பருப்பு சாம்பாரில் "தான் " என்ன போடலாம்?

கீழ் கண்ட காய்கறி லிஸ்ட் லிருந்து எதாவது ஒன்றை போடலாம்.
அவை: குடமிளகாய் (இந்த சாம்பாருக்கு சொத்தையே எழுதி வைக்கலாம் அவ்வளோ taste ) முள்ளங்கி, நூல்கோல் , கத்தரி, வெண்டை, சின்ன வெங்காயம், முருங்கைக்காய், உருளை, காரட் , சௌ சௌ.

இதில் , வெங்காயம், சின்னவெங்காயம், குடமிளகாய், கத்தரி, வெண்டை போன்றவற்றை தாளித்ததும் போட்டு வதக்கணும்.

முள்ளங்கி, நூல்கோல் ,முருங்கைக்காய், காரட் , சௌ சௌ ஆகியவற்றை பருப்புடன் வேகவைத்து போடணும்.

உருளையை வேக வைத்து தனியே வதக்கி போடணும்.

தனக்கு என் வாசம் இல்லாத காரட் , சௌ சௌ , பீன்ஸ் போன்றவற்றை சேர்த்து போடலாம்.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends