Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 089/104 : வேங்கடமே வரை நல் குடைī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 089/104 : வேங்கடமே வரை நல் குடைī




    பாம்பும் , குளிர் சந்தின் பக்கத்தில் நிற்கின்ற
    வேம்பும் ,
    மருத்துவக்கும் வேங்கடமே - காம்புகரம்
    ஆனவரை நன்குடையார் , ஆளாய்த் தொழுது ஏத்தும்
    மானவரை நன்குடையார் வாழ்வு







    பாம்பும் பாம்புகள்
    மருத்து உவக்கும் காற்றை விரும்பி உண்ணும் இடமும் ,
    குளிர் சந்தின் குளிர்ந்த சந்தன மரங்களின்
    பக்கத்தில் நிற்கின்ற வேம்பும் அருகில் இருப்பதால் , வேப்ப மரங்கள்
    மரு துவக்கும் நல்ல மணம் வீசத் தொடங்கும் இடமுமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    கரம் காம்பு ஆன தனது கரத்தினை காம்பாகக் கொண்ட
    வரை நல் குடையார் கோவர்த்தன கிரியை குடையாகக் கொண்டவரும் ,
    ஆளாய்த் தொழுது ஏத்தும் அன்பராய் வணங்கித் துதிக்கும்
    மானவரை நன்கு உடையார் மனிதர்களை அதிகமாக உடையவருமான திருமாலின்
    வாழ்வு வாழுமிடம் ஆகும்

    V.Sridhar
Working...
X