சப்தஸ்வரங்களின் சாவி

information

Information

மங்கள இசை என்று அழைக்கப்படும் நாதஸ்வரம் வாசிக்க 2 முக்கியமான அம்சங்கள் தேவை . அதில் ஒன்று நதஸ்வரத்தில் 7 விதமான ராகங்கள் ( சப்தஸ்வரம் ) வெளிப்படுத்தக் கூடிய துவாரங்கள் . மற்றொன்று நாதஸ்வர வித்வான் வாசிக்க பயன்படுத்தப்படுத்தும் சீவாளி
முற்றிய தட்டைகளை அறுவடை செய்து கொண்டு வந்து தோகைகளை நீக்கிவிட்டு தட்டையை மட்டும் காய வைக்கின்றனர் . பின்னர் , தேவையான அளவில் சிறிது சிறிதாக வெட்டி உலர்த்தி , தண்ணீரில் நனைத்து அதற்குரிய இயந்திரத்தை கொண்டு பக்குவப்படுத்தி நுணுக்கமாக தயாரிக்கின்றனர் .
சீவாளி இறுக்கமாக இருப்பதற்கு செம்பிலான நீள உருண்டை தயாரித்து அதற்குள் பொருத்தி , நூலால் இணைத்து தயாரிக்கின்றனர் . ஒரு மாதத்திற்கு 500 சிவாளிகள் தயாரிக்கப்படுகின்றன .
தமிழகத்தில் திருவாவடுதுறை , பண்ருட்டி , திருவீழிமிழலை ஆகிய 3 இடங்களில் மட்டும் தான் நாதஸ்வரத்திற்கான சீவாளி தயரிக்கப்படுகிறது


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஒரு டன் ரூபாய் ஆயிரம் வரை விற்கப்படுகிறது . சீவாளி செருக பயன்படுத்தும் செப்பி குழலை முன்பு நாங்களே தயாரித்தோம் . இப்போது வேலை அதிகமாகி விட்டதால் மற்றவர்களிடமிருந்து வாங்குகிறோம்


சராசரியாக 6 மாதம்தான் சீவாளி பயன்படும் என்பதால் அடிக்கடி நாதஸ்வர கலைஞர்கள் வாங்குகின்றனர் . கோடை காலத்தில் அறுவடை செய்து , நெல்லுடன் சேர்த்து அவித்து , நீராகாரத்தில் (சாதம் ஊற வைத்த தண்ணீர் தான் ) ஊறவைத்து , கிட்டி பனையில் சொருகி , நெருக்கி கட்டி முடிச்சு போட்டால் சீவாளி ரெடி

--- முத்துராமன் , சீவாளி தயாரிப்பாளர் . திருவாவடுதுறை . தினமலர் , 18 - 05 - 2009 .