Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 050/104 : வேங்கடமே வேதத்தின் அ&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 050/104 : வேங்கடமே வேதத்தின் அ&#

    6. திரு வேங்கட மாலை 050/104 : வேங்கடமே வேதத்தின் அப்புறத்தான் வெற்பு !

    செம் பதுமராகச் சிலை சூழ் பெரும் பாந்தள்
    வெம் பரிதி ஊர் கோள் ஆம் வேங்கடமே - உம்பர் உலகு
    ஓதத்தின் அப்புறத்தான் ஆலிலைத் துயின்றான் ;
    வேதத்தின் அப்புறத்தான் வெற்பு

    பதவுரை :

    ஓதத்தின் அப்புறத்தான் - ஓதத்தின் அப்பு + உற + தான்
    வேதத்தின் அப்புறத்தான் - வேதத்தின் அப்புறத்தான்


    செம் பதுமராகச் சிலை சூழ் சிவந்த பதுமராகக் கல்லைச் சுற்றிக் கொண்ட
    பெரும் பாந்தள் பெரிய மலைப் பாம்பு
    வெம் பரிதி ஊர் கோள் ஆம் சூரிய மண்டலத்தைச் சுற்றும் கிரகம் போல் தோன்றும்
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    உம்பர் உலகு ஓதத்தின் அப்பு உற எல்லா உலகங்களையும் பிரளய நீர் பரவ ,
    தான் ஆலிலைத் துயின்றான் தான் ஒரு ஆலிலையில் நித்திரை செய்தவனும் ,
    வேதத்தின் அப்புறத்தான் வேதங்களுக்கு அப்பாற்பட்டவனுமான திருமாலின்
    வெற்பு திரு மலை ஆகும்

    V.Sridhar
Working...
X