Announcement

Collapse
No announcement yet.

மனிதரின் மொழிகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மனிதரின் மொழிகள்

    மனிதரின் மொழிகள் புரிந்துவிடில்....மொழி வளர்க்க... அறிவு சிறக்க... சில டிப்ஸ் !

    ' மொழி என்பது ஒரு வலிமையான ஆயுதம் . ஆனால், அது அக்குள் சிரைப்பதற்கானது அல்ல ! ' என்கிறார் எழுத்தாளர் மகா . ஸ்வேதாதேவி . மொழியின் வீரியம் எவ்வளவு என்பதை வெளிப்படுத்தவே இந்த மேற்கோள் .




    ' டெக்னிக்கல் ஸ்கில்ஸ் ' என்ற அந்த வகைத் திறன்கள் முக்கியம்தான் . ஆனால், அதைவிட முக்கியம் தொடர்புகொள்ளும் திறன் . தொடர்புகொள்வதில்கூட நன்றாகப் பரிணமிக்கிறார்கள் . ஆனால், தொடர்புகொள்ளுதலைப் பயன்படுத்தும் விதம் என்பதில்தான் தவறு நிகழ்கிறது . அதாவது, மற்றவர்கள் சொல்வதை நீங்கள் புரிந்துகொண்டீர்களா என்பதைக் காட்டிலும், நீங்கள் சொல்வதை மற்றவர்கள் புரிந்துகொண்டார்களா என்பதே முக்கியம் . நம்மில் பலர் மற்றவர் பேசுவதைப் புரிந்து கொள்கிறோம் . ஆனால், அதற்கு எதிர்வினை அளிக்க முற்படுகிறபோது தடுமாறுகிறோம் . இந்தத் தடுமாற்றம்தான், நமக்கு அவ்வளவு மொழித் திறன் இல்லை என்பதை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் .
    ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கான படிநிலைகள் நான்கு . அவை ... கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் . ஒருவர் மிகச் சிறந்த கேட்டல் திறன் உடையவராக இருந்தால், அவரால் சிறந்த பேச்சாளராக இருக்க முடியும் . சிறந்த பேச்சாளராக இருக்கும்போது, அவரால் சிறந்த படிப்பாளியாக இருக்க முடியும் .



    Source:Santhanam.K.
Working...
X