந்த ஆங்கில வாக்கியத்தின் பொருள்.
இதை வாசித்தபோது அடியேனுக்கு இந்த திருக்குறள்தான் ஞாபகத்திற்கு வந்தது.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப
எண்ணியர் திண்ணியராகப் பெரின்" - திருக்குறள்.

எண்ணம் உறுதியாக இருந்தால், எண்ணியதை எப்படியும் அடையலாம் என்கிறார் வள்ளுவர்.

உங்கள் எண்ணம் உறுதியானதாகவும், நல்லதாகவும் இருந்தால் அது உங்கள் காலத்திற்கு பிறகாவது நிறைவேறும் என்கிறார் ஓர் அறிஞர். அதற்கு உதாரணமாக:
ஶ்ரீவில்லிபுத்தூரில் ஒரு பட்டாசாரியாரின் பெண்ணாக அவதரித்த ஆண்டாளுக்கு
அரங்கனுக்கு 100 அண்டா நிறைய வெண்ணை, 100 அண்டா நிறைய அக்காரவடிசல்
செய்து ஸமர்ப்பிக்கவேண்டும் என்று ஆசை.
அதை ஆண்டாள் இவ்வாறு வெளிப்படுத்தினாள்:
"நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு - நான்
நூறு தடா நிறைந்த வெண்ணை வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங் கொலோ"!
என்றாள்.
அதாவது, அவள் விரும்பியதை அவளாள் நிஜத்தில் செய்ய முடியாது என்பதால்,
வாய்நேர்ந்து பராவி, சொன்னேன் என்றறெல்லாம் (துளசியைக் கிள்ளிப்போட்டு மறா நைவேத்யம் நிவேதயாமி என்பதுபோல்) சொல்கிறாள். ஆனால் அவற்றை நிஜத்தில் ஸமர்ப்பிக்கவேண்டும்
என்பது அவளது திண்ணமான ஆசை.
ஒரு முறை ஶ்ரீமத் ராமாநுஜர் இந்த பாசுரத்தை கேட்கும்போது,
ஆண்டாளின் உள்ளக்கிடைக்கையை உண்மையாக்க வேண்டும்
என்று அவருக்குப் பட்டது. எனவே, அவள் ஆசைப்பட்டதுபோல,
நூறு நூறு அண்டாக்களில், வெண்ணையும், அக்காரவடிசிலும் ஸமர்ப்பித்தார்
என்பது வரலாறு.
எனவே, ஒருவருடைய எண்ணம் திண்ணமானதாக இருந்தால் நிச்சயம் அது அவருடைய
காலத்திற்குப் பிறகாவது கண்டிப்பாக நிறைவேறும்.

குறிப்பு:- மாற்றுக் கருத்து இருந்தால் பதிவு செய்யலாம்.
சும்மாச் சொன்னேன்) என்கிறாள்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends