5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கவனத்துக்கு... | இன்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படும். |

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று நாடு முழுவதும் முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.தமிழ்நாட்டில் 70 லட்சம் குழந்தைகளுக்கு 43,051 மையங்களிலும் சென்னையில் 5.70 இலட்சம் குழந்தைகளுக்கு 1325 மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறுகிறது.
இங்கு காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சொட்டு மருந்து கொடுக்கப்படும்.
இன்று தமிழகம் வந்து போகும் குழந்தைகளும் தவறாமல் சொட்டுமருந்து போட்டுக் கொள்ள வசதியாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1652 நடமாடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையங்களில் 25 நடமாடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends