உபநயனத்திற்கு தேவையான பொருட்கள்.

முதல் நாள். உபநயன பூர்வாங்கம்:--உதக சாந்தி, ப்ரதிசரபந்தம், பாலிகை.,நாந்தி----ஹோமத்துடன்.

மஞ்சள் தூள். 100 கிராம்; குங்குமம் 50 கிராம்.;; சந்தனம்பொடி 10 கிராம்;
தொடுத்த புஷ்பம் 10 மீட்டர்; தேங்காய்-20 எண்ணிகை; வாழை பழம் (பூவன்)
60 நம்பர்; வெற்றிலை-200; பாக்கு 100 கிராம்; ;சீவல்;50 கிராம்; பாக்கு பொட்டலம் 100; மட்டை தேங்காய் 10;

மாவிலை கொத்து 8 நம்பர்; பையனுக்கு மாலை 1; கும்பத்திற்கு மாலை 1;
கோதுமை 2 கிலோ; பச்சரிசி 10 கிலோ;; கருப்பு உளுந்து 500 கிராம்; கருப்பு எள் 200 கிராம்; தலை வாழை இலை 20 நம்பர்; .; 10.ம் நம்பர் நூல்கண்டு 1.

பாலிகை 5 நம்பர்; பாலிகை தெளிக்க நெல்; எள், உளுந்து, பயறு. கடுகு ஒவ்வொன்றும் 20 கிராம்; ; பசும் பால் 250 மில்லி; உதக சாஃந்தி குட்த்துக்குள் போட ஏலக்காய் பவுடர், க்ராம்பு; பச்சை கல்பூரம்; வெட்டி வேர், விலாமிச்சை வேர்; ;

பித்தளை குடம் 1: பித்தளை சொம்பு ( ஒரு லிட்ட்ர் கொள்ளலவு) 2.நம்பர்;
பஞ்சபாத்திர உத்திரிணி 1: தாம்பாளம் 4; கிண்ணங்கள் 4; பாக்குமட்டை கின்னம் 10 நம்பர்; ;ஹோமத்திற்கு நெய் 500 கிராம்; ஹவிஸ் 100 கிராம்; விசிறி 1. சிராய் தூள் 5 கிலோ; விராட்டி 20 நம்பர்; கற்பூரம் 1 பாக்கெட்; தீப்பெட்டி 1; கத்தி-1;; அரிசி மாவு;. பிக்ஷா தாம்பாளம் 2; டபரா-1.

தீபம் 1: நல்லெண்ணய் தீபத்திற்கு; திரி; தூபக்கால்; தீபக்கால்;; கற்பூர கரண்டி; ஊதுபத்தி 1 பாக்கெட்; ; உட்கார தடுக்கு 12 நம்பர்; ஒன்பது ஐந்து முழ வேட்டி 12 நம்பர்; ; 4 முழ வேட்டி 4 நம்பர்; செம்பு பஞ்சபாத்ர உத்திரிணி 10.

வெள்ளி பூணல், தங்க பூணல் ; அம்மி-1; ப்ரும்மோபதேச பட்டு; 1; சுண்டல். , அப்பம் நைவேத்தியத்திற்கு..; மாந்தோல் கொஞ்சம். தர்ப்பை; ஹோம குச்சி;
பொரசம்குச்சி -100;.

உபநயனத்திற்கு அம்மான் சீர் வரிசை செய்ய வேண்டியது. வெள்ளி பூணல்; தங்க பூணல்; வெள்ளி பஞ்சபாத்ர உத்திரிணி; வெள்ளி தாம்பாளம்; ப்ரும்மோபதேச பட்டு; பருப்பு தேங்காய், ஆசீர்வாத வேஷ்டி, புடவை. வெற்றிலை. பாக்கு, பழம், புஷ்பம், மஞ்சள். குங்குமம்;சந்தனம்,.கை முறுக்கு;
அதிரசம், லட்டு, .அல்லது சோமாசி.. கை முறுக்கு அதிரஸம் லட்டு எவர்சில்வர் டப்பிகளில் வைக்க வேண்டும்.

அம்பட்டனை வரசொல்லி க்ஷவரம் செய்ய சொன்னால் அவனுக்கு வேட்டி, தக்ஷிணை கொடுக்க வேண்டும். முன்னாலேயே வர சொல்லி சொல்ல வேண்டும். சலூனுக்கு வண்டியில் சென்றும் தலை முடி வெட்டிக்கொன்டும் வரலாம்.

பிக்ஷை அரிசி முதலில் தாயார் தான் போட வேண்டும். பிக்ஷை போடும் ஸ்த்ரீகள் மடிசார் புடவையுடன் பிக்ஷை போட வேண்டும். அவர்களுக்கு தக்ஷிணை , தாம்பூலம், புஷ்பம், சந்தனம், கும்குமம், கை முறுக்கு, லட்டு கொடுக்க வேண்டும்.

பிக்ஷை அரிசியை உங்கள் வீட்டு சமையல் செய்யும் அரிசியுடன் சேர்த்து வைத்துக்கொண்டு உபயோகிக்கவும்.

ஸந்தியாவந்தனம் தினமும் செய்வதற்கு தினமும் ஒரு வாத்யாரை வரச்சொல்லி பையனுக்கு மனப்பாடம் செய்து வைக்க வேண்டும். தலை ஆவணி அவிட்டம் ஆன பிறகு தான் ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம்

சொல்லி கொடுக்க வேண்டும். தற்போது சந்தியா வந்த்னம், ப்ருஹ்ம யக்ஞம்
ஸமிதா தானம் மட்டும் வாத்தியார் ஸ்வரத்துடன் சொல்லி கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்..

பிரும்மோபதேசம் செய்பவர் சந்தியா வந்தன காயத்ரீ ஜபம் தவிர பத்தாயிரம் காயத்ரீ ஜபம் தனியாக தினமும் ஆயிரம் வீதம் காலை 8-30 மணி முதல் 10 மணிக்குள் செய்ய வேண்டும்.

நாந்தி ரித்விக்குகளுக்கு அரிசி வழைக்காய் கொடுப்பதாக இருப்பவற்களுக்கு: 12 வாழைக்கய், ஆறு கிலொ பச்சரிசியும், பாசி பருப்பு 500 கிராம் தேவை.

புகைபடம் எடுப்பதானால் அதற்குள்ள ஏற்பாடுகள் செய்து கொள்ளவும். குல தெய்வத்திற்கு அபிஷேகம், வேண்டுதல், ப்ரார்த்தனை , கோயிலுக்கு அன்பளிப்பு செய்ய வேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsசங்கராசாரியாரிடம் சென்று பத்ரிக்கை வைத்து அநுக்கிரஹம் பெற்றுக்கொண்டு வர வேண்டும். சுமங்கலி ப்ரார்தனை, சமாராதனை செய்ய வேண்டும்..

சிறிய சைஸ் கை முறுக்கு, லட்டு பாக்கெட் வருபவர்களின் எண்ணிக்கை பார்த்து ஆர்டர்செய்யவும். வீட்டில் செய்வதாக இருந்தால் ஷாமியானா, டைனிங் டேபிள், நாற்காலி, பென்ச், குடிக்கும் தண்ணிருக்கான கப்
,அன்பளிப்பு,

பொருட்கள், அன்பளிப்பு பைகள் , முதலியவைகள் தேவைக் கேற்றார் போல் வாங்கவும்.//ஆர்டெர் கொடுக்கவும்.