ஒரு கிராம் சிந்தனை !

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends



Innovate -- இந்த வார்த்தைக்கு ' எதையேனும் புதிதாகக் கண்டு பிடிப்பது அல்லது அறிமுகப்படுத்துவது ' என்று அர்த்தம் சொல்கிறது அகராதி . அர்த்தம் ஐந்து வார்த்தைகளுக்குள் அடங்கிவிட்டது . ஆனால் , அதன் நீள அகல விஸ்தீரணம் எந்தக் கற்பனை எல்லைகளிலும் அடங்காதது


* மாருதி சுஸுகி நிறுவனம் தான் தயாரிக்கும் கார்களின் எடையைக் குறைக்க முடிவெடுத்தது . கிட்டதட்ட 2,500 உதிரி பாகங்களைக்கொண்டு தயாரிக்கப்படும் காரின் எடையை அசெம்ப்ளிங் யூனிட் மட்டும் நினைத்தால் குறைக்க முடியாது . அதேசமயம் , எல்லா உதிரி பாகங்களின் எடையைச் சகட்டுமேனிக்கும் குறைக்க முடியாது . அப்படிக் குறைத்தால் காரின் பெர்ஃபார்மன்ஸ் சீர்குலைந்துவிடும் . பிரச்னைக்கு தீர்வு தேடி முட்டிக்கொண்டு இருந்தபோது , ஒருவர் மூளையில் பல்ப் . ' 2,500 உதிரி பாகத் தயாரிப்பாளர்களிடமும் அவரவர்கள் தயாரித்து அனுப்பும் பாகங்களில் ஒரே ஒரு கிராம் எடையைக் குறைத்துத் தயாரிக்கச் சொன்னால் என்ன? ' சொன்னார்கள் . காரின் எடையில் 2.6 கிலோ எடை குறைந்தது .
பெர்ஃபார்மன்ஸும் மைலேஜும் அதிகரித்தது . அந்த ஒரு கிராம் சிந்தனைதான் இன்னோவேஷன் !


Source:K.Santhanam