Announcement

Collapse
No announcement yet.

Legend

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Legend

    எம்.எஸ். விஸ்வநாதன் .

    இரண்டு தலைமுறைக்கு இசையில் நம்மைத் தாலாட்டிய எம்.எஸ். வி - யின் இசைக்கு இன்னும் இருக்கிறார்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள்




    உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமை இவருக்குத்தான் . எகிப்திய இசையைப் ' பட்டத்து ராணி ' பாடலும் , பெர்சியன் இசையை ' நினைத்தேன் வந்தாய் நூறு வயது 'விலும் , ஜப்பான் இசையைப் ' பன்சாயி. காதல் பறவை 'களிலும் , லத்தீன் இசையை ' யார் அந்த நிலவிலும் ', ரஷ்ய இசையைக் ' கண் போன போக்கிலே கால் போகலாமா 'விலும் , மெக்சிகன் இசையை ' முத்தமிடும் நேரமெப்போ ' பாடலிலும் கொண்டுவந்தார் !


    ' நெஞ்சில் ஓர் ஆலயம் ' படத்தில் இடம்பெற்ற ' முத்தான முத்தல்லவோ ' பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல் . ' நெஞ்சம் மறப்பதில்லை ' பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது !


    Source:K.Santhanam
Working...
X