அன்றாட வாழ்வில் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்டு வரும் நறுமணப்பொருட்கள் சமையலுக்கு மணம் சேர்ப்பவை மட்டுமல்ல, மணத்தோடு உடல்நலத்தை கூட்டி வாழ்க்கையை மணக்கச் செய்பவையாகும். இவை சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவ குணம் கொண்ட உணவுக்கலவைதான் தமிழக உணவின் சிறப்பு.

மஞ்சள்

நறுமணப்பொருட்களில் முக்கிய பங்கு வகிப்பது. இது மங்களகரமான ஒன்றாக காலம் காலமாக கருதப்பட்டு வருகிறது. அது மட்டுமா...? சிறந்த கிருமி நாசினியாகவும், வயிற்றுப்புண் போக்கியாகவும் உள்ளது. மேலும் தோல் அழகை மெருகேற்றவும் உதவுகிறது.

மல்லி

மணக்கும் மல்லி பித்தத்தை அகற்றுவதில் கில்லி. உணவை சமநிலைப்படுத்துவதோடு உடல் நிலையையும் சீராக்கும் தன்மையுடையது.

சீரகம்

தாய்மையடைந்த பெண் முதல் அனைத்துப்பெண்களுக்கும், ஆண்களுக்கும் சீதோஷ்ணத்தை கட்டுப்படுத்த உதவி உடல்நலத்தை சீராக்கும் சீரகம்.

கசகசா

கரகரவென இருக்கும் கசகசா வயிற்றுவலியை போக்கும் தன்மையுடையது. நரம்புகளை இரும்பாக்கும். மூளைக்கு பலம் தரும். நல்ல தூக்கம் தரும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsமிளகு

மிளகு சாப்பிடும்போது காட்டமாக இருந்தாலும், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். மிளகு சாப்பிடும்போது காட்டமாக இருந்தாலும், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

கிராம்பு

கிராம்பு தசைப்பிடிப்பு, நெஞ்சு சளி, பல்வலி, ஈறுவலியை போக்குவதிலும் சிறந்தது. இதை தினமும் உணவில் சேர்ப்பது சுகம். அஞ்சறைப்பெட்டியின் அருமருந்து ரகசியத்தை அறிந்து பயன்படுத்தி உடல்நலம் பேணுவோம். இவற்றின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்துவோம்.


Source: Dinakaran