6. திரு வேங்கட மாலை 040/104 : வேங்கடமே வண் துவரை நாட்டினான் பற்று !
தண் கமுகின் பாளை தடம் கதிரின் செல்வனுக்கு
வெண் கவரி போல் அசையும் வேங்கடமே - ஒண் கடல் சூழ்
வண்டுவரைநாட்டினான் மத்தாக வாரிதியுள்
பண்டுவரைநாட்டினான் பற்று
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
பதவுரை :
வண்டுவரைநாட்டினான் - வண் + துவரை + நாட்டினான்
பண்டுவரைநாட்டினான் - பண்டு + வரை + நாட்டினான்
தண் கமுகின் பாளை குளிர்ந்த பாக்கு மரத்தின் வெண்மையான பாளைகள்
தடம் கதிரின் செல்வனுக்கு மிக ஒளியைச் செல்வமாக உடைய சூரியனுக்கு
வெண் கவரி போல் அசையும் வெண் சாமரம் போல் அசைகின்ற இடமான
வேங்கடமே திரு வேங்கட மலையே
ஒண் கடல் சூழ் பெரிய கடலால் சூழப்பட்ட
வண் துவரை நாட்டினான் வளமுள்ள துவாரகை நாட்டை ஆள்பவனும் ,
பண்டு வாரிதியுள் முற்காலத்தில் பாற்கடலில்
வரை மத்தாக நாட்டினான் மந்தர மலையை மத்தாக இட்டவனுமான திருமால்
பற்று விரும்பி வாழும் இடம் ஆகும்
--
V.Sridhar
Bookmarks