Announcement

Collapse
No announcement yet.

தர்மம் தலைகாக்கும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தர்மம் தலைகாக்கும்


    .

    ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் நல்ல மனசு நாடுகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கின்றன . அடுத்து வருவது கனடா , அயர்லாந்து . முதலாவதில் 57 % மக்களும் இரண்டாவதில் 56 % மக்களும் கடந்த ஒரு மாதத்தில் பலருக்கு பல தடவை உதவி செய்திருக்கிறார்கள் . பணம் கொடுத்திருக்கிறார்கள் . இந்தியாவுக்கு 134 வது இடம் என்பது அநியாயமாக தெரிகிறது . திருவோட்டிலும் தீபாராதனை தட்டிலும் காசு போடுவது இந்த கணக்கில் சேராது போலிருக்கிறது . பாகிஸ்தான் ஸ்கோர் 142 , சீனா 147 என்பது புண்பட்ட மனதுக்கு ஆறுதலாகலாம்

    .
    பணம் கொடுப்பது, நேரம் ஒதுக்குவது, முன் பின் தெரியாத எவருக்கேனும் உதவுவது -- இப்படி மூன்று ரகமாக தயாள குணத்துக்கு இலக்கணம் வகுத்திருந்தது கேள்வித்தாள் .
    தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர்காக்கும் என்ற நம்பிக்கை உள்ளது நமது நாடு . மெடிகிளெய்ம், ஆயுள் இன்சூரன்ஸ் என்று பாழாக்காமல் தர்மத்தில் முதலீடு செய்பவர்கள் அதிகம் . அப்படிப்பட்ட நமக்கா இத்தனை மோசமான மதிப்பெண் என்று ஆச்சர்யமாக இருக்கிறது

    .
     வறுமையில் வாடும் சியராலோன், லைபீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் 11 வது , 39 வது ரேங்க் எடுத்திருப்பதை பார்க்கும்போது இன்னும் வெட்கமாக இருக்கிறது . ஸ்ரீலங்காவுக்கு எட்டாமிடம் . இவர்களிடம் பணம் இல்லை; ஆனால் உதவும் மனம் இருக்கிறது . தங்கள் நேரத்தையும் உழைப்பையும் தானமாக வழங்குவதில் தாராளமாக இருக்கின்றனர் என்கிறது சர்வே 
    .
    ஆயில் கொழிக்கும் அரபுநாடுகளும் எதற்கோ அள்ளிவிடுகின்றன, இதற்கில்லை . இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்று எந்த நாடும் சட்டம் இயற்றவில்லை . அது ஒரு கலாசாரம்
    .
    --- தினகரன் தலையங்கம் , செப்டம்பர் 10 , 2010 வெள்ளிக்கிழமை
Working...
X