6. திரு வேங்கட மாலை 054/104 : வேங்கடமே போதகத்தை மோதிமருப்பு ஒசித்தார் ஊர் !

காதல் இற்றுச் சார் தவர்க்கும் , காமியத்தைச் சார்ந்தவர்க்கும் ,
வேதனைக் கூற்றைத் தவிர்க்கும் வேங்கடமே - போதகத்தை
மோதிமருப்பொசித்தார் , முன் பதினாராயிறவர்
ஓதிமருப்பொசித்தார் ஊர்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsபதவுரை :

மோதிமருப்பொசித்தார் - மோதி + மருப்பு + ஒசித்தார்
ஓதிமருப்பொசித்தார் - ஓதி + மரு + பொசித்தார்

காதல் இற்று பிரபஞ்ச வாழ்வில் ஆசை ஒழித்து
சார் தவர்க்கும் தன்னிடம் வந்த முனிவர்களுக்கும் ,
காமியத்தைச் சார்ந்தவர்க்கும் பிரபஞ்ச வாழ்வையே விரும்பினவர்களுக்கும்
வேதனை துனபத்தின் ( பிரமனையும்) *
கூற்றை கூட்டத்தை (எமனையும்) *
தவிர்க்கும் ஒழித்த( விலக்கிய ) *
வேங்கடமே திரு வேங்கட மலையே
போதகத்தை மோதி குவலயாபீ டம் எனும் யானையை மோதி ,
மருப்பு ஒசித்தார் அதன் தந்தங்களை உடைத்தவரும் ,
முன் பதினாறாயிரவர் கிருஷ்ணனாக பதினாறாயிரம் பெண்களின்
ஓதி மரு பொசித்தார் கூந்தல் மணத்தை நுகர்ந்தவருமான திருமாலின்
ஊர் இருப்பிடம் ஆகும்* ஒரு வகையாய்ப் பிரிந்து இரு பொருள் கூறும் செம்மொழிச் சிலேடை

V.Sridhar