Announcement

Collapse
No announcement yet.

anbu

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • anbu

    அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
    அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.

    பிறர்க்குபகாரஞ் செய்யார், தமையண்டி னர்க்கொன்

    றீயா ரிருந்தென்ன போயென்னகாண் கச்சி யேகம்பனே.21

    காயாமரமும் வறளாங் குளமும் கல்லாவு மன்ன
    ஈயாமனிதரை யேன் படைத்தாய்? கச்சி யேகம்பனே. 19

    காய்க்காத மரமும் நீர் இன்றி வற்றிய குளமும்,
    கல்லால் ஆன பசுவும்போல் ஈயாத இந்த மனிதரை
    ஏன் படைத்தாய்?இறைவனே!

    பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
    இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
    குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
    இறக்குங் குலாமரு
    க் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே !
    -பட்டினத்தார்.

    ஆக ஈயாதரே இழிகுலத்தோர்.

  • #2
    Re: anbu

    மனிதர்கள் பலவிதம்.ஒவ்வொன்றும் ஒருவிதம்

    கருதிய நூல் கல்லாதான் மூடனாகும்
    கணக்கறிந்து பேசாதான் கசடனாகும்
    ஒரு தொழிலும் இல்லாதான் முகடியாகும்
    ஒன்றுக்கும் உதவாதான் சோம்பனாகும்
    பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்
    பேசாமல் இருப்பவனே பேயனாகும்
    பரிவு சொல்லித் தழிவினவன் பசப்பனாகும்
    பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே!

    விவேக சிந்தாமணி.

    கருத்தில் கொள்ளவேண்டிய நூற்களை கல்லாதவன் மூடனாவான்.
    அளவறிந்து பேசதெரியாதவன் மடையனாவான்.
    ஒரு தொழிலையும் செய்யாதவன் தரித்திரியனாவான்.
    ஒன்றுக்கும் உதவாதவன் வீணன் ஆவான்.
    கற்றறிந்த பெரியோர்கள் முன் தான் கொண்ட கருத்துக்களை
    பேச அஞ்சி மரத்தைப்போல் உள்ளவன் பேயனாவான்.
    உள்ளொன்று வைத்து புறமொன்று நடிப்பவன் ஏமாற்றுகாரனாவான்.
    பிறர்பசியை தன்பசி போல் கருதி இடாமல் உண்ணுபவன் பாவியாமே!

    Comment


    • #3
      Re: anbu

      பசி வந்தா பத்தும் பறந்திடும்!


      பசி வந்தா பத்தும் பறந்திடும்! சொல்லுவாங்களே
      அது என்னனு தெரியுமா?.இவைகள்தாம்.



      மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
      தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
      கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
      பசிவந்திடப் பறந்து போம்
      .

      Comment


      • #4
        Re: anbu

        மூன்று குற்றங்கள்.



        வியாசர் தான் செய்த மூன்று குற்றங்களுக்காகத் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.
        என்ன அந்த மூன்று குற்றங்கள்?

        அவர் வேண்டுதல்:

        1.இறைவனே,நீங்கள் உருவமற்றவர்,ஆனால் எனது தியானத்தில்
        நான் உங்களை உருவம் கொண்டவராகப் பாவித்து தியானம் செய்கிறேன்.
        2."நீங்கள் வாக்கிற்கும்,மனதிற்கும் எட்டாதவர்."ஆனால் உங்கள் மீது தோத்திரங்கள் பாடியுள்ளேன்.

        3."நீங்கள் எங்கும் வியாபித்திருப்பவர்."ஆனால்,நானோ பல
        திருத்தலங்களுக்கும் யாத்திரை சென்று உங்களை வழிப்பட்டு வணங்கி இருக்கிறேன்.


        "என் மீது கருணை கூர்ந்து என்னுடைய இந்த மூன்று
        குற்றங்களையும் மன்னித்து எனக்கு அருள் புரியும்படி வேண்டுகிறேன்."



        ஞானத்தின் தன்மையை உணர்ந்த ஞானிகளால் தான் இந்த வார்த்தைகளை
        கூறமுடியும்.


        எங்கும் நீக்கமற நிற்கின்ற பரம்பொருளை ஒரு வடிவத்துள்லோ அல்லது
        ஒரு எல்லையுள்லோ கற்பிப்பது மடமை.அது,இது என வார்த்தைகளால்
        சுட்டிகாட்டுவதற்கு இயலாததாகவும்,மனம் தோன்றும் இடத்திற்கு
        அப்பால் உள்ளதாலும்,எண்ணத்திற்கு எட்டா பொருளாதலாலும்,அத்தகைய
        இறையை இலக்கணத்திற்கு உட்படாததையே இலக்கணமாக கொண்ட பொருளை



        ஆரம்பநிலையில் பாமரரும் புரிந்து உணரும் வண்ணம் சுட்டி அறியத்தக்க மனதிற்கு எளிமையாக ஞானிகள் வார்த்தைகளாலும்,வடிவங்களாலும் படைத்தனர்.

        மேம்பட்ட புரிதல் இல்லையென்றால் அதுவே பாதகமானதையும் உணர்ந்தனர்.

        இதை கருத்தில் கொண்டே வியாசர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.



        சிறுகுழந்தைக்கு புலியை எவ்வாறு கற்பிப்பார்க.முதலில் வார்த்தையால் புலி என்று கூறுவார்கள்.பின்னர் அதன் படத்தை காட்டுவார்கள்.உண்மையில் அந்த வார்த்தையோ,அந்த படமோ புலி அல்ல.ஆரம்பத்தில் புரிந்துக் கொள்வதற்கே அவை அவ்வாறு கற்பிக்கப்பட்டது.

        Comment


        • #5
          Re: anbu

          புறம்போக்கு.

          காட்சிக்கு ஆதாரமாய் விளங்குவது கண்.(பொறி)
          கண்ணிற்கு ஆதாரமாய் விளங்குவது பார்வை.(புலன்)
          பார்வையை கொண்டு அறிவது மனம்.(அந்தக்கரணம்)
          இவை புறம்போக்கானவை.(வெளிபோக்குடையவை )
          இவற்றை பின்பற்றி செல்பவனும் புறம்போக்கானவன்.


          பொறி,புலன்,மனம் இவற்றை கொண்டு இவற்றின் உற்பத்தி
          ஸ்தானத்தை(இடத்தை)அறிய இயலாது.மனம்(எண்ணம்)
          தான் தோன்றும் இடத்தை அறிய முற்படும்போது அதை(எண்ணத்தை)

          "மாசற்ற கொள்கை மனதில் அடைந்தக்கால்
          ஈசனைக் காட்டும் உடம்பு"

          மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே - சிவபுராணம்

          உரை மனங் கடந்த வொருபெருவெளிமேல்
          அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ்ஜோதி -- திருவருட்பா அகவல்

          நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால்
          தனக்கொன்று மில்லை பிறப்பு. ஔவையார்.

          Comment


          • #6
            Re: anbu

            சிறந்த வாழ்க்கை

            உற்றார் உறவினரிடம் தாட்சண்யத்துடனும்,
            உறவினர் அல்லாத மற்றவரிடம் தயையுடனும்,
            மதிகேடர்களிடம் தந்திரமாகவும்.
            பண்புள்ளவர்களிடம் அன்பாகவும்,
            ஆட்சியாளர்களிடம் நீதியுடனும்,
            கற்றறிந்த பண்டிதர்களிடம் தன்னடக்கத்துடனும்,
            எதிரிகளிடம் தைரியத்துடனும்,
            பெரியவர்களிடம் பொறுமையுடனும்,
            பெண்களிடம் மதிநுட்பத்துடனும் இருக்கும்
            மிகத் திறமையான மனிதர்களால் தான்
            வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.

            Comment


            • #7
              Re: anbu

              Sri:
              Really super swamin.
              I like all the above posts.
              regs,
              nvs


              Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
              please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
              Encourage your friends to become member of this forum.
              Best Wishes and Best Regards,
              Dr.NVS

              Comment


              • #8
                Re: anbu

                ஸ்ரீ என்.வி.எஸ். ஸ்வாமின்,
                தங்களுடைய மேன்மைமிகு கருத்துக்களுக்கு அடியேனுடைய நன்றியை சமர்ப்பிக்கின்றேன்..நரசிம்ஹன்

                Comment


                • #9
                  Re: anbu

                  தேனின்
                  கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல்
                  ஆகா என்னஒரு பதப்பிரயோகம் எனது தாய்மொழிக்கு நிகர் இல்லை

                  Comment


                  • #10
                    Re: anbu

                    முத்துக்களை சேர்த்துக் கோத்த ஆரம் ”முத்தாரம்” அருமையான தொகுப்பு.

                    Comment


                    • #11
                      Re: anbu

                      முத்துக்களை சேர்த்துக் கோத்த ஆரம் ”முத்தாரம்” அருமையான தொகுப்பு.

                      Comment


                      • #12
                        Re: anbu

                        ”புறம்போக்கு” இதிலும் 2 வகையா?பேஷ் பேஷ்
                        Last edited by soundararajan50; 24-02-14, 16:32.

                        Comment


                        • #13
                          Re: anbu

                          இப்போதுதான் உம்மைபோல சிலர் நமது சபையில் விவாதத்தில் கருத்து கூரஆரம்பித்து உள்ளனர். நல்ல முன்னேற்ட்டம்தான். இதற்க்கு அடிகோலியவர் நமது என்.வி.எஸ் ஸ்வாமின் அவர்களுக்கு நன்றி. தேவரீருக்கும் நன்றி.

                          Comment

                          Working...
                          X