புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. நாடு முழுவதும் 9ம் கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
16வது லோக்சபா:
நடப்பு 15வது லோக்சபாவின் ஆட்சி காலம் ஜூன் முதல் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் மே 31ம் தேதிக்குள் 16வது லோக்சபாவிற்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, புதிய அரசு ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 16வது லோக்சபாவிற்காக நாடு முழுவதும் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் தேதி விபரத்தை இன்று தலைமை தேர்தல் கமிஷ்னர் வி.எஸ்.சம்பத் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது : லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலும் நடத்தப்பட உள்ளது; ஆந்திர சட்டசபையின் பதவி காலம் ஜூன் 2ம் தேதியுடனும், ஒடிசா சட்டசபையில் பதவி காலம் ஜூன் 7ம் தேதியுடனும், சிக்கிம் சட்டசபையின் பதவி காலம் மே 31ம் தேதியும் முடிவடைய உள்ளது; இதனால் மே 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது;நடத்தை விதிகள் உடனே அமல்:


பள்ளி பொதுத் தேர்வு, அறுவடை காலம், வானிலை ஆகியவற்றை கருத்திக் கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது; முதல் முறையாக 18 மற்றும் 19 வயது நிரம்பிய 2.4 கோடி புதிய வாக்காளர்கள் 16வது லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர். இந்த தேர்தலில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது; நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன; 2009ம் ஆண்டு தேர்தலை விட இந்த தேர்தலில் 10 கோடி பேர் புதிதாக ஓட்டளிக்க உள்ளனர்; முதல் முறையாக நோட்டோ முறை லோக்சபா தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ளது; வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் இல்லை என்ற குழப்பங்கள் ஏற்பாடாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன; 9 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது; கடந்த தேர்தலை விட 12 சதவீதம் ஓட்டுச் சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது; தலைமை செயலர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓட்டுச்சாவடிகளில் கோடை காலத்தை கருத்தில் கொண்டு குடிநீர், கழிப்பறை மற்றும் மாற்று திறனாளி வாக்காளர்கள் வந்து செல்வதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன; தேர்தல் தேதிக்கு 3 நாட்களுக்கு முன் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட ஓட்டுச்சீட்டுக்கள் வழங்கப்படும்; ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதை தவிர்க்க மீடியாக்கள், பாதுகாப்பு படைகள், வீடியோ பதிவுகள் உள்ளிட்டவைகள் மூலம் கண்காணிக்கப்படும்; வேட்பாளர்களின் செலவு கணக்கும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது;

தேர்தல் தேதிகள் :


மாநிலங்களில் 9 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தல் விபரம் :

* முதல் கட்ட தேர்தல் - ஏப்ரல் 7 - 2 மாநிலங்கள் ( 6 தொகுதிகள்)

* 2ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 9 - 5 மாநிலங்கள் ( 7 தொகுதிகள்)

* 3ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 10 - 14 மாநிலங்கள் (92 தொகுதிகள்)

* 4ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 12 - 4 மாநிலங்கள் (32 தொகுதிகள்)

* 5 ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 17 - 13 மாநிலங்கள் (122 தொகுதிகள்)

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends* 6ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 24 - 12 மாநிலங்கள் ( 117 தொகுதிகள்)

* 7ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 30 - 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ( 89 தொகுதிகள்)

* 8ம் கட்ட தேர்தல் - மே 7 - 7 மாநிலங்கள் (64 தொகுதிகள்)

* 9 ம் கட்ட தேர்தல் - மே 12 - 3 மாநிலங்கள் ( 41 தொகுதிகள்)

மாநில வாரியாக தேர்தல் தேதி விபரம் :

ஆந்திரா(2 கட்டங்கள்)- ஏப்., 30 மற்றும் மே 7
அருணாசல பிரதேசம்- ஏப்., 9
அஸ்ஸாம்(3 கட்டங்கள்) - ஏப்., 7, 12, 24
பிகார்(6 கட்டங்கள்) - ஏப்., 10, 17, 24, 30 மற்றும் மே 7, 12
சட்டீஸ்கர்(3 கட்டங்கள்) - ஏப்., 10, 17, 24
கோவா - ஏப்., 17
குஜராத் - ஏப்., 30
ஹரியானா - ஏப்., 10
இமாச்சலபிரதேசம் - மே 7
ஜம்மு-காஷ்மீர் (5 கட்டங்கள்)- ஏப்., 10, 17, 24, 30 மற்றும் மே 7
ஜார்கண்ட் (3 கட்டங்கள்) - ஏப்., 10, 17, 24
கர்நாடகா - ஏப்., 17
கேரளா - ஏப்., 10
ம.பி.,(3 கட்டங்கள்) - ஏப்., 10, 17, 24
மகாராஷ்ட்ரா(3 கட்டங்கள்) - ஏப்., 10, 17, 24
மணிப்பூர்(2 கட்டங்கள்) - ஏப்., 9, 17
மேகாலயா - ஏப்., 9
மிசோரம் - ஏப்., 9
நாகலாந்து - ஏப்., 9
ஒடிசா(2 கட்டங்கள்) - ஏப்., 10, 17
பஞ்சாப் - ஏப்., 13
ராஜஸ்தான்(2 கட்டங்கள்) - ஏப்., 17, 24
சிக்கிம் - ஏப்., 12
தமிழ்நாடு - ஏப்., 24
திரிபுரா(2 கட்டங்கள்) - ஏப்., 7, 24
உ.பி.,(6 கட்டங்கள்) - ஏப்., 10, 17, 24, 30 மற்றும் மே 7, 12
உத்திரகண்ட் - மே 7
மே.வங்கம்(5 கட்டங்கள்) - ஏப்., 17, 24, 30 மற்றும் மே 7, 12
அந்தமான் நிக்கோபார் தீவுகள் - ஏப்., 10
சண்டிகர் - ஏப்., 10
தாத்ரா நாகர்ஹவேலி - ஏப்., 30
டாமன் மற்றும் டையூ - ஏப்., 30
லட்சத்தீவுகள் - ஏப்., 10
டில்லி - ஏப்., 10
புதுச்சேரி - ஏப்., 24

மே 16-ல் ஓட்டு எண்ணிக்கை : லோக்சபா தேர்தலில் 543 தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகள் அனைத்தும் மே 16ம் தேதி எண்ணப்படும்.

இவ்வாறு தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Source: Dinamalar