6. திரு வேங்கட மாலை 015/104 : வேங்கடமே காரின் வடிவாகனத்தான் வரை !

தெள்ளியது ஓர் வீடு அருளும் சீர் கேட்டு , பொன் மலையும்
வெள்ளி மலையும் பணியும் வேங்கடமே - புள்ளின்
கொடிவாகனத்தான் ; குளிர்ந்த இருண்ட காரின்
வடிவாகனத்தான் ; வரை

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபதவுரை :

கொடிவாகனத்தான் - கொடி + வாகனத்தான்
வடிவாகனத்தான் - வடிவு + ஆகன் + நத்தான்

தெள்ளியது ஓர் வீடு தெளிவுள்ள ஒப்பற்ற பரம பதத்தை
அருளும் சீர் கேட்டு கொடுத்து அருளும் சிறப்பைக் கேள்விப் பட்டு
பொன் மலையும் பொன் மயமான மஹா மேருவும் ,
வெள்ளி மலையும் வெள்ளி மயமான கைலாயமும்
பணியும் வேங்கடமே வணங்குகின்ற வேங்கடமே
புள்ளின் பறவை அரசன் ஆகிய கருடனை
கொடி வாகனத்தான் கொடி ஆகவும் , வாஹனம் ஆகவும் உடையவனும் ,
குளிர்ந்த இருண்ட காரின் குளிர்ச்சி உடைய கரிய மேகத்தின்
வடிவு ஆகன் வடிவு போன்ற திருமேனி கொண்டவனும் ,
நத்தான் பாஞ்ச ஜன்யம் எனும் சங்கத்தை உடையவனுமான திருமாலின்
வரை மலை ஆகும்

V.Sridhar