Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 038/104 : வேங்கடமே வீ ரத் திகிரĬ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 038/104 : வேங்கடமே வீ ரத் திகிரĬ

    6. திரு வேங்கட மாலை 038/104 : வேங்கடமே வீ ரத் திகிரியார் வெற்பு !

    பொன் கமழும் கற்பகத்தின் பூங் காவணத்துக்கு
    மென் கமுகு அம் கால் ஆகும் வேங்கடமே - நன்கு அமரும்
    ஊரத்திகிரியார் ஊதும் திகிரியார்
    வீ ரத்திகிரியார் வெற்பு

    பதவுரை :

    ஊரத்திகிரியார் - ஊ ர் + அத்தி + கிரியார்

    வீ ரத்திகிரியார் - வீ ர + திகிரியார்

    மென் கமுகு காட்சிக்கு இனிய பாக்கு மரங்கள்
    பொன் கமழும் பொன் மயமான ,
    கற்பகத்தின் வாசனை வீசும் கற்பகச் சோலையின்
    பூங் காவணத்துக்கு பொலிவுள்ள பந்தலுக்கு
    அம் காலாகும் அழகிய கால்கள் போல இருக்கும்
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    நன்கு அமரும் நன்றாகப் பொருந்தும்
    ஊர் அத்திகிரியார் அத்தி கிரி எனும் திருப்பதியை உடையவரும் ,
    ஊதும் திகிரியார் ஊதி இசைக்கும் வேய்ங்குழலை உடையவரும் ,
    வீ ர திகிரியார் பகையை அழிக்கும் சுதர்சனம் எனும் சக்கரத்தை உடையவருமான திருமால்
    வெற்பு இருக்கும் திரு மலை ஆகும்




    --
    V.Sridhar

    Last edited by sridharv1946; 10-01-14, 20:53.

  • #2
    Re: 6. திரு வேங்கட மாலை 038/104 : வேங்கடமே வீ ரத் திகிர&

    ஊரத்திகிரியார் ஊதும் திகிரியார்
    வீ ரத்திகிரியார்
    என்ன ஒரு அழகு தமிழ் பழகு தமிழாயில்லாது போயிற்றே

    Comment


    • #3
      Re: 6. திரு வேங்கட மாலை 038/104 : வேங்கடமே வீ ரத் திகிர&

      திகிரி - சக்கரம் அத்திகிரி - காஞ்சியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயில்
      திகிரி - மூங்கில் - குழலை உணர்த்தும் கருவி ஆகு பெயர்
      இது போல் திகிரி எனும் சொல் மூன்று முறை வருவது
      சொற்பின் வரு நிலை அணி எனப்படும்

      நன்றி !
      -


      Comment


      • #4
        Re: 6. திரு வேங்கட மாலை 038/104 : வேங்கடமே வீ ரத் திகிர&

        எமது தாய் மொழியின் சிறப்பு சிலிர்க்கவைக்கிறது

        Comment

        Working...
        X