6. திரு வேங்கட மாலை 055/104 : வேங்கடமே வன் பாரதம் முடித்தார் வாழ்வு !

கேள்வித் துறவோரும் , கேடு அற இல் வாழ்வோரும் ,
வேள்விக்கினமாற்றும் வேங்கடமே - மூள்வித்து ,
முன்பாரதமுடித்தார் மொய் வேந்தர் வந்து அவிய
வன்பாரதமுடித்தார் வாழ்வு

பதவுரை :

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsமுன்பாரதமுடித்தார் - முன்பா + ரத + முடி + தார்வன்பாரதமுடித்தார் - வன் + பாரதம் + முடித்தார்

கேள்வித் துறவோரும் ஞானக் கேள்விகளை உடைய துறவிகளும்
வேள் விக்கினம் மாற்றும் மன்மதன் ஏற்படுத்திய துன்பத்தை நீக்கும் *
கேடு அற இல் வாழ்வோரும் தீங்கு இல்லாமல் இல்லறத்தில் வாழ்வோரும்
வேள்விக்கு இன மாற்றும் யாகத்துக்கு இனமான நற்செயல்களைச் செய்யும் *
வேங்கடமே இடமான திருவேங்கட மலையே
முன்பா ரத முடி தார் மொய் வேந்தர் முன்பு தேர் , கிரீடம் , மாலை அணிந்த மன்னர்கள்
வந்து அவிய போர்செய்து இறக்கும்படி
வன் பாரதம் மூள்வித்து முடித்தார் கொடிய பாரதப்போரை மூட்டி நிறைவேற்றிய திருமாலின்
வாழ்வு வாழும் இடம் ஆகும்


* வேள்விக்கினமாற்றும் -
வெவ்வேறு விதமாய்ப் பிரிந்து இரு பொருள் பட்டதால் பிரிமொழிச் சிலேடை


V.Sridhar