ராஜிவ் வழக்கில் தண்டனை பெற்றோரை விடுவிக்கக் கூடாது என நினைப்போர் முட்டாள்கள்: ஜெத்மலானி
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றோரை விடுவிக்கக் கூடாது என்று நினைக்கிற முட்டாள்கள்தான் மத்தியில் இருக்கின்றனர் என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி சாடியுள்ளார். ராஜிவ்காந்தி வழக்கில் மூன்று தமிழர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சென்னை உயர்நீதிமன்றத்திலும் டெல்லி உச்சநீதிமன்றத்திலும் வாதாடியவர் ஜெத்மலானி. . இந்நிலையில் ஜெத்மலானி இன்று சென்னை வந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாகர வரவேற்பு அளிக்கப்பட்டது
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெத்மலானி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றோர் விடுவிக்கப்படக் கூடாது என்று நினைக்கிற முட்டாள்கள்தான் மத்தியில் இருக்கின்றனர். ராஜிவ் காந்தி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் போதுமான தண்டனைக் காலத்தை அனுபவித்துவிட்டனர். இந்த வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவும் மேற்கொண்ட அணுகுமுறையும் சரியானதே. உச்சநீதிமன்றம் 7 தமிழர் விடுதலைக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது. இதனால் அவர்கள் விடுதலையில் தாமதமாகலாமே தவிர அவர்கள் விடுதலையாவதில் எந்த ஒரு சிக்கலுமே இல்லை என்றார்.
ஒன்இந்தியா
Bookmarks