Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 027/104 : வேங்கடமே உன்னார் உழை ħ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 027/104 : வேங்கடமே உன்னார் உழை ħ

    6. திரு வேங்கட மாலை 027/104 : வேங்கடமே உன்னார் உழை எய்தார் ஊர் !

    கூனல் இள வெண் குருகு கோனேரியில் விசும்பு ஊர்

    மீன நிழலைக் கொத்தும் வேங்கடமே - கானகத்துப்
    பொன்னாருழை எய்தார் ,'பூங்கழலே தஞ்சம் ' என
    உன்னாருழை எய்தார் ஊர்

    பதவுரை :

    பொன்னாருழை எய்தார் - பொன் + ஆர் + உழை + எய்தார்
    உன்னாருழை எய்தார் - உன்னார் + உழை + எய்தார்


    கூனல் இள வளைந்த கழுத்தை உடைய , இளமையான
    வெண் குருகு வெண்ணிறமான குருகு எனும் நீர்ப் பறவை
    கோனேரியில் கோனேரி தீர்த்தத்தில் தெரியும்
    விசும்பு ஊர் மீன நிழலை வானத்தில் செல்லும் மீன் வடிவான மீனராசியின் நிழலை
    கொத்தும் வேங்கடமே மூக்கினால் கொத்தும் இடமான வேங்கடமே
    கானகத்து தண்டகாரண்யத்தில்
    பொன் ஆர் உழை எய்தார் பொன் மானான மாரீசனை அம்பு எய்தி வீழ்த்தியவரும் ,
    'பூங்கழலே தஞ்சம் ' என "உன் திருவடிகளே சரணம்" என்று
    உன்னார் உழை எய்தார் நினையாதவர்களிடம் சென்று சேராதவரும் ஆன திருமால்
    ஊர் இருக்கும் திருப்பதி ஆகும்

    V.Sridhar

Working...
X