சாதாரணமாக நம் வீடுகளில் தினசரி செய்யும் ஒன்று இது. சாம்பாரில் போடும் 'தான் 'களை மாற்றி போடுவதால் சாம்பாரின் சுவையையும் மாற்றலாம். உதாரணத்துக்கு, குடமிளகாய் சாம்பார்,
பெங்களூர் கத்தரிக்காய், நூர்கோல் சாம்பார், முருங்கைக்காய் சாம்பார். எனவே நான் சாம்பார் செய்முறை யை சொல்கிறேன் மற்றும் அதில் போடும் காய்களையும் சொல்கிறேன். பிறகு உங்கள் கைவண்ணம் தான்.

Here we go........

தேவையானவை:

1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
3 - 4 பச்சை மிளகாய்
1 பெரிய வெங்காயம் அல்லது ஒரு கை சின்ன வெங்காயம்
1 தக்காளி ( வேண்டுமானால் ) அரிந்து வைத்துக்கொள்ளவும் , விதைகளை எடுக்கவும் )
2 -3sp சாம்பார் பொடி
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsதாளிக்க:

கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
கொத்தமல்லி


எண்ணெய்
உப்பு.

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் , அரிந்த பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது, வெந்த பருப்பு, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,சாம்பார் பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை,கொத்தமல்லி துவி இறக்கவும்.
சாதத்துடன் பரிமாறவும்.
எந்த கறியுடனும் ( veg ) நன்றாக இருக்கும்.
எலுமிச்சை ஊறுகாய் அல்லது ஆவக்காய் கூட போறும்.