Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 030/104 : வேங்கடமே உள்ளத்துக்க&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 030/104 : வேங்கடமே உள்ளத்துக்க&

    6. திரு வேங்கட மாலை 030/104 : வேங்கடமே ள்ளத்துக்கு அப்பாலான் ஊர் !

    பால் நிறம் கொள் தெங்கின் இளம் பாளை விரிய , சுனையில்
    மீன் இனம் கொக்கு என்று ஒளிக்கும் வேங்கடமே - வான் நிமிர்ந்த
    வெள்ளத்துக்கப்பாலான் , மெய்ப் பரம யோகியர் தம்
    உள்ளத்துக்கப்பாலான் ஊர்

    பதவுரை :

    வெள்ளத்துக்கப்பாலான் - வெள்ளத்து + கப்பு + ஆலான்
    உள்ளத்துக்கப்பாலான் - உள்ளத்துக்கு + அப்பாலான்

    பால் நிறம் கொள் வெண்மை நிறம் கொண்ட
    தெங்கின் இளம் பாளை விரிய தென்னையின் இளமையான பாளை மலர ,
    சுனையில் மீன் இனம் சுனை நீரில் உள்ள மீன் கூட்டங்கள்
    கொக்கு என்று ஒளிக்கும் அதனைக் கொக்கு என்று அஞ்சி மறையும்
    வேங்கடமே இடமான வேங்கடமே
    வான் நிமிர்ந்த வானத்தையும் கடந்து பொங்கி மேல் எழுந்த
    வெள்ளத்து பிரளயப் பெரும் கடலில்
    கப்பு ஆலான் கிளைகளை உடைய ஆல மரத்தின் இலையில் பள்ளி கொண்டவனும்
    மெய்ப் பரம யோகியர் தம் உண்மையான சிறந்த யோகிகளுடைய
    உள்ளத்துக்கு அப்பாலான் மனத்துக்கு முழுதும் எட்டாமல் கடந்தவனும் ஆன திருமால்
    ஊர் இருக்கும் ஊர் ஆகும்

    V.Sridhar
Working...
X