' நீங்கள் நோயாளியா ? எங்களிடம் வாருங்கள் ... நாங்கள் உங்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்கிறோம் ' என்று விளம்பரப்படுத்த முடியாது . ' ஆம்... நான் நோயாளி ' என்று யார் தானாகவே முன்வந்து ஒப்புக்கொள்வார்கள் . அதிலும் இந்தியர்களின் மனப்போக்கு இந்த விஷயத்தில் உலகப் பிரசித்தம் . ' நான் மரணமற்றவன் .என்னைச் சுற்றி இருப்பவர்களுக்குத்தான் மரணம் நிகழும் . நான் சிரஞ்சீவி ! ' என்ற மனநிலையுடனேயே வளைய வருபவர்களிடம் எந்தப் பருப்பும் வேகாது என்று அவநம்பிக்கைக் குரல்கள்தான் எழுந்தன . ' மாத்தி யோசி ' தத்துவம்தான் அப்போது அப்போலோவின் துணைக்கு வந்தது . ' நோயாளிகள்தான் மருத்துவமனைக்குச் செல்வார்கள் ' என்பது பொதுவிதி . ' தன் ஆயுள் முழுக்க நடை உடையுடன் ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள் , அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் மகிழ்ச்சியுடன் உலாவுவார்கள் என்பது புது விதி ' என்று விளம்பரப்படுத்தினார்கள் . இப்போது அப்போலோ எப்போதும் ஹாஸ்பிட்டல் ஃபுல் !


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends