ஶ்ரீ:
ஶ்ரீமான்கள் நரசிம்மாச்சார் மற்றும் சௌந்திரராஜன் ஸ்வாமின்,
தயவுசெய்து தவறாக எண்ணாமல்,
இதுவரை பிபிகோட் குறித்து அடியேன் வெளியிட்ட விபரங்களைக் கொண்டு தாங்கள் என்ன முயற்சி செய்தீர்கள், எங்கே தவறு ஏற்பட்டது என்று தெரிவித்தால் மேலும் விளக்க உதவியாக இருக்கும்.
பிபிகோட் என்பது ஒரு மார்க்கப் லாங்க்வேஜ் என்று சொல்வார்கள்.

அதாவது நாம் டைப் செய்யும் வாசகங்களை போல்டாக, இட்டலைஸ்டாக, அண்டர்லைன் செய்து,
மிகப்பெரிய எழுத்தாக்க, எழுத்துக்கோ அல்லது பின்புலத்திற்கோ தேவையான வண்ணங்களை தோன்றச்செய்ய என்பனபோன்ற பல்வேறுபட்ட கட்டளைகளை ப்ரவுசர் புரிந்துகொள்ளும் வகையில்
செய்யும் குறியீடுகள் பல வகைகள் உள்ளன.
அவற்றில் வெப் டிசைனிங் செய்பவர்கள் உபயோகிப்பது html என்னும் கோடிங் ஆகும்.

இதுபோன்ற forumகளில் htmlடஐ உபயோகிக்க இயலாது. ஆயினும் நம்மைப்போன்ற பயனர்கள் தமது உள்ளீடுகளை வண்ணத்திலோ, போல்டு போன்ற மெருகேற்றி வெளியிட விரும்புவர். அவர்களுக்கு சுலபமாக உள்ளீடு செய்ய இத்தகைய bbcodeகள் பயன்படுத்தும் வசதியை போரம் சாப்ட்வேர் வழங்குவதே, போரத்தின் சிறப்பு.
பேஸ்புக் போன்ற இணைய தளங்களில் எவரும் உள்ளீடு செய்யும் தகவல்கள் யாவும் ஒரே நிறத்தில், ஒரே அளவில், ஒரே மாதிரியே அமைந்திருக்கக்காரணம் இதுபோன்ற வசதியின்மையே!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsதயவுசெய்து தாங்கள் உள்ளீடு செய்யும் இந்தப் பகுதியின் மேல் விளிம்பைப் பாருங்கள் அங்கே பல சிறு சிறு பட்டன்கள் உள்ளன. Quick Reply Mode ல்கூட ஒரு வரியில் முக்கியமான பட்டன்கள் மட்டும் இருக்கும்.
அவற்றில் முதல் பட்டன் A/A என்று உள்ளதல்லவா அதை க்ளிக் செய்து சில விநாடிகள் விட்டு பின்னர்,
B என்ற பட்டனை அழுத்திப்பாருங்கள், உங்கள் வாசகங்கள் போல்ட் ஆக மாறுவதற்குத் தேவையான [B] ..[B] என்கிற bbcode அங்கே வந்திருக்கும்.
முதல் B க்கும் 2வது Bக்கும் இடையில் தாங்கள் உள்ளிடும் வாசகங்கள் போல்டாக அமையும்.

A/A அழுத்தப்படாமல் இருக்கும் நிலைக்கு : wysiwyg mode என்று பெயர்.
அதன் விளக்கம் என்னவெனில்: What You See Is What You Get.
A/A பட்டன் அழுத்தப்பட்டிருந்தால் Switch Editor to Source Mode என்று பெயர்.

இன்னமும் சில குறைந்த உறுப்பினர்களைக்கொண்ட ப்ராமின் போரம்கள் பழைய சோர்ஸ் மோடில் டைப்செய்யும்படியாகவே இருக்கின்றன.
அடியேன், பெரு முயற்சிசெய்து இவற்றைக் கற்றக்கொண்டு, நமது போரத்தை இவ்வித நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளேன். அதனால்தான் எப்படியாவது உறுப்பினர்களை அவற்றை உபயோகிக்கச் செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

தற்போது இதனை சோதனை செய்ய, முன்பு A/A என்கிற முதல் பட்டனை மீண்டும் க்ளிக்செய்து பழைய WYSIWYG நிலைக்குக் கொண்டு வந்துவிட்டு, தற்போது, B என்கிற பட்டனை க்ளிக்செய்து ஒன்றிரண்டு வார்த்தைகளை டைப் செய்துவிட்டு, மீண்டும் Source Modeநக்கு A/A என்கிற முதல் பட்டனை அழுத்திப்பார்த்தீர்களானால், தாங்கள் டைப் செய்த வார்த்தைகள் B மற்றும் /B என்னும் போல்டுக்கு உறிய bbcode க்கு இடையில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.

இப்படியாகத்தானே, B, I, U, Font, Size, A ஆகிய பட்டன்களையும் ஒவ்வொன்றாக பயன்படுத்தி சோதித்துப்பார்த்து நன்கு அறிந்துகொண்டு உபயோகிக்கத் தொடங்கவும்.
அதுபோலவே மேலுள்ள வரிசையில் smiley, link, remove link, insert image, insert video, insert quoteந ஆகியவற்றுக்கான பட்டன்களையும் பயன்படுத்தி source mode ல் அவற்றுக்கான bbcode களையும் அறிந்துகொண்டு நன்கு பயன்படுத்தத் தொடங்கவும்.

உண்மையிலேயே அனைவரும் அறிந்துகொண்டு பயன்படுத்தவேண்டும் என்ற பேரவா
காரணமாகவே அடிக்கடி பிபிகோட் பற்றி எழுதுகிறேன், தாங்கள் புரிந்துகொள்ளும் வகையில் அடியேனுக்கு விளக்கத் தெரியாமைக்கு வருந்துகிறேன்.
மேலும் சந்தேஹம் இருந்தால் தயங்காமல் எழுதவும்,
வேறு விதத்தில் விளக்க முயற்சிசெய்கிறேன்.
நன்றி,
என்.வி.எஸ்