Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 045/104 : வேங்கடமே வில் அங்கை கĭ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 045/104 : வேங்கடமே வில் அங்கை கĭ

    6. திரு வேங்கட மாலை 045/104 : வேங்கடமே வில் அங்கை கொண்டார் சார்பு !

    வாவு கவின் மந்தி நுகர் மாங்கனிக்குக் கற்பகத்தின்
    மேவு கவி கை நீட்டும் வேங்கடமே - தாவு கடல்
    வேவவிலங்கைக்கொண்டார் வீடணனை வைத்து , ஒழிந்தார்
    சாவவிலங்கைக்கொண்டார் சார்பு

    பதவுரை :

    வேவவிலங்கைக்கொண்டார் - வேவ + இலங்கைக்கு + ஒண் + தார்
    சாவவிலங்கைக்கொண்டார் - சாவ + வில் + அங்கை + கொண்டார்


    வாவு கவின் மந்தி தாவிச் செல்லும் பெண் குரங்கு
    நுகர் மாங்கனிக்கு உண்ணும் மாம்பழத்திற்கு
    கற்பகத்தின் மேவு கவி கற்பக மரத்தில் இருக்கும் ஆண் குரங்கு
    கை நீட்டும் கை நீட்டும் இடமான
    வேங்கடமே திரு வேங்கட மலை
    தாவு கடல் வேவ அலை பொங்கும் கடல் கொதிக்கும்படியும் ,
    ஒண் தார் வீடணனை ஒளியுள்ள மாலை அணிந்த விபீஷணனை
    இலங்கைக்கு வைத்து இலங்கைக்கு அரசனாக வைத்து ,
    ஒழிந்தார் சா மற்ற அரக்கர்கள் இறக்கும்படியும் ,
    வில் தமது கோதண்டம் எனும் வில்லை
    அங்கை கொண்டார் அழகிய கையில் எடுத்தவரான திருமால்
    சார்பு சார்ந்து இருக்கும் இடம்


    V.Sridhar

Working...
X