Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 033/104 : வேங்கடமே வெம்புவனம் க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 033/104 : வேங்கடமே வெம்புவனம் க

    6. திரு வேங்கட மாலை 033/104 : வேங்கடமே வெம்புவனம் கடந்தார் வெற்பு !

    அங்கு அயலில் மேகம் அதிர , பெரும் பாந்தள்
    வெங்கயம் என்று அங்காக்கும் வேங்கடமே - பங்கயனோடு
    அம்புவனங்கடந்தார் அம்புயத்து மங்கையோடு
    வெம்புவனங்கடந்தார் வெற்பு

    பதவுரை :

    அம்புவனங்கடந்தார் - அம் + புவனங்கள் + தந்தார்
    வெம்புவனங்கடந்தார் - வெம்புவனம் + கடந்தார்

    அங்கு அயலில் மேகம் அதிர வானத்தில் மேகங்கள் இடி முழங்க
    பெரும் பாந்தள் பெரிய மலைப் பாம்புகள்
    வெங்கயம் என்று கோபமுள்ள மத யானைகள் என்று எண்ணி , அதை விழுங்க
    அங்காக்கும் வேங்கடமே வாயைத் திறக்கும் இடமான வேங்கடமே
    பங்கயனோடு பிரமனையும்
    அம் புவனங்கள் தந்தார் அழகிய உலகங்களையும் படைத்தவரும் ,
    அம்புயத்து மங்கையோடு தாமரையில் தோன்றிய சீதா தேவியுடன்
    வெம்புவனம் கடந்தார் வெப்பமுள்ள காட்டைக் கடந்து சென்றவருமான திருமாலின்
    வெற்பு மலை ஆகும்

    V.Sridhar

Working...
X