Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீ சௌந்தரராஜன் சாரிடமும் ஸ்ரீ நரசிம்ம&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீ சௌந்தரராஜன் சாரிடமும் ஸ்ரீ நரசிம்ம&

    தங்கள் மூவரில் தயவு செய்து யாரேனும் எனக்கு விளக்கம் அளிக்க முன் வர வேண்டும். சதுர்மாஸ்ய புண்ணிய காலம் பற்றியும் அதன் விரதங்களை பற்றியும் அதன் மஹிமை பற்றியும் நான் அறிய விரும்புகிறேன். எனக்கு கடைகளில் புத்தகம் கிடைக்கவில்லை. NETல், விரதம் இருந்தார்கள் என்று சொல்கிறார்களே தவிர மற்ற விளக்கம் எதுவும் கிட்டவில்லை. தாங்கள் மூவர்தான் என் கடைசி முயற்சி. உதவுவீர்களா?
    நன்றியுடன் நமஸ்காரம்
    radhakrishna iyer

  • #2
    Re: ஸ்ரீ சௌந்தரராஜன் சாரிடமும் ஸ்ரீ நரசிம்&amp

    அன்புள்ள ராதாகிருஷ்ணன் சார் அவர்களுக்கு,
    இன்டர்நெட்டில் தேடி சாதுர்மாஸ்ய புண்ய காலத்தை பற்றி அறிந்ததகவல்களைபகிர்ந்து கொள்கிறேன்.
    இதற்கு மேலும் தகவல்கள் கிடைத்தால் இங்குபகிர்ந்து கொள்கிறேன்.
    வரதராஜன்

    சாதுர்மாஸ்யத்தின் முக்கியத்துவம்
    சாதுர்மாஸ்யம் என்றால் என்ன?. பாகம்-1



    சாதுர்மாஸ்ய விரத விதானம்
    குந்தியின் மைந்தனான* அர்ஜூனன், ஸ்ரீ கிருஷ்ணரிடம் - "ஹே ! மதுசூதனா ! பகவான் மஹாவிஷ்ணுவின் சயன (நித்திரை) விரதத்தை எவ்வாறு நியமத்துடன் கடைப்பிடிப்பது என்பதை விவரமாக தயவுகூர்ந்து கூறுங்கள் " என்று பணிவுடன் கேட்டான்.


    அதைக் கேட்டதும் ஸ்ரீ கிருஷ்ணர் - " ஹே அர்ஜூனா, மஹாவிஷ்ணுவின் சயன (நித்திரை) விரதத்தை பற்றி விஸ்தாரமாக கூறுகிறேன். நீ அதை கவனமாக தியானப்பூர்வத்துடன் கேட்டு கிரகித்துக்கொள்" - என்றார். பின், கீழ்க்கண்டவாறு கூறலானார்.

    "ஒவ்வொரு வருடமும், சூர்ய நாராயணர் (சூரியன்) கடக ராசியில் பிரவேசிக்கும் பொழுது, மஹாவிஷ்ணு யோக* நித்திரையில் ஆழ்ந்து, சூரிய தேவர் துலாராசியில் பிரவேசிக்கும் பொழுது விழித்து எழுகிறார். அதிக* மாசம் (ஒவ்வொரு அமாவாசைக்கு மறு நாளும் அடுத்த மாதம் துவங்குவதாகக் கருதும் சந்திரமானன பஞ்சாங்கத்தைப் பின்பற்றுவோருக்கு, இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை வருடத்திற்கு பதின்மூன்று மாதங்கள் வரும். அதாவது, ஏதாவது ஒரு மாதத்தில், இரண்டு அமாவாசைகள் வரும். இந்த கூடுதல் மாதம் 'அதிக மாதம்' எனப்படும்) வந்தாலும் இவ்விதிப்படி மாறாமல் நடக்கும்.

    இவ்விதிப்படி மற்ற தேவதைகள் நித்திரையில் ஆழ்ந்து விடாமல் இருக்க வேண்டும். ஆஷாட மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியன்று, விதி முறைப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று பகவான் மஹாவிஷ்ணுவின் பிரதிமையைச் (அதாவது சிலா ரூபத்தில் மூர்த்தியாக) செய்து, சாதுர்மாஸ்ய விரதத்தை நியமத்துடன் கடைப்பிடிக்க வேண்டும். அன்று முதலில் விஷ்ணு பிரதிமைக்கு அபிஷேக ஆராதனை செய்து, வெள்ளை வஸ்த்ரம் அணிவித்து பட்டு மஞ்சத்தில் நித்திரைக் கோலத்தில் வைக்க வேண்டும். பின் தூபம், தீபம், நைவேத்யத்துடன் பூஜை செய்ய வேண்டும். பூஜையை சாஸ்த்ரம் அறிந்த பண்டிதர் அல்லது பிராமணர்கள் மூலம் நடத்துவது சிறப்பானதாகும்.

    அதன்பின் பகவான் மஹாவிஷ்ணுவிடம் - "ஹே பகவானே!, நான் தங்களை சயனத்தில் (யோக நித்திரையில்) ஆழ்த்துகிறேன். நீங்கள் துயில் கொள்வதால், இந்தப் பிரபஞ்சமே துயிலில் ஆழ்ந்து விடுகிறது. ஹே பகவானே!, தாங்கள் நான்கு மாதங்கள் நித்திரை கொள்ளும் போது, நான் அனுசரிக்கும் சாதுர்மாஸ்ய விரதத்தில் எவ்வித பங்கமும், இடையூறும் வராமல் காத்து அருளுங்கள் " என்று இருகரம் கூப்பி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    இவ்விதமாக விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்து, பின் தூய பாவத்துடன் ஸ்நானம் முதலியவற்றைச் செய்தல் வேண்டும். (வட இந்தியாவில் சில பிரிவினர், ஸ்ரீவிஷ்ணுவை யோக நித்திரையில் சயனிக்கச் செய்வதால் அவ்வாறு செய்த பின்பே ஸ்நானம் முதலியவற்றைச் செய்கிறார்கள்).

    பகவான் மஹாவிஷ்ணுவின் சாதுர்மாஸ்ய விரதத்தை தொடங்குவதற்கு ஐந்து கால வர்ணனையை கொடுத்துள்ளனர். தேவசயனி ஏகாதசியிலிருந்து தேவோத்தானி (துயில் எழும்) ஏகாதசி வரை சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். துவாதசி, பூர்ணிமா, அஷ்டமி அல்லது சங்க்ராந்தியிலிருந்து விரதத்தை தொடங்கி, கார்த்திகை மாதம் சுக்ல பட்சத்தில் வரும் துவாதசியில் நிறைவு செய்ய வேண்டும். இவ்விரதத்தினால் சகல பாபங்களும் அழிந்து மஹாவிஷ்ணுவின் பூரண கடாக்ஷம் கிட்டும். எவரொருவர் ஒவ்வொரு வருடமும் சாதுர்மாஸ்ய விரதத்தை நியமத்துடன் கடைப்பிடிக்கிறாரோ, அவர் இவ்வுலக வாழ்க்கைக்குப் பின், சூரிய தேவருக்கு இணையாக, தெய்வீகமான விமானத்தில் அமர்ந்து விஷ்ணு லோகத்தை அடைவர்.

    "ஹே ராஜனே!, இவ்விரத நாட்களில் செய்யப்படும் பிரத்யேகமான தானங்களின் பலன்களை அறிந்து கொள்வாயாக,

    எவர், ஸ்ரீவிஷ்ணுவின் ஆலயத்தில் பல்வேறு வர்ணங்களில் பூ வேலைப்பாடுகள் செய்த (அ) பின்னிய வஸ்திரங்களை சமர்ப்பணம் செய்கின்றனரோ, அவர்கள் ஏழு ஜென்மங்கள் பிராமணர்களாக பிறவி எடுப்பர்.

    சாதுர்மாஸ்ய விரத நாட்களில், யாரொருவர், பகவான் மஹாவிஷ்ணுவிற்கு தயிர், பால், நெய், தேன் மற்றும் வெல்லம் (மிஸ்ரி) ஆகிய பஞ்ச அமிர்தங்களால் அபிஷேகம் செய்விக்கிறாரோ, அவர் பாக்கியசாலியாக அனைத்து சுகங்களையும் அனுபவிப்பார்.

    இந்நாட்களில் எவரொருவர் சிரத்தையுடன் பூமி தானம், ஸ்வர்ண தானம், தக்ஷிணை ஆகியவற்றை பிராமணர்களுக்கு அளிக்கின்றாரோ, அவர் ஸ்வர்க்க லோகத்தில் இந்திரனுக்கு சமமாக, அனைத்து சுக போகங்களையும் அடைவர்ர்.

    எவரொருவர் தங்கத்தால் மஹாவிஷ்ணுவின் பிரதிமையை செய்து, தூபம், தீபம், புஷ்பம், நைவேத்யத்துடன் பூஜை செய்கிறாரோ, அவர் இந்திர லோகத்தில் அள்ள அள்ள குறையாத சுக போகங்களுடன் வாழ்வர்.

    சாதுர்மாஸ்ய தினங்களில் எவரொருவர் நித்தமும் விஷ்ணுவிற்கு துளசி தளத்தால் (இலை) அர்ச்சனை செய்கிறாரோ, அவர் இவ்வுலக வாழ்வுக்குப் பின் ஸ்வர்ண புஷ்பக விமானத்தில் விஷ்ணு லோகத்தை அடைவர்.

    சாதுர்மாஸ்ய தினங்களில் எவரொருவர் பகவான் மஹாவிஷ்ணுவிற்கு தூபம், தீபத்துடன் பூஜை செய்கின்றாரோ, அவர் வற்றாத தன லாபம் பெறுவார்.

    தேவசயனி ஏகாதசியிலிருந்து, கார்த்திகை மாத ஏகாதசி வரை விஷ்ணுவிற்கு பூஜை செய்பவர், இவ்வுலக வாழ்க்கைக்குப் பின் விஷ்ணுலோகத்தை அடையும் பிராப்தியை பெறுவர்.

    சாதுர்மாஸ்ய விரத நாட்களில், மாலையில் விளக்கேற்றும் வேளையில் தேவர்களுக்கும், பிராமணர்களுக்கும் தீப தானம் செய்பவர்களும், பிராமணர்களுக்கு தங்க பாத்திரத்தில் வஸ்த்ர தானம் தருபவர்களும் விஷ்ணு லோகத்தை அடைவர்.

    சாதுர்மாஸ்யத்தில், பக்தி பூர்வத்துடன் பகவானின் திரு நாம ஸ்மரணையுடன் மஹாவிஷ்ணுவின் பாத கமலமே தஞ்சம் என்று சரணாகதி அடைபவர்கள், பிறப்பு இறப்பு என்னும் இந்த மாய சக்ரத்திலிருந்து விடுதலை அடைவர்.

    இவ்விரத காலங்களில், விஷ்ணு ஆலயத்தில் பிரதி தினம் 108 முறை காயத்ரி மந்திர ஜபம் செய்பவர்கள், தங்களின் பாவங்கள் உடனுக்குடன் விலகப் பெறுவர்.

    எவரொருவர் இவ்விரத காலத்தில் புராணங்கள், தர்ம சாஸ்த்ரம் ஆகியவற்றை கேட்கின்றாரோ, வேத அத்யனனம் செய்யும் பிராமணர்களுக்கு வஸ்த்ர தானம் செய்கிறாரோ, அவர் வள்ளல், தனவான், பாண்டித்யம் மற்றும் யசஸ்வியாக பிறவி எடுக்கும் பேறு பெறுகின்றார்.

    பகவான் மஹாவிஷ்ணு அல்லது சிவனின் திருநாமத்தை இடைவிடாமல் ஸ்மரணம் செய்து, நிறைவில் விஷ்ணு அல்லது சிவ பிரதிமையை தானம் செய்பவர், தம் பாபங்களிலிருந்து விடுதலை பெற்று குணவானாக மாறுவர்.

    விரத காலத்தில் நித்தமும் சூரிய நாராயணருக்கு அர்க்யம் கொடுப்பதுடன் நிறைவில் கோதானமும் செய்பவர் நோய் நொடி அண்டாத ஆரோக்கியம், தீர்க்காயுள், கீர்த்தி, தனம் மற்றும் பலத்துடன் கூடிய ஆனந்த வாழ்வு ஆகியவற்றைப் பெறுவர்.

    சாதுர்மாஸ்யத்தில் எவர் காயத்ரி மந்த்ர ஜபத்துடன் தில ஹோமம் செய்வதுடன், சாதுர்மாஸ்ய முடிவில் எள் தானம் செய்கிறாரோ, அவர் தமது சர்வ பாபங்களும் அழியப் பெறுவதுடன், திட ஆரோக்கியம், நன்னடத்தையுள்ள சந்தானப் பிராப்தி கிட்டப் பெறுவார்.

    எவரொருவர் சாதுர்மாஸ்ய விரத காலத்தில் அன்னத்தால் ஹோமம் செய்வதுடன், முடிவில் நெய், கடா, மற்றும் வஸ்த்ரம் ஆகியவற்றைத் தானம் செய்கிறாரோ, அவர் ஐஸ்வர்யங்களை அடையும் பாக்யம் பெறுவார்.

    எவரொருவர் துளசியை மாலையாக அணிவதுடன், அதை, விரத* முடிவில் பகவான் மஹாவிஷ்ணுவின் அம்சமான பிராம்மணருக்கு தானம் அளிக்கிறாரோ, அவர் விஷ்ணுலோகத்தை அடைவார்.

    யார், சாதுர்மாஸ்ய விரத காலத்தில் பகவான் யோக நித்திரையில் ஆழ்ந்த பிறகு, பகவானின் மஸ்தகத்தில் நித்யம் பால் அபிஷேகம் செய்வதுடன், நிறைவு நாளில் ஸ்வர்ணத்தால் ஆன தூர்வாவை (அருகம்புல்) தானம் செய்து பகவானிடம் " ஹே தூர்வே!, பூமியில் உன் வேரானது விரிந்து பரந்துள்ளதோ, அதே மாதிரி எனக்கும் என்றும் வெற்றியுடன் அமரனாக வாழும் புத்ர சந்தானத்தை அருள்வீர்" - என்று பிரார்த்தனை செய்கிறாரோ, அவர் சந்தானப் ப்ராப்தியுடன் சகல பாபங்களிலிருந்தும் விடுதலை அடைந்து இறுதியில் ஸ்வர்க்கத்தை அடைவார்.

    எவர் பகல் முழுவதும், சிவன் அல்லது விஷ்ணுவின் மீது பஜனை பாடல்களை பாடி துதிக்கிறாரோ, அவர் இரவிலும் கண்விழித்து பாராயணம் செய்த புண்ணிய பலனை பெறுகிறார்.

    சாதுர்மாஸ்ய விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு உன்னதமான த்வனியை (சப்தத்தை) எழுப்பும் மணியை தானம் செய்வதுடன், - "ஹே பகவானே, ஹே ஜகதீஸ்வரா !, தாங்கள் சகலருடைய பாபங்களையும் நாசம் செய்து அழிப்பவர். செய்யக்கூடாத காரியங்களை செய்ததால் விளைந்த என் பாபங்களை நாசம் செய்து என்னை ரட்சித்து காப்பீர்." - என்று துதித்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    சாதுர்மாஸ்ய விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் பிராமணர்களுக்கு தாம்பூலம் அளிப்பவர்கள் (சரணாம்ருத் பான்) சகல பாபங்கள் மற்றும் துக்கங்களிலிருந்து விடுதலை, நீண்ட ஆயுள், லக்ஷ்மீ யோகம் ஆகியவற்றை பெறுவர்.

    சாதுர்மாஸ்ய காலத்தில் பிரஜாபத்யம் மற்றும் சாந்த்ராயண விரத வழிமுறைகளின் படியும் விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

    பிரஜாபத்ய விரதம் பன்னிரண்டு தினங்களில் பூர்த்தி செய்கின்றனர். விரத ஆரம்பத்தில் முதலில் மூன்று நாட்கள் பன்னிரண்டு கவளம் (கைப்பிடி) உணவை பிரதி தினம் உட்கொள்கின்றனர். அடுத்த மூன்று நாட்கள் இருபத்தாறு பிடி உணவை பிரதி தினம் உட்கொள்கின்றனர். அதை அடுத்த மூன்று நாட்கள் இருபத்து எட்டு பிடி உணவை பிரதி தினம் உட்கொள்கின்றனர். கடைசி மூன்று நாட்கள் உணவில்லாமல் உபவாசம் இருப்பது மரபு வழக்கமாக இருக்கிறது. இவ்விரதத்தை மேற்கொள்வதால், மனதின் நியாயமான ஆசை, அபிலாஷைகள் (மனோகாம்யம்) பூர்த்தி ஆகிறது.

    ப்ராஜபத்ய விரதம் மேற்கொள்ளும் சாதகன் அவ்விரதத்துடன் சாதுர்மாஸ்ய விரத தார்மீக கடமைகளான பூஜை, ஜபம், தானம், சாஸ்த்ரங்கள் அத்யயனம் செய்தல், பஜனை, கீர்த்தனை ஆகியவற்றையும் செய்ய வேண்டும்.

    ஹே அர்ஜூனா!, இதே மாதிரி சாந்த்ராயண விரதமும் கடைப்பிடிக்கப் படுகிறது. சாந்த்ராயண விரத வழி முறைகள் சொல்லுகிறேன். கேள் - இவ்விரதம் மாதம் முழுவதும் அனுஷ்டிக்கப் படுகிறது. பாபங்களிலிருந்து நிவர்த்தி பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் இவ்விரதம் தொடக்கத்தில் வளர்ந்து பின்னர் தேய்ந்து நிறைவு பெறுகிறது. விரத வழிமுறைப்படி அமாவாசை அன்று ஒரு கைப்பிடி, ப்ரதமையில் இரண்டு கைப்பிடி, த்விதீயையில் மூன்று கைப்பிடி உணவு இப்படியாக பெளர்ணமி தினத்திற்கு முன்பு பதினான்கு கைப்பிடி உணவும், பெளர்ணமி தினத்தன்று பதினைந்து கைப்பிடி உணவும் உட்கொள்ள வேண்டும்.

    பின்னர் தேய்பிறையில், பெளர்ணமி தினத்திற்கு பின் பதினான்கு, பதின்மூன்று, பன்னிரண்டு, பதினொன்று கைப்பிடி இவ்வரிசையில் உணவு உட்கொள்ளும் அளவை பிரதி தினம் குறைத்துக் கொண்டு வர வேண்டும்.

    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் - "ஹே அர்ஜூனா!, பிரஜாபத்யம் மற்றும் சாந்த்ராயண விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, இவ்வுலகில் தனப்பிராப்தி, பூர்ண ஆரோக்யத்துடன் கூடிய திடகாத்திரமான சரீரம், கடவுளின் பரிபூரணமாக க்ருபை ஆகியவை கிட்டுகிறது. தாமிரப் பாத்திரம், வஸ்த்ரம் போன்றவற்றை தானம் அளிப்பதும் சாஸ்த்ரத்தில் வழக்கமாக கூறப்பட்டுள்ளது. சாதுர்மாஸ்யத்தின் நிறைவில் வேத பண்டிதர்கள் அல்லது பிராமணர்களுக்கு மனநிறைவான தக்ஷிணை அளிப்பதும் வழக்கமாக உள்ளது.

    சாதுர்மாஸ்ய விரதத்தை நிறைவு செய்தபின் தான் கோதானம் செய்ய வேண்டும். கோதானம் செய்ய இயலாதவர்கள் அதற்கு பதிலாக வஸ்த்ர தானம் அவசியம் செய்ய வேண்டும்.

    எவரொருவர் சாதுர்மாஸ்ய விரதகாலத்தில் ஒவ்வொரு நாளும் பிராமணர்களுக்கு நமஸ்கார வந்தனம் செய்கிறாரோ, அவருக்கு வெற்றிகரமான வாழ்க்கை அமைவதுடன், சகல பாபங்களிலிருந்தும் முக்தி கிட்டுகிறது.

    சாதுர்மாஸ்ய விரதம் நிறைவு ஆனவுடன் பிராம்மண போஜனம் செய்விப்பவருக்கு ஆயுள் விருத்தி, தன விருத்தி கிட்டும்.

    எவரொருவர் அலங்கரிக்கப்பட்ட கன்றுடன் கூடிய கபில (பழுப்பு நிற) வகை பசுவை வேதம் ஓதும் பிராமணருக்கு தானம் செய்கிறாரோ, அவர் ஆயுள் முழுவதும் சக்ரவர்த்தியாக வாழும் பாக்கியம் கிட்டும். மேலும் அவர், அரசனைப் போன்ற புத்ரர்களைப் பெறுவதோடு ஸ்வர்க்க லோகத்தில் பிரளயத்தின் முடிவு வரை இந்திரனுக்குச் சமமாக ராஜ்யத்தை ஆள்வார்.

    எவரொருவர் சூர்ய பகவான் மற்றும் விக்ன விநாயகருக்கு தினமும் நமஸ்கார வணக்கம் செய்கிறாரோ, அவர் ஆயுள் வளர்ச்சி, செல்வ வளர்ச்சி பெறுவர். விக்ன விநாயகரின் கிருபையால் மனோ வாஞ்சித பலனும் (விரும்பியவற்றை அடைவது) கிட்டப் பெறுவார்.

    விநாயகர் மற்றும் சூரிய பகவானின் பிரதிமையை பிராமணர்களுக்கு தானம் அளிப்பதால் எடுத்த காரியங்கள் ஜயத்துடன் நிறைவடையும்.

    எவரொருவர் இரண்டு ருதுக்களிலும், மஹாதேவரின் ப்ரீதிக்காக திலம் (எள்), வஸ்த்ரம் மற்றும் தாமிர பாத்திரம் ஆகியவற்றை தானம் செய்கிறாரோ, அவர் இல்லத்தில் ஆரோக்கியமான அழகான சிவன் மீது பக்தி பூண்ட புத்ர பிராப்தியை பெறுவார்.

    எவரொருவர் பகவான் விஷ்ணு யோகநித்திரையில் ஆழ்ந்த பிறகு சக்திக்கேற்றவாறு வஸ்த்ரம், திலம் (எள்) இவற்றுடன் ஸ்வர்ணதானமும் செய்கிறாரோ, அவரின் அனைத்து பாபங்களும் நாசம் அடைகிறது. அவர் இவ்வுலகத்தில் இகபோகத்துடன் வாழ்வதுடன் மோட்ச பிராப்தி கிட்டப் பெறுவார்.

    சாதுர்மாஸ்ய விரத நிறைவு ஆனவுடன் எவர் படுக்கை விரிப்பு அல்லது படுக்கையைத் தானம் செய்கிறாரோ, அவர் அளவில்லாத சுகம் பெறுவதுடன், குபேரனைப் போன்ற தனவான் ஆகும் யோகத்தையும் பெறுகிறார்.

    வர்ஷ ருது காலத்தில் கோபி சந்தன தானம் பகவானுக்கு ப்ரீதி அளிக்கிறது. சாதுர்மாஸ்யத்தில் ஒரு வேளை உணவு உட்கொள்பவர், பசியால் வாடுபவர்களுக்கு அன்னம் அளிப்பவர், தரையில் நித்திரை செய்பவர், தமது அபீஷ்டங்கள் நிறைவேறப் பெறுவர். சாதுர்மாஸ்யத்தில் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவர் அனேக நற்பலன்களைப் பெறுவர். சிராவண மாதத்தில் காய்கறிகள், பழம், பாத்ரபதத்தில் தயிர், அஸ்வின் மாதத்தில் பால், கார்த்திகை மாதத்தில் பருப்பு வகைகள் இவற்றை தியாகம் செய்தால் (சாப்பிடாமல் இருந்தால்) நோய், நொடியில்லாத பூரண ஆரோக்கியம் கிட்டப் பெறுவர்.

    சாதுர்மாஸ்ய விரதம் கடைபிடிப்பதன் முடிவில் உத்யாபனம் (இறைவனை இருப்பிடத்திற்கு எழுந்தருளச் செய்தல்) செய்ய வேண்டும். பகவானிடம் நித்திரையை தியாகம் செய்து விழித்தெழ வேண்டுவதற்கு முன் பூஜை செய்ய வேண்டும். இந்த நல்வேளையில் பாரபட்சமில்லாத (நிர் அபிமானி), வித்வானான* பிராமணருக்கு தன் சக்திக்கு இயன்ற அளவு தானம், தக்ஷிணை அவர் ஆனந்தத்தால் மனநிறைவு பெறும் அளவு அளிக்க வேண்டும்.

    ஹே பாண்டு நந்தனா !, தேவசயனி ஏகாதசி மற்றும் சாதுர்மாஸ்யத்தின் மஹாத்மியம், மிகுந்த புண்யத்தை அளிக்கும் பலன் கொண்டது. இதைப்படிப்பதாலும், கேட்பதாலும் மன நோய்களிலிருந்து அமைதி பெறுவதோடு, பகவான் விஷ்ணுவின் மீதான நிஷ்டையும், பக்தியும் பன்மடங்கு வளரப் பெறுவர்.

    கதாசாரம்
    சாதுர்மாஸ்ய விரதம், பகவான் மஹாவிஷ்ணுவின் க்ருபா கடாக்ஷம் பெறுவதற்காக நான்கு மாதங்கள் மேற்கொள்ளப்படும் விரதமாகும்.

    தேவசயனி ஏகாதசியிலிருந்து தேவோத்தானி ஏகாதசி வரை இவ்விரதத்துடன் இணைக்கப் பெறுவ*தால் பகவான் விஷ்ணுவின் மீதான நம்முடைய பக்தி, நம்பிக்கை உறுதி பெறுகிறது.

    சாதுர்மாஸ்ய நான்கு மாதமும் பகவான் ஸ்ரீ ஹரி நித்திரையில் ஆழ்ந்திருப்பதால், அச்சமயம் சுபமங்கள காரியங்களை விலக்க வேண்டும்.

    சுப மங்கள காரியங்கள் தேவோத்தானி ஏகாதசியிலிருந்து மீண்டும் தொடங்கலாம்.

    ===========================================================



    பாகம்-2

    ஆஷாட(ஆடி) சுக்ல தசமியிலிருந்து கார்த்திகை சுக்ல பௌர்ணமி வரையிலான நான்கு மாத காலம் சாதுர்மாஸ்ய புண்ணிய சுபகாலம் எனப்படும். சிராவணம், பாத்ரபாதம்(புரட்டாசி), ஆஸ்வீனம்(ஐப்பசி), கார்த்திகை ஆகிய* நான்கு மாதங்கள் இதில் அடங்கும். இந்த நான்கு மாதங்கள் திரு மஹாவிஷ்ணுவின் வழிபடுவதற்கு மிகவும் உகந்ததாகவும், விரைவில் பலன் கிட்டக் கூடியதாகவும் கருதப்படுகிறது.

    மஹாவிஷ்ணுவின் வராஹ அவதாரத்தின் பெருமையை விவரிக்கும் வராஹ புராணத்தில், சாதுர்மாஸ்யத்தின் மகத்துவம் பற்றி வராக மூர்த்தியும்,பூமா தேவி இடையே ஒரு ருசிகரமான சம்பாஷணை கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை, பூமாதேவி, அறியாமை, அற்ப ஆயுள்,பிறவிப் பிணி இவற்றுடன் கலியுகத்தில் பிறந்தவர்களைப் பற்றி மிகவும் கவலைப்பட்டு, சிந்தனையுடன் வராகமூர்த்தியை அணுகி, - "பிரபு! இவர்கள் கலியுகத்தில் தங்களுடைய குறைகளிலிருந்து பூரணமாக விடுபட்டு நலமுடனும், வளமுடனும் வாழ தாங்கள் தான் வழி காட்ட வேண்டும். இக்கலியுகத்தில் பிறவி எடுத்த அனைவரின் நிறை, குறைகளை தாங்கள் நன்கு அறிவீர். ஆகையால் அதிக சிரமமில்லாமல் அதே சமயம் முழு பலனை அளிக்கக்கூடிய பிரார்த்தனை முறையை அருளி இவர்களை ரட்சியுங்கள்" என்று வேண்டி நின்றாள்.

    அதைக் கேட்ட ஸ்ரீ வராகமூர்த்தி அருள் ததும்பும் புன்னகையுடன் - " தேவி, வருடத்தில் நான்கு மாதங்கள் புண்ணிய சுபகாலமாக கருதப்படுகிறது. இந்த சுபகாலத்தில் செய்யப்படும் தானம், விரதம், ஜபம், ஹோமம் அனேக நன்மைகளை தரவல்லது. மற்ற மாதங்களில் செய்யப்படும் புண்ணிய காரியங்களை விட, இந்த நான்கு மாத காலத்தில் செய்யப்படும் நற்செயல்கள் பலமடங்கு பலன்களை அளிக்கும்." என்று அருளினார்.

    अस्ति प्रियतमः कालः चातुर्मास्याभिधो मम ।
    दानं व्रतं जपो होमः तत्रानन्तगुणं स्मृतम् ।। वराह 1.16
    मासेष्वन्येषु यत्किञ्चित् क्रियते मम तोषणम् ।
    ततोप्यनन्तगुणितं चातुर्मास्ये न संशयः ।। वराह 1.17
    அஸ்தி ப்ரியதம​: கால​: சாதுர்மாஸ்யாபி⁴தோ⁴ மம |
    தா³னம்ʼ வ்ரதம்ʼ ஜபோ ஹோம​: தத்ரானந்தகு³ணம்ʼ ஸ்ம்ருʼதம் || வராஹ 1.16
    மாஸேஷ்வன்யேஷு யத்கிஞ்சித் க்ரியதே மம தோஷணம் |
    ததோப்யனந்தகு³ணிதம்ʼ சாதுர்மாஸ்யே ந ஸம்ʼஸ²ய​: || வராஹ 1.17
    இதைக் கேட்டு பூமா தேவி - " ஹே பிரபு, பன்னிரண்டு மாதங்களில் ஏன் இந்த நான்கு மாதங்கள் மட்டும் புண்ணிய மாதங்களாக கொள்ளப்படுகிறது.? தயவு செய்து அதற்கான காரணத்தை விரிவாக எடுத்துரைக்க வேண்டும்." என்று வினவினார்.

    ஸ்ரீ வராகர் அதற்கு, தேவி கேள் - "ஆஷாட (ஆடி) மாதத்திலிருந்து தொடங்கி மார்க்கசீர்ஷ (மார்கழி) மாதம் வரை உள்ள ஆறு மாத காலம் தட்சிணாயனமாக*வும், புஷ்ய (தை) மாதத்திலிருந்து ஜேஷ்ட (ஆனி) மாதம் வரை உள்ள ஆறு மாத காலம் உத்தராயண புண்ய காலமாகவும் அழைக்கப்படுகிறது. பூமியின் இந்த ஒரு வருட காலமானது தேவர்களுக்கு ஒரு நாளாகும். அந்த நாளில் புஷ்ய மாதத்திலிருந்து ஜேஷ்ட மாதம் வரையிலான காலம் நாளின் பகல் பொழுதாகவும், ஆஷாட மாதத்திலிருந்து மார்க்கசீர்ஷ மாதம் வரையிலான காலம் நாளின் இரவுப் பொழுதாகவும் தேவர்களுக்கு அமைகிறது."

    "ஒரு சமயம், மேரு மலையின் சிகரத்தில் அமர்ந்திருந்த பொழுது, தேவர்கள் அனைவரும் - "பிரபு, இரவு பொழுதாகி விட்டது. நாங்கள் செல்லுவதற்கு எங்களுக்கு விடை கொடுங்கள்" என்றனர்.

    அச்சமயம், கருநிறத்தில் மினுக்கும் வெள்ளாடையுடன், கரத்தில் பரசு (கோடாலி) வுடன் ஒரு பெண்மணி என் முன் வந்தாள். என்னை நமஸ்கரித்து, - "பிரபு வராக மூர்த்தி, என் பெயர் ராத்திரி. இராப்பொழுதின் அபிமானியாக இருந்து வருபவள். இந்நேரத்தில் எவ்விதமான மங்கள சுப செயல்களும் நடைபெறுவதில்லை. அசுபமானவள் என்று என்னை எல்லோரும் வெறுத்து ஒதுக்கிறார்கள். இவை எல்லாம் எனக்கு மிகவும் வேதனையையும் வருத்தத்தையும் தருகிறது. இப்படியே உயிர் வாழ்வதில் எந்தவொரு பயனும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இந்த வேதனையையும், வருத்தத்தையும் என்னால் தாங்க முடியவில்லை, அதனால் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அருள்புரிந்தால் மட்டுமே நான் உயிர் வாழ்வேன்" என்று கூறி நின்றாள்.

    தேவர்களும் -" பிரபு! ராத்திரி தேவி தன் மனவருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ தாங்கள் கருணை புரியுங்கள் என்று பிரார்த்தனை செய்தனர்.

    நானும் (ஸ்ரீ வராகரும்) தேவர்களின் பிரார்த்தனையை ஏற்று ராத்திரி தேவிக்கு வரம் அளித்தேன்.

    நான், (ஸ்ரீ வராக மூர்த்தி) ராத்திரி தேவியிடம் - "உன் வருத்தத்தை போக்கி நீ மகிழ்வுடன் வாழ உனக்கு வரமளிக்கிறேன். ஒரு நாளின் இரவுப் பொழுதை மூன்று யாமமாக பிரித்து, (ஒரு யாமம் = இரண்டு மாதம்) அதில் முதல் இரண்டு யாமம் அதாவது 4 மாதங்கள், இனி மேல் எனக்கு பிரியமானதாக ஆகும். இந்த நான்கு மாதங்கள் சாதுர்மாஸ்யம் என்று அழைக்கப்படும். சாதுர்மாஸ்யத்தில் செய்யப்படும் புண்ணிய தர்ம காரியங்கள் நிறைந்த நன்மைகளை அளிக்கும். சிராவணம், பாத்ரபதம், ஆஸ்வீனம், கார்த்திகை ஆகிய நான்கு சாதுர்மாஸ்ய மாதங்களில் நற்செயல்களினால் விளையும் புண்ணியமானது நாளுக்கு நாள் கூடுதல் காணும். இக்காரணத்தினால் தான் கடைசி மாதமான கார்த்திகை அனைத்து விதங்களிலும் மிகுந்த நன்மையளிக்கும் மாதமாக கருதப்படும் " என்று அருளினேன். இதைக் கேட்டு ராத்திரி தேவி மிகுந்த மகிழ்வுடன் தன்னுடைய வந்தனத்தை சமர்ப்பித்து தன் இருப்பிடம் சென்றாள்.

    "ஒ தரணி(பூமா) தேவி, அப்பொழுதிலிருந்து இந்த நான்கு சாதுர்மாஸ்ய மாதங்களும் எனக்கு மிகவும் பிரியமானதாகும். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது, தானம் செய்வது, விரதம் மேற்கொள்ளுவது, ஹோமம், யக்ஞங்களை நடத்துவது, ஜபம் செய்வது போன்ற புண்ணிய தர்ம செயல்களை செய்பவர்களுக்கு நான் மிகுந்த நன்மைகளை அளிக்கிறேன்." என்று அருளினார்.

    சாதுர்மாஸ்யம் பிரபு நாராயணர் யோக நித்ரையில் ஆழ்ந்து போகும் காலமும் ஆகும். யோக நித்திரையில் ஆழ்ந்து போகுதல் என்றால் நாராயணன் மானிடரைப் போல் நித்திரையில் ஆழ்கிறார் என்ற அர்த்தம் அல்ல. தேவர்கள் எல்லோரும் இமைப் போதும் தூங்காமல் இருப்பவர்கள். அப்படியிருக்க, தேவர்களைப் படைத்த இப்பிரபஞ்சத்தின் காவலரான நாராயணர் எப்படி உறங்க முடியும்? ஆகையால் நித்திரையில் ஆழ்வது என்பது கடவுளின் ஒரு திருவிளையாடல் ஆகும்.

    ஸ்ரீதரர், ஹ்ருஷீகேசர், பத்மநாபர் மற்றும் தாமோதரர் என்னும் தன் நான்கு திருவடிவங்களில் பிரபு நாராயணனே சாதுர்மாஸ்ய மாதங்களின் முக்கிய வணங்குதற்குரிய தெய்வமாவார்.

    பக்தியை மேலும் அதிகரித்துக் கொள்ள சாதுர்மாஸ்ய காலம் ஒரு அருமையான வாய்ப்பாவதோடு மோட்சப் பிராப்தி பெறுவதற்கான வழியின் முதல் படியாகவும் அமைகிறது. நம்முடைய சாஸ்திரங்கள் கீழ்க்கண்ட பத்து புண்ணிய தீர்மானங்களை (நியதிகளை) சாதுர்மாஸ்யத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று விதித்து உள்ளது.

    1. Satsanga / சத்சங்கம்
    2. Dvijabhakti / த்விஜ பக்தி
    3. Guru, Deva, Agni Tarpana / குரு, தேவர், அக்னி தர்ப்பணம்
    4. Gopradana / கொப்பரை தானம்
    5. Vedapatha / வேதம் அத்யயனம்
    6. Satkriya / சத் கிரியை
    7. Satyabhashana / சத்ய பாஷனை
    8. Gobhakti / கோ பக்தி அதாவது கோபூஜை
    9. Dana Bhakti / தான பக்தி
    10. Dharma Sadhana / தர்ம சாதனை




    சாதுர்மாஸ்ய புண்யகாலம்
    Last edited by R.Varadarajan; 18-03-14, 20:42.

    Comment


    • #3
      Re: ஸ்ரீ சௌந்தரராஜன் சாரிடமும் ஸ்ரீ நரசிம்&#29

      sri r varadharajan sir,
      thank you so much for your immediately reply
      please give me in case you get more good details
      god bless
      radhakrishnan

      Comment


      • #4
        Re: ஸ்ரீ சௌந்தரராஜன் சாரிடமும் ஸ்ரீ நரசிம்&amp

        Dear Sir,
        I edited my post to include Part-! also. Now it is in two parts. May be too long,but is interesting.
        Hope it replies some of your queries atleast.
        With best wishes,
        varadarajan
        Last edited by R.Varadarajan; 19-03-14, 03:57.

        Comment


        • #5
          Re: ஸ்ரீ சௌந்தரராஜன் சாரிடமும் ஸ்ரீ நரசிம்

          Originally posted by r radhakrishna iyer View Post
          தங்கள் மூவரில் தயவு செய்து யாரேனும் எனக்கு விளக்கம் அளிக்க முன் வர வேண்டும். சதுர்மாஸ்ய புண்ணிய காலம் பற்றியும் அதன் விரதங்களை பற்றியும் அதன் மஹிமை பற்றியும் நான் அறிய விரும்புகிறேன். எனக்கு கடைகளில் புத்தகம் கிடைக்கவில்லை. NETல், விரதம் இருந்தார்கள் என்று சொல்கிறார்களே தவிர மற்ற விளக்கம் எதுவும் கிட்டவில்லை. தாங்கள் மூவர்தான் என் கடைசி முயற்சி. உதவுவீர்களா?
          நன்றியுடன் நமஸ்காரம்
          radhakrishna iyer
          Chaturmasya Importance
          What is Chaturmasya :
          Chaturmasya is an auspicious four-month period starting from Ashadha Shukla Dashami to Kartika Shukla Paurnima. The months of Shravana, Bhadrapada, Ashvina and Kartika fall under this period. These four months are said to be very pleasing to Bhagavan Vishnu. There is an interesting conversation between the Varaha form of Lord Vishnu and Dharani Devi occuring in the Varaha Purana about the significance of this Chaturmasya period. Once Dharani Devi, concerned about the people who take birth in the Kali Yuga who are ignorant, short lived and always afflicted with ailments, approached Lord Varaha and pleaded Him to reveal the method in which even the people of Kali Yuga get great benefits even with very little effort. Sri Varaha smilingly replied – There is a 4 month period in a year known as Chaturmasya wherein any Dana, Vrata, Japa and Homa performed brings forth countless merits. Compared to the noble deeds performed during other months, those performed in these holy months, would no doubt, yield multifold benefits. अस्ति प्रियतमः कालः चातुर्मास्याभिधो मम ।
          दानं व्रतं जपो होमः तत्रानन्तगुणं स्मृतम् ।। वराह 1.16
          मासेष्वन्येषु यत्किञ्चित् क्रियते मम तोषणम् ।
          ततोप्यनन्तगुणितं चातुर्मास्ये न संशयः ।। वराह 1.17
          On hearing this, Dharani Devi asked. O Lord, why among the 12 months only these 4 months are so auspicious?
          To this Lord Varaha replied – In an year, the 6 months beginning from Ashadha are called Dakshinayana. 6 months beginning from Pushya are termed as Uttarayana. This period of one year for human beings is equivalent to 1 whole day(day/night) for the celestials (Devas). Pushya to Ashadha is the day and Ashadha to Pushya is the night for the Devas.
          Once, I was sitting on the top of the Meru mountain. At that time, all the celestials approached and said – “O Lord – currently it is night for us. So, we would take leave of you.
          Then a lady dark in complexion wearing white sparkling clothes holding parashu in her hand came forward, prostrated and spoke to Lord Varaha – O Lord, I am ratri who is the abhimanini of this part of the year. I am sad that during this time, no auspicious events like Marriage etc take place. All people dislike me and term be as be ing inauspicious. There is not point in continuing my life like this. I would like to end my life unable to bear this insult. I can only live if you bless me”.
          All the devas also prayed – “Oh Lord! Kindly show mercy on Ratri whereby she will become happy”.
          Heeding to the prayer of all the Devas Lord Varaha granted boon to Ratri devi.
          Lord Varaha spoke – “Oh Ratri, you have three Yamas(1 Yama = 4th part of night or 2 months). Out of these three yamas the first two yamas (4 months i.e Chaturmasya) would henceforth become dearer to me. Any pious deed performed during these two Yamas (Chaturmasya) brings forth immense merits. Among these four months of Shravana, Bhadrapada, Ashvina, Kartika, the merits accrued would increase day by day. That is the reason why the last Month, Kartika is most beneficial in all respects. Hearing this, Ratri Devi became very happy and returned to her abode".
          Lord Varaha continued - "Oh Dharani, that time onwards, this chaturmasya period became very dear to me. I benevolently grant great merits to anyone who performs noble deeds like Snana, Dana, Vrata, Homa, Japa during this period”.
          Chaturmasya is also a period in which Lord Narayana enters into Yoga-Nidra. This does not mean that Lord Narayana sleeps like us mortals. Even, the demi-gods are called Animishas because they have no sleep. What to speak of Lord Narayana, the creator of all these demi-gods? Therefore, this is to be understood to be just another playful sport of the Almighty.
          The Lord is the presiding deity for all the four months with his Sridhara, Hrishikesha, Padmanabha and Damodara forms respectively.
          This is great opportunity to enhance once spirituality and take a step forward in the direction of Moksha. Our scriptures ordain us to make the following noble ten-fold resolutions during this period.

          Satsanga
          Dvijabhakti
          Guru, Deva, Agni Tarpana
          Gopradana
          Vedapatha
          Satkriya
          Satyabhashana
          Gobhakti
          Dana Bhakti
          Dharma Sadhana


          Anna Dana
          Among the several danas one can perform during this period, anna dana is greatly praised as the most important dana accruing great merits.
          Control of senses
          Any vrata imposes restrictions on the food that can be partaken. This is for us to reduce our dependence on the external material world and realize the inner spiritual power. This is a great way for achieving control of the senses which is a very important factor in a persons spiritual development.
          The four vratas in Chaturmasya
          During the four months period, certain food items are prohibited. The respective vrata is named after the item that is prohibited during the month. So, the names of the four vratas are
          1. Shaka Vrata
          2. Ksheera Vrata
          3. Dadhi Vrata
          4. Dvidala Vrata

          Sankalpa
          Any vrata gives full fruits if performed with proper Sankalpa. The sankalpa for each vrata should be done at the beginning of each month's vrata.
          Shaka Vrata Sankalpa
          (Ashadha Shukla Ekadashi)
          आचम्य, प्राणानायम्य, देशकालादिसंकीर्त्य
          वासुदेव शुचौ मासे शाकव्रतमनुत्तमम् ।
          त्वत्प्रीत्यर्थं करिष्येहं निर्विघ्नं कुरु माधव ।।
          Dadhi Vrata Sankalpa
          (Shravana Shukla Ekadashi)
          संकर्षणारविन्दाक्ष करिष्येहं दधिव्रतं ।
          द्वितीये मासि देवेश निर्विघ्नं कुरु मे प्रभो ।

          Ksheera Vrata Sankalpa
          (Bhadrapada Shukla Ekadashi)
          प्रद्युम्न तव तुष्ट्यर्थं प्रोष्टपद्यां तृतीयके ।
          निर्विघ्नं कुरु देवेश करिष्येहं पयोव्रतम् ।।
          Dvidala Vrata Sankalpa
          (Ashvina Shukla Ekadashi)
          अनिरुद्ध सुरैर्वन्द्य द्विदळव्रतमुत्तमम् ।
          करोम्यहमिषेमासे निर्विघ्नं कुरु मे प्रभो ।।
          Samarpana
          Just as Sankalpa is important at the beginning of the Vrata, Samarpane to Mukhyapranantargata Bhagavan Vishnu should be made for the Vrata to yield proper fruits.
          Shaka Vrata Samarpana
          वासुदेव नमस्तुभ्यं प्रथमे मासि मत्कृतम् ।
          शाकव्रतं मया तेन संतुष्टो भव माधव ।।
          Dadhi Vrata Samarpana
          संकर्षण नमस्तुभ्यं श्रवणे मत्कृतेन च ।
          दधिव्रतेन देवेश तुष्टो भव जनार्दन ।।

          Ksheera Vrata Samarpana
          श्रीप्रद्युम्न नमस्तुभ्यं मासमारभ्य यत्कृतं ।
          इष्टदो भव सर्वेश गृहीत्वा तु पयोव्रतम् ।।

          Dvidala Vrata Samarpana
          अनिरुद्ध नमस्तुभ्यं द्विदळाख्यव्रतेन च ।
          मत्कृतेनाश्विने मासे प्रीत्यर्थं फलदो भव ।।

          Who are eligible to do this Chaturmasya Vrata?

          This Vrata can be performed by one and all. There is no discrimination based on age/gender/caste/ashrama. Brahmanas, Kshatriyas, Vyshyas, Shudras, Women, Grihasthas, Sanyasins are all eligible to undertake this vrata.
          If one does not undertake this vrata due to ignorance or negligence, he would surely thrown into the hell for a long time.
          Shaka Vrata(Ashadha-Shukla-Ekadashi to Shravana-Shukla-Dashami):
          Shaka Vrata, is the first of the four Vratas of Chaturmasya. As the very name indicates, Shaka or any kind of Vegetable and fruit should not be offered to Lord nor should be partaken.
          The following list gives what can be used during this Vrata
          1. All pulses
          2. Jeerige
          3. Oils
          4. Milk/Curds
          The following list gives what is not to be used during this Vrata
          1. All fruits (incl. mango)
          2. All Vegetables
          3. All leafy-vegetables, curry-leaves, kotambri
          4. Lemons
          5. Spices - Cashew, Dry Grapes etc.
          6. Tamarind

          Dadhi Vrata (Shravana-Shukla-Ekadashi to Bhadrapada-Shukla-Dashami)
          In this second Vrata curds/yogurt is disallowed.
          Ksheera vratha (Bhadrapada-Shukla-Ekadashi to Ashvina-Shukla-Dashami)
          Milk and all its derivatives are disallowed,
          Dvidala vratha (Ashvina-Shukla-Ekadashi to Kartika-Shukla-Dashami)

          All pulses, which have two halves like channa, toor, masoor, urad, groundnuts are disallowed..
          Last edited by bmbcAdmin; 19-03-14, 13:39.

          Comment


          • #6
            Re: ஸ்ரீ சௌந்தரராஜன் சாரிடமும் ஸ்ரீ நரசிம்&#29

            Originally posted by r radhakrishna iyer View Post
            தங்கள் மூவரில் தயவு செய்து யாரேனும் எனக்கு விளக்கம் அளிக்க முன் வர வேண்டும். சதுர்மாஸ்ய புண்ணிய காலம் பற்றியும் அதன் விரதங்களை பற்றியும் அதன் மஹிமை பற்றியும் நான் அறிய விரும்புகிறேன். எனக்கு கடைகளில் புத்தகம் கிடைக்கவில்லை. NETல், விரதம் இருந்தார்கள் என்று சொல்கிறார்களே தவிர மற்ற விளக்கம் எதுவும் கிட்டவில்லை. தாங்கள் மூவர்தான் என் கடைசி முயற்சி. உதவுவீர்களா?
            நன்றியுடன் நமஸ்காரம்
            radhakrishna iyer

            Comment


            • #7
              Re: ஸ்ரீ சௌந்தரராஜன் சாரிடமும் ஸ்ரீ நரசிம்&#29

              ஸ்ரீ பி எம் பி சி சார்,

              ஸ்ரீராதாகிருஷ்ணாஐயர் சாருக்கு அளித்த பதிலில் ரிப்ளை வித் கோட் செய்தி மட்டும் வந்த்ருக்கிறது ஆனால் எனது பதில் பதிவாக வில்லை கோ அட்வான்ஸ்டில் சென்று பார்த்தபோது இருந்தது போஸ்ட் செய்தபின் வரவில்லையே

              Comment


              • #8
                Re: ஸ்ரீ சௌந்தரராஜன் சாரிடமும் ஸ்ரீ நரசிம்&#29

                Sri RV Sir Splendid job.

                Comment


                • #9
                  Re: ஸ்ரீ சௌந்தரராஜன் சாரிடமும் ஸ்ரீ நரசிம்&amp

                  சாதுர்மாஸ்ய விரத விதானம்.
                  ஸ்ரீமான் ராதாகிருஷ்ண அய்யர் அவர்களுக்கு. தங்களுக்கு ஸ்ரீ வரதராஜஸ்வாமி மற்றும் சௌந்தரராஜ ஸ்வாமி அவர்களும் விரிவான பதிலில் விவரித்துஇருக்கிரார்கள். மேலும் எனக்கு தெரிந்து ஸ்ரீ என்.வி.எஸ்
                  அவர்களும் ஸ்ரீ கோபாலன் ஸ்வாமி அவர்களும் ஒரு முறை போஸ்ட் செய்து இருக்கிரார்கள் என்று நினைக்கிரேன். எப்படியும் தங்களுக்கு தேவையான விபரம் கிடைத்துவிட்டது. மிக்க மகிழ்ச்சி.

                  Comment


                  • #10
                    Re: ஸ்ரீ சௌந்தரராஜன் சாரிடமும் ஸ்ரீ நரசிம்&amp

                    sri varadharajan sir,
                    thanks a ton for you all goodselves, all my addressees and those replied me
                    plus also please advise me how to copy your writing and keeping elsewhere for my frequent reference instead of opening the internet often
                    i am trying and getting failed........
                    radhakrishnan

                    Comment


                    • #11
                      Re: ஸ்ரீ சௌந்தரராஜன் சாரிடமும் ஸ்ரீ நரசிம்&amp

                      Originally posted by soundararajan50 View Post
                      ஸ்ரீ பி எம் பி சி சார்,

                      ஸ்ரீராதாகிருஷ்ணாஐயர் சாருக்கு அளித்த பதிலில் ரிப்ளை வித் கோட் செய்தி மட்டும் வந்த்ருக்கிறது ஆனால் எனது பதில் பதிவாக வில்லை கோ அட்வான்ஸ்டில் சென்று பார்த்தபோது இருந்தது போஸ்ட் செய்தபின் வரவில்லையே
                      Sri:
                      You have pasted some matter from some other site.
                      The matter was within a table.
                      Table and its elements are of html markup language which will not work in forum as it is.
                      Because forum is having some other attributes for defining a table.

                      So, you have to copy and paste any content within a table to be first pasted in the Notepad to remove table tags
                      then you can copy from there and paste in our forum.
                      regs,
                      Admin


                      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                      Encourage your friends to become member of this forum.
                      Best Wishes and Best Regards,
                      Dr.NVS

                      Comment


                      • #12
                        Re: ஸ்ரீ சௌந்தரராஜன் சாரிடமும் ஸ்ரீ நரசிம்&amp

                        Originally posted by r radhakrishna iyer View Post
                        sri varadharajan sir,
                        thanks a ton for you all goodselves, all my addressees and those replied me
                        plus also please advise me how to copy your writing and keeping elsewhere for my frequent reference instead of opening the internet often
                        i am trying and getting failed........
                        radhakrishnan
                        Dear Sir,
                        Keep the mouse pointer and right click on the post you want to save, select the option save page as, another window will open in which heading of the subject matter you want to save will present ,to that right there will be a small box with a word save click it .The required post would get downloaded.

                        Comment

                        Working...
                        X