Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 017/104 : வேங்கடமே சேவடி வாய்ப்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 017/104 : வேங்கடமே சேவடி வாய்ப்

    6. திரு வேங்கட மாலை 017/104 : வேங்கடமே சேவடி வாய்ப்பச் சென்றான் சேர்பு !

    நோவினையும் நோயினையும் நோய் செய் வினையினையும்
    வீவினையும் தீர்த்து அருளும் வேங்கடமே - மூ வினை செய்
    மூவடிவாய்ப்பச்சென்றான் முன்னாள் அகலிகைக்குச்
    சேவடிவாய்ப்பச்சென்றான் சேர்பு

    பதவுரை :

    மூவடிவாய்ப்பச்சென்றான் - மூ + வடிவு + ஆய + பச் + என்றான்
    சேவடிவாய்ப்பச்சென்றான் - சே + அடி + வாய்ப்ப + சென்றான்

    நோவினையும் பிறத்தல் ஆகிய துன்பத்தையும் ,
    நோயினையும் வருத்தம் கொடுக்கும் வியாதிகளையும் ,
    நோய் செய் வினையினையும் இவைகளுக்குக் காரணமான கருமங்களையும் ,
    வீவினையும் மரண வேதனையையும்
    தீர்த்து அருளும் வேங்கடமே நீக்கி அருளுகின்ற வேங்கடமே
    மூ வினை செய் படைத்தல் , காத்தல் , அழித்தல் எனும் மூன்று தொழில்களை செய்யும்
    மூ வடிவாய் அயன் , அரி , அரன் எனும் மூன்று வடிவங்களாய் ஆனவனும் ,
    பச்சென்றான் பசுமை நிறத்தவனும் ,
    முன்னாள் அகலிகைக்கு ராமவதாரத்தில் அகலிகைக்கு
    சேவடிவாய்ப்ப சிவந்த தன திருவடி சித்தி அளிக்கும்படி
    சென்றான் சேர்பு நடந்து சென்றவனுமான திருமாலின் சேருமிடம் .

    V.Sridhar

    Last edited by sridharv1946; 05-01-14, 07:49.
Working...
X