Announcement

Collapse
No announcement yet.

மஹா ம்ருத்யஜ்ஞ்ச ஹோமம்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மஹா ம்ருத்யஜ்ஞ்ச ஹோமம்.

    மஹா ம்ருத்யஞ்ச ஹோமம்.

    செளனகர் கூறுகிறார்.:--தீவிர வ்யாதியினாலும் , மற்றவர்களால் செய்யப்பட்ட ஆபிசார ப்ரயோகத்தினாலும்,நவகிரஹ நிலையினாலும் ஏற்படும் ச்ரமங்களுக்கும், பெரிய ஆபத்துக்களால் அவதியுரும் போதும்


    மரண பயம் சூழும் போதும் மிகப்பெரிய நோய்கள் அச்சுறுத்தும் போதும்,
    ஜாதகப்படி கிரஹ கோளாறுகளால் உபாதைகள் ஏற்படும்போதும்,வயிற்றுப்
    போக்கு, அம்மை போட்டுதல், ஏற்படும் போதும் , கர்ப்ப காலத்தில்

    வியாதிகள் ஏற்பட்டு அல்லல் படும் போதும், மே\ற்கூறியவற்றால் பணவிரயம் ஏற்படும்போதும் கெட்ட தசா புக்திகளால் கெடுதல்கள் ஏற்படும்
    போதும் வீட்டிலும், நாட்டிலும் சுபிக்ஷம் குறைவு படும்போதும்,

    கொடுமையான தரித்ர நிலையிலிருந்து விடிவு காலம் பிறக்கவும், சாஸ்வதமான ருத்ர லோக ப்ராப்தி கிடைப்பதற்கும்,,தனக்கு வந்துற்ற மற்ற
    தோஷங்களிலிருந்து நிவாரணம் பெறவும், அமங்களமான அச்சம் ஏற்படும் போதும், (போதாயனரும் கூறுகிறார்.)

    ம்ருத்யுஞ்சயருக்கு ப்ரீதிகரமான ,எல்லாவிதமான ம்ருத்யு பயத்தையும் அகற்ற வல்லதான இந்த சாந்தியை தனது சக்திக்கேற்றவாறு செய்தால் பலன் ஸித்தியாவது நிச்சயம்.

    வருஷ ஜன்ம நக்ஷத்திர நாளிலும், மாதா மாதம் வரும் ஜன்ம நக்ஷத்திர நாட்களிலும் , ஸூர்ய// சந்திர கிரஹண நாட்களிலும்,மஹா ம்ருத்யுஞ்சய
    ஹோமம் செய்யலாம்

    ஸப்த திரவ்ய பக்ஷ மஹா ம்ருத்யஞ்சய ஹோம பத்ததி.

    சீந்தில் கொடி, ஆலம்மொக்கு, ஹவிஸ், கறுப்பு எள், அறுகம் புல்,
    பால், பசு நெய், பாயஸம். பாலை த்ரிமதுரம் ஆக்க வேன்டும் எள்ளுடன் நெல் அல்லது அரிசி 1:4 என்ற விதிப்படி கலக்க வேண்டும்.

    கறுப்பு எள்ளை தனியாக அக்னியில் ஆஹூதி கொடுப்பதில்லை.. நெல்
    நாலு பங்கும் கறுப்பு எள் ஒரு பங்கும்ஆக கலந்து திலம்-வ்ரீஹியாக
    ஆஹூதிகள் அளிக்கப்படுகினறன.

    ப்ரபஞ்ச ஸார ஸார ஸங்கிரஹம் என்ற நூலும் இம்மாதிரியே கூறுகிரது.

    இல்லத்தின் ஈசான பாகத்தில் பசுஞ்சாணியால் மெழுகி கோலம் போடவும்.
    வேதிகை நிர்மாணிக்கவும். காலையில் ஸ்நானம் செய்து, மடிசார், //பஞ்சகச்சம் கட்டிக்கொள்ளவும். நெற்றிக்கு இட்டுக்கொள்ளவும். ஸந்தியாவந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாசனம் செய்து முடிக்கவும்.

    பூஜை அறையிலுள்ள ஸ்வாமியிடமும், வீட்டிலுள்ள பெரியோர்களிடமும் , குழுமியுள்ள வேதியர்களிடமும் அனுக்ஞை பெற்றுக்கொள்ளவும் ..விக்நேஸ்வர பூஜை செய்யவும். ஸங்கல்பம் : கோத்ரம்---------;

    ----------நக்ஷத்ரே ராஸெள------ஜாதஸ்ய ------------சர்மண: மம----------------நிவ்ருத்யர்த்தம் --------------ஸித்யர்த்தம்
    களூச்யாதி ஸப்த திரவ்யை: ஆசார்ய முகேன ருத்விக் முகேன ச

    செளனகோக்த ப்ரகாரேண ஸஹ போதாயநோக்த ப்ரகாரேண மஹா ம்ருத்யஞ்ச ஹோமம் கரிஷ்யே.

    விக்நேஸ்வரர் யதாஸ்தானம். கிரஹ ப்ரீதி தானம். ஹிரண்ய ரூப நாந்தி சிராத்தம், புண்யாஹ வசனம். ஆசார்ய வரணம். ருத்விக்குகள் வரணம். குறந்த பக்ஷம் ஆறு பேர். . ஆசாரியர் ஒருவர். மொத்தமேழு பேர்.

    ஆசாரியர் ஸங்கல்பம். ஸ்வ ஸூத்ரப்படி அக்னி கார்யம் செய்வதாக..
    ப்ரணீதா வரை அக்னி குண்ட கார்யங்கள். ; 336 அருகம்புல் ஸமித்தும்.
    336 சீந்தில் கொடி ஆறு அங்குல நீளத்தில். ;; 336 ஆல மர மொட்டுகள்

    அதற்கேற்றவாறு மற்ற ஹோம திரவ்யங்களும் சேகரித்து வைத்துகொண்டு
    புனித படுத்திக்கொள்ளவும்.

    ஒரே நாளில் ஏழு திரவ்யங்களால் ஹோமம் செய்யும் போது ஹோம திரவ்யங்களை அதற்கேற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். நீக்க வேண்டிய உடல் உபாதிக்கு தகுந்தவாறு ஹோம திரவ்யம் மாற்றிக்கொண்டு அவற்றை எடுத்து வைத்து கொள்ளவும்.

    அக்னி குண்டத்திற்கு கிழக்கே கும்ப ஸ்தாபனம். அலங்கரணம். ம்ருத்யஞ்சர் ப்ரதிமை வைத்து பூஜித்தல். கும்ப ஜலத்தில் வருணன் ஆவாஹனம்.
    ப்ரதிமையில் அம்ருத ம்ருத்யஞ்சயர் ஆவாஹனம். ; த்ரயம்பஹம் யஜாமஹே ---------சுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வாருகமிவ பந்த்னான் ம்ருத்யோர் முக்ஷீய மா அம்ருதாத்.

    அல்லது ஆ த்வா வஹந்து ஹரயஸ்ஸ சேதஸ: ஸ்வேதை: ரஸ்வைஸஹ கேதுமத்பிஹி. வாதாஜிதைர் பலவத்பிர் மனோஜவை: ராயாஹி சீக்ரம் மம ஹவ்யாய சர்வோம்.என்ற மந்திரம்.

    ஆவாஹனம் செய்த மந்திரத்தாலேயே கடைசியில் உத்வாஸனம் செய்யவும்.
    கும்பத்திற்கு ஷோடச உபசார பூஜை; ப்ரதிமைக்கு ஷோடச உபசார பூஜைகள்.
    ப்ராண ப்ரதிஷ்டை, முத்திரை காண்பித்தல். , ஆஸனாதி பூஜைகள்.

    ஆசாரியன் கும்பத்தை தர்பையால் தொட்ட வண்ணம் இருந்து மற்ற ருத்விக்குகளோடு ஜபம் செய்தல். ஜப மந்திரங்கள்__:- நான்கு வேதங்கள்,
    108 ஆவ்ருத்தி த்ரயம்பகம் யஜாமஹே; ஶ்ரீ ருத்ரம், சமகம்.

    புருஷ ஸூக்தம் 3 அனுவாஹம்; ரக்ஷோக்ன அநுவாஹம். ஹிரண்ய வர்ணா சுசய பாவாகா:; பவமான: ஸுவர்ஜன: ப்ருஹ்ம ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம்,ருத்ர ஸூக்தம், வருண ஸுக்தம். ம்ருத்யு ஸூக்தம், ஶ்ரீ ஸூக்தம்.

    பூ ஸூக்தம், துர்கா ஸூக்தம். க்ருத ஸூக்தம், முஞ்சாமித்வா அத்யாயம்.
    ததித்பதம் மூன்று முறை ; ஸத்யோஜாதாதி 5 மந்திரங்கள்; பஞ்ச சாந்தி.
    கோஷ சாந்தி; பரிதாநீயம்.

    ப்ருஹ்ம வரணம்; அக்னி கார்யம்—ஹவிஸ் (சரு) தயாரித்து கொள்ளவும்.
    ம்ருத்யவே த்வா ஜுஷ்டம் நிர்வபாமி.என்ற மந்திரத்தால் மூன்று முறை சருவை அக்னியில் காட்டவும்.

    மந்திரமில்லாமல் நான்காவது முறை.. ம்ருத்யவே த்வா ஜுஷ்டம் ப்ரோக்ஷ்யாமி. என்ற மந்திரத்தால் மூன்று முறை ப்ரோக்ஷணம். மந்திரமில்லாமல் ஒரு தடவை ப்ரோக்ஷணம்.

    ம்ருத்யவே த்வா ஜுஷ்டம் ச்ரபயாமி. என்ற மந்திரத்தால் மீன்டும் மூன்று தடவை அக்னியில் காட்டவும்.மந்திரமில்லாமல் நான்காவது முறை..

    ஸ்ருவத்தினால் நெய் எடுத்துக்கொண்டு ம்ருத்யவே த்வா ஜுஷ்டம் அபிகாரயாமி என்ற மந்திரத்தை சொல்லி சருவில் சிறிது நெய் விடவும். ஸ்ருவத்தில் மீதமுள்ள நெய்யை அக்னியில் விடவும்.

    மீன்டும் கீழே வைக்கப்பட்டுள்ள சருவில் நெய் விடவும்.

    ஆஜ்ய ஸம்ஸ்காரத்தை பூர்த்தி செய்யவும்.சருவையும் சேர்த்துக்கொண்டு ஆஜ்ய ஸம்ஸ்காரம். (த்ரி:பர்யக்னிகரணம் ) செய்ய வேண்டும்.

    அக்னி முகாந்தம் பூர்த்தி செய்தல்.

    அக்னி முகத்தின் நிரைவாக பக்வ ஹோமம் செய்யவும். (யாஜ்யா புரோநுயாஜ்யா ஹோமம் செய்ய வேண்டும்.

    அம்ருத ம்ருத்யஞ்சயரை அக்னியில் ஆவாஹனம் செய்ய வேண்டும்.

    அக்னீயில் ம்ருத்யஞ்சயரை பூஜை செய்தல்.
    த்ரயம்பகம் மந்திரம் சொல்லி (யாஜ்யா புரோநுவாக்யத்துடன்) ஒரு ஆஜ்ய ஆஹூதி.
    பரிதிக்குள் ஸ்விஷ்டக்ருதம் எடுத்து வைத்தல்.

    ம்ருத்யஞ்சய மந்திரங்களால் ஆஹூதிகள்.
    அந்ந ஆஹூதிகள்.:- அபைது ம்ருத்யு+சீபதோம். பரம் ம்ருத்யோ+ சீராந் ஸ்வாஹா .ம்ருத்யவே இதம் ந ம்ம. புநரவதாய (திரும்பவும் முன் சொன்னப்படி சருவை எடுத்துக்கொண்டு அடுத்த ஹோமம்.)

    ஹரிகும் ஹரந்த: + க்ரமஸ்வோம். மாசிதோ ம்ருத்யோ + விதேம ஸ்வாஹா. ம்ருத்யவே இதம் ந மம.

    ஆஜ்ய ஆஹூதிகள்;- பின் வருமாறு பஞ்ச மஹா வ்யாஹ்ருதிகளை கூறி நெய்யினால் ஐந்து ஹோமங்கள்.

    பூரக்னயே ச ப்ருதிவ்யை ச மஹதே ச ஸ்வாஹா. அக்னயே ப்ருதிவ்யை மஹத இதம் ந மம.

    புவோ வாயவே ச அந்தரிக்ஷாய ச மஹதே ச ஸ்வாஹா. வாயவே அந்தரிக்ஷாய மஹத இதம் ந மம.

    ஸுவராதித்யாய ச திவே ச மஹதே ச ஸ்வாஹா. மஹதே ச ஸ்வாஹா.ஆதித்யாய திவே மஹத இதம் ந மம.

    பூர்புவஸ்ஸுவஸ் சந்த்ரமஸே ச நக்ஷத்திரேப்யஸ்ச திக்ப்யச்ச மஹதே ச ஸ்வாஹா. சந்த்ரமஸே நக்ஷத்ரேப்யோ திக்ப்யோ மஹத இதம் ந மம.

    ஓம் பூர்புவஸ் ஸுவஸ் ஸ்வாஹா. ப்ரஜாபதயே இதம் ந மம.

    சிறப்பு த்ரவ்ய ஹோமம். ஒவ்வொரு மந்திரத்தாலும் 16 ஆஹூதிகள்.
    சிறப்பான ஏழு திரவ்யங்கள்.. 1. சீந்தில் கொடி ஸமித்து (களூசி)2. ஆலமொக்கு
    3.எள்;4. பால்;5. பாயசம். 6. அறுகம்பில். 7. நெய்.

    ஒரு சீந்தில்கொடி சமித்தையும் மும்மூன்று அறுகம்பில்லையும் பாலில் நனைத்து ஹோமம் செய்ய வேண்டும்.

    ஆசாரியன் ,ருத்விக்குகளோடு இணைந்து , ஒவ்வொருவரும் ஒவ்வொரு த்ரவ்யத்தை , பின் வரும் 21 மந்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் ஹோமம் செய்தல்.

    ஒவ்வொரு முறையும் உத்தேச த்யாகத்தோடு மந்திரங்களை சொல்ல வேண்டும்.ஒவ்வொரு மந்திரத்தின் நிறைவாகவும் ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்தத்தாம் என்ற மந்திரத்தை அனுஷங்கமாக சேர்த்து கொள்ள வேண்டும்.

    1.அபைது ம்ருத்யு ரம்ருதந்ந ஆகந் வைவஸ்வதோ நோ அபயங்க்ருநோது. பர்ணவ்வநஸ்பதே –ரிவாபி: நச்சீயதா கும்ரயிஸ் ஸசதான் நச்சசீபதி .:ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்த்ததாகும் ஸ்வாஹா ம்ருத்யுவ இதம் ந மம.

    2. பரம் ம்ருத்யோ அநுபரேஹி பந்தாயகும் யஸ்தே ஸ்வ இதரோ தேவயாநாத். சக்*ஷுஷூஸ்மதே ச்ருண்வதே தே ப்ரவீமி மா ந: ப்ரஜாகும் ரீரிஷோ மோத வீராந். ம்ருத்யோர் நச்யது ஆயுர்வர்த்ததாகும் ஸ்வாஹா. ப்ருஹஸ்பதயே அச்விப்யாம் அக்னயே ச இதம் ந மம..

    3. வாதம் ப்ராணம் மநஸாந்வார பாமஹே ப்ரஜாபதியோ புவனஸ்ய கோபா: ஸ நோ ம்ருத்யோஸ் த்ராயதாம் பாத்வகும்ஹஸோ ஜ்யோக்ஜீவா ஜரா மசிமஹி. ம்ருத்யுர் நச்யது. ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா. ப்ருஹஸ்பதயே அச்விப்யாம் அக்னயே ச இதம் ந மம.

    4. அமுத்ரபூயா தத யத்யமஸ்ய ப்ருஹஸ்பதே அபிசஸ்தேரமுஞ்ச; ப்ரத்யெளஹதா –மச்விநா ம்ருத்யு-மஸ்மாத் தேவாநாமக்னே பிஷஜா சசீபி: : ம்ருத்யுர் நச்யது. ஆயுர் வர்ததாகும் ஸ்வாஹா.
    ப்ருஹஸ்பதயே அச்விப்யாம் அக்னயே ச இதம் ந மம.

    தொடரும்
Working...
X