6. திரு வேங்கட மாலை 018/104 : வேங்கடமே வந்த துக்கம் காப்பான் தலம் !

பித்து , மலடு , ஊமை , முடம் , பேய் , குருடு , கூன் , செவிடு ,
மெய்த் துயர் , நோய் தீர்த்து அருளும் வேங்கடமே - பத்தருக்கு
வந்ததுக்கங்காப்பான் ; மலர் உந்தியின் உலகம்
தந்ததுக்கங்காப்பான் ; தலம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபதவுரை :

வந்ததுக்கங்காப்பான் - வந்த + துக்கம் + காப்பான்
தந்ததுக்கங்காப்பான் - தந்து + அதுக்கு + அங்காப்பான்

பித்து , மலடு பைத்தியம் பிடித்தலையும் , பிள்ளைப் பேறு இன்மையையும் ,
ஊமை , முடம் வாய் பேசாமையையும் , கால் கைகளின் குறையையும் ,
பேய் , குருடு பேய் பிடித்தலையும் , கண் தெரியாமையையும் ,
கூன் , செவிடு உடல் வளைதலையும் , காது கேளாமையையும் ,
மெய்த் துயர் , நோய் உடல் துன்பங்களையும் , பிற நோய்களையும்
தீர்த்து அருளும் வேங்கடமே நீக்கி அருளுகின்ற வேங்கடமே
பத்தருக்கு வந்த தன் அடியார்களுக்கு வந்த
துக்கம் காப்பான் துன்பங்களை நீக்கி பாதுகாப்பவனும் ,
மலர் உந்தியின் தனது நாபித் தாமரையிலிருந்து
உலகம் தந்து உலகை உண்டாக்கி
அதுககு அங்காப்பான் அவ்வுலகை உண்ண வாய் திறப்பவனும் ஆகிய திருமாலின்
தலம் இடம் ஆகும்


V.Sridhar