6. திரு வேங்கட மாலை 013/104 : வேங்கடமே பாண்டு மகன் இரதப் பாகனார் ஊர் !

மாண்டு பிறக்கும் துயர் போய் வைகுந்தம் புக்கவரும்
மீண்டு தொழக் காதலிக்கும் வேங்கடமே - பாண்டு மகன்
ஏறு இரதப்பாகனார் , ஏத்தும் அடியார் நாவில்
ஊறு இரதப்பாகனார், ஊர்

பதவுரை :

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஏறு இரதப்பாகனார் - ஏறு இரதப் பாகனார்
ஊறு இரதப்பாகனார் - ஊறு இரதப் பாகு அனார்,

மாண்டு பிறக்கும் இறந்து , மறுபடியும் பிறப்பு எடுக்கும்
துயர் போய் துன்பம் நீங்கி
வைகுந்தம் புக்கவரும் பரம பதத்தை அடைந்தவரும்
மீண்டு தொழக் காதலிக்கும் அங்கிருந்து மீண்டு வந்து வணங்க விரும்பும்படி உள்ள
வேங்கடமே வேங்கடமே ,
பாண்டு மகன் ஏறு பாண்டுவின் மகனான அர்ஜுனன் ஏறிய
இரதப் பாகனார் தேரை செலுத்தும் சாரதி ஆனவரும் ,
ஏத்தும் அடியார் நாவில் தம்மைத் துதிக்கும் பக்தர்களுடைய நாவில்
ஊறு இரதப் பாகு அனார் சுரக்கும் சுவை உள்ள பாகு போன்றவருமான
ஊர் திருமாலினது ஊர்

V.Sridhar