ரக்ஷா பந்தனம்=ப்ரதிஸர பந்தம்.

அனுக்ஞை, விக்னேச்வர பூஜைசெய்து ஸங்கல்பம். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம். ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. ப்ராணாயாமம் மமோ பாத்த ஸமஸ்த

துரிதயக்ஷத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அத்ய பூர்வோக்த ஏவங்குண சகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் --------சுபதிதெள --------
-நக்ஷத்ரே-------ராசெள ஜாதஸ்ய------------சர்மண: மம குமாரஸ்ய . உபநயன

(ஸீமந்த்ததிற்கு தகுந்தார்போல் -----------சுபதிதெள ---------கோத்ரே--------நக்ஷத்ரே
---------ராசெள --------ஜாதஸ்ய ----------சர்மண மம-----------நக்ஷத்ரே-------ராசெள
ஜாதாயா:-------நாம்ன்யா::மம தர்மபத்நியா: ச சீமந்த கர்மாங்கபூதம் ரக்ஷாபந்தன கர்ம கரிஷ்யே// என்றும் பும்ஸவனத்தில் ஆயுஷ்ய

அபிவ்ருத்யர்த்தம் அஸ்யாம் மம பார்யாயாம் ஜனிஷ்யமான கர்பஸ்ய பும்ரூபதா ப்ராப்யர்த்தம் கர்பஸ்ய பின்ட சுத்யர்த்தம் பும்சவனாக்ய கர்ம கரிஷ்யே.

கர்ம பூத ரக்ஷா பந்தன கர்ம கரிஷ்யே. க்ரஹ ப்ரீதி தானம் ச கரிஷ்யே. அப உபஸ் பர்சியா..ஜலம் தொடவும்.கலசம் ஸ்தாபனம்.


உதக சாந்தியும் ப்ரதிஸர பந்தமும் செய்யும் போது பெரிய உதக சாந்தி கும்பம் இருக்கும் இடத்திற்கு வடக்கில் கீழே பச்சரிசியை பரப்பி அதன் மேல்
சிறிய பித்தளை சொம்பு வைக்கவும்..உதக சாந்தி கும்பத்திற்கு அலங்காரம் செய்யும் போது இதற்கும் சேர்த்து செய்து விடவும்.

ப்ரதிசர பந்தம் தனியாக செய்யும் போது கலச அலங்காரம் வருண ஆவாஹன பூஜை செய்யவும்.
வருணன் ஆவாஹனம். இமம் மே வருண;++++. ஆவாஹனம் பூஜை நிவேதனம் வரை செய்யவும்.

கலசத்திற்கு வடக்கே வெண்கல பாத்ரத்தில் அரிசியை வைத்து அதன் மீது பஞ்சினால் நூற்ற நூலை ஒன்பது மடிப்பாக மடித்து முறுக்கி மஞ்சள் பூசி சந்தனம் பூசி தாம்பூலத்துடன் வைக்க வேன்டும்.

அஸ்மின் ப்ரதிஸர மந்த்ர கர்மணி ருத்விஜம் த்வாம் வ்ருணே. என நான்கு ப்ராஹ்மணர்களுக்கு அக்ஷதையை போட்டு ஜபம் செய்ய வரிக்க வேன்டும் அந்த ரித்விக்குகளுடன் கும்பத்தை தர்பையால் தொட்டு கொன்டு காயத்ரியை பதம் பதமாகவும்

பாதமாகவும், கூறி நான்கு வேதங்களின் ஆதியையும் க்ருணுஷ்வ பாஜ என்ற அனுவாகத்தயும் அக்னே யசஸ்வின் என்ற நான்கு ருக்குகளையும் ததிக்ராவிண்ணா, ஆபோஹிஷ்டா, ஹிரண்யவர்ணா, பவமான, வருண

ஸூக்தம், ருத்ர ஸுக்தம், ப்ருஹ்ம ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், துர்கா ஸூக்தம், ஶ்ரீ ஸூக்தம், முதலியவைகளையும் நமோ ப்ருஹ்மணே என்பதையும் மூன்று முறை ஜபித்து வருணனை யதா ஸ்தானம் செய்ய

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsவேண்டும்.ப்ரணவத்தை கூறி ,கும்பத்தை எடுத்து , ஸுரபிமதி மந்திரத்தாலும்
அப்லிங்காபி மந்திரத்தாலும் ஸூத்ரத்தை ப்ரோக்ஷிக்க வேண்டும், இந்த மந்திரங்கள் நமது பீடைகளை அகற்றி நம்மை சுத்தமாக்கி நன்மையை தரும்.

ப்ரதிஸர ஸூத்ரத்தை எடுத்து இடது கை கட்டை விரல், மோதிர விரல்களால் அடியை பிடித்துக்கொண்டு வாஸுகியை மனதால் நினைக்க வேண்டும். வலது கை கட்டை விரல் மோதிர விரல்களால் விபூதியை அடி

முதல் நுனி வரை த்ரயம்பகம் என்ற மந்திரத்தை கூறி ஒரு முறையும் மந்திரம் இல்லாமல் இரு முறையும் மேல் நோக்கி தடவ வேண்டும்.

இரு கைகளிலும் அரிசியை நிரப்பி அதன் மீது பழத்தையும் அந்த ஸூத்ரத்தையும் வைத்து , அக்னிராயுஷ்மான் என்ற ஐந்து பர்யாயங்களால் மந்தரித்து , க்ரஹ ப்ரீதி செய்ய வேண்டும்

.பிறகு மாணவனின் வலது கையில் (மனைவியின் இடது கையில்)
ப்ருஹத்ஸாம என்ற மந்திரத்தை கூறி கட்ட வேண்டும்.\\

வீபூதியால் யோப்ருஹ்மா என்ற க்ருதசூக்ததால் ( ஆயுஷ்ய ஸூக்தம்)) ரக்ஷை செய்ய வேண்டும், பிறகு ப்ராஹ்மணர்களுக்கும் ஆசார்யருக்கும் தக்ஷிணை தர வேன்டும்,.

ப்ரதிஸர: என்பது கைமனிக்கட்டில் உள்ளங்கைக்கு மிக அருகாமையில் அணியப்படுவது. அத்தகையதொரு (நூல்கயிறு) சரடை கங்கணமாக கட்டும் நிகழ்ச்சியே ப்ரதிஸரபந்தம்.. இந்த கங்கணம் அணிந்திருப்பவரை

ரக்ஷிப்பதற்காக கட்டுவதால் ரக்ஷை ஆகிறது.ஆதலால் இந்த நிகழ்ச்சிக்கு ரக்ஷா பந்தனம் என்று பெயர்.

நடக்க இருக்கும் சுப காரியத்தின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை எவ்விதமான தோஷங்களும், ரோகங்களும்,கஷ்டங்களும், தீட்டும் அனுகாதவாறு ரக்ஷிப்பதால் ரக்ஷா பந்தனம் எனப்படுகிறது.